உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தேர்தல் பணி ஊதியம் கிடைக்கல அதிகாரிகளின் டிரைவர்கள் புகார்

தேர்தல் பணி ஊதியம் கிடைக்கல அதிகாரிகளின் டிரைவர்கள் புகார்

அரசு அதிகாரிகளின் வாகன ஓட்டுநர்களுக்கு, 2024 தேர்தலின் போது கூடுதல் நேரம் பணியாற்றியதற்கான ஊதியம் இதுவரை வழங்கப்படவில்லை.தமிழகம் முழுதும் அரசுத்துறை அதிகாரிகளின் வாகன ஓட்டுநர்களாக 5,000 பேர் உள்ளனர். இவர்கள் தேர்தல் காலங்களில் பறக்கும் படை துவங்கி, பல்வேறு பணிகளுக்கு வாகன ஓட்டுநர்களாக செல்வர். கூடுதல் நேர பணிக்கான ஊதியம், தேர்தல் முடிந்த ஓரிரு மாதங்களில் வழங்கப்படுவது வழக்கம். கடந்த, 2024 லோக்சபா தேர்தலின் போது கூடுதல் நேரம் பணிகளில் ஈடுபட்டனர். அதற்கான ஊதியம் ஓராண்டாக வழங்கப்படவில்லை.அவர்கள் கூறியதாவது:உதவி அலுவலர் துவங்கி தேர்தல் நேரங்களில் பணியாற்றுவோருக்கு, வழங்கும் ஊதியத்தில், 50 சதவீதம் பணித்தொகையாக வழங்கப்படுகிறது. எங்களுக்கு ஒரு நாளைக்கு, 180 - 280 ரூபாய் வழங்கப்படும். கடந்த தேர்தல்களில் ஓரிரு தினங்களில் வழங்கப்பட்டது. பின், மொத்தமாக கணக்கிட்டு ஒரு மாதம் கழித்து வழங்கப்பட்டது. தற்போது தேர்தல் முடிந்து ஓராண்டாகியும் வழங்கவில்லை.இவ்வாறு அவர்கள் கூறினர். - -- நமது நிருபர்-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை