உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோடிகளில் சுருட்டுவதே திராவிட மாடல் ஆட்சி

கோடிகளில் சுருட்டுவதே திராவிட மாடல் ஆட்சி

மாமல்லபுரத்தில் தி.மு.க., நிர்வாகிகளிடம் பேசிய முதல்வர் ஸ்டாலின், வழக்கம்போல, மத்திய அரசு மற்றும் பா.ஜ., மீது வன்மத்தை கக்கி உள்ளார். ஜி.எஸ்.டி., புதிய கல்விக் கொள்கை, 'நீட்' என, மத்திய அரசு தொல்லை கொடுப்பதாக, வெறுப்பு அரசியலை அரங்கேற்றி இருக்கிறார். தமிழகத்தில் கடந்த நான்கரை ஆண்டுகளில், ஊட்டச்சத்து முதல் 'டாஸ்மாக்' வரை, பல கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது. 'பி.எம்., ஸ்ரீ' திட்டத்தை, கம்யூனிஸ்ட் ஆளும் கேரளா கூட, ஏற்று அமல்படுத்த முன்வந்துள்ளது. ஆனால், தமிழகத்தில் செயல்படுத்தக்கூடாது என, ஸ்டாலின் விடாப்பிடியாக இருக்கிறார். சொந்த குடும்பம் குதுாகலமாக வாழ்ந்தால் போதும், தமிழக மக்கள் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை என எண்ணும் தி.மு.க.,வினரிடம், மக்கள் நலனை எப்படி எதிர்பார்க்க முடியும். கொள்ளை அடித்து, பல லட்சம் கோடி ரூபாயை சுருட்டுவது தான் திருட்டு திராவிட மாடல் ஆட்சி. - முருகன் மத்திய அமைச்சர், பா.ஜ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

N S
அக் 30, 2025 12:17

இந்த நல்லாட்சியில் "கோடிகள் குவிந்தாலும் அப்பாவை நான் மறவேன்" என்பது ஒவ்வொரு உடன்பிறப்பின் குரல்.


என்னத்த சொல்ல
அக் 30, 2025 11:42

நீங்களும் இப்படியே 4.5 வருசமா டாஸ்மாக் ல ஊழல், அதில ஊழல் இதில ஊழல் சொல்லிகிட்டே தான் இருக்கீங்க. நடவடிக்கை எடுக்க வேண்டிய இடத்தில் யார் இருக்கானு சொல்லுங்க? அப்படி நடவடிக்கை எடுக்க முடியாதென்றால், அமைச்சரா இருந்துட்டு, இப்படி போது வழியில் சொல்வதை நிறுத்திக்கொண்டாள் ஆளும் மத்திய அமைச்சருக்கு அழகு.


sundarsvpr
அக் 30, 2025 11:09

பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய நிர்வாகி முருகன். திராவிட முன்னேற்ற கட்சியின் ஊழலை பற்றி பேசலாம். ஆனால் மத்திய அமைச்சர் என்ற கோதாவில் ஊழலை பற்றி குற்றம் கூறினால் ஆதாரம் இருந்தால் ஏன் நடவடிக்கை இயலவில்லை என்பதையும் கூறவேண்டும். சாமர்த்தியமாக ஊழல்கள் செய்வதால் மக்களுக்கு தெரியவில்லை. மத்தியில் உள்ள அரசுக்கும் நடவடிக்கை எடுத்திட இயலவில்லை.


s. mani, Kovai.
அக் 30, 2025 09:34

ஊழல் ஊழல் என்று மத்ய மந்திரி சொல்கிறார்..சரிதான்.. நடவடிக்கை என்ன?


தலைவன்
அக் 30, 2025 13:45

திண்ணையில கிடந்தவனுக்கு திடும்னு கல்யாணமாம். இவரால் இவர் சமூகத்திற்கும் ஏன் பதவி கொடுத்த கட்சிக்கும் கூட அம்மன் சல்லிக்கு கூட பிரயோசனமில்லே?? வாழ்க சாதி இட ஒதிக்கீடு அரசியல்.


சமீபத்திய செய்தி