டி.ஆர்.ஓ., பொறுப்பேற்பு
விழுப்புரம்: விழுப்புரம் டி.ஆர்.ஓ.,வாக, அரிதாஸ் பொறுப்பேற்றார்.விழுப்புரம் மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி கடந்த மாதம், விடுமுறையில் சென்றார். பெரியசெவலை கூட்டுறவு சர்க்கரை ஆலையின் தனி அலுவலர் முத்துமீனாட்சி (பொறுப்பு) அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டார்.இந்நிலையில், விழுப்புரம் டி.ஆர்.ஓ., வாக சென்னை டிட்கோ பொது மேலாளர் அரிதாஸ் நியமிக்கப்பட்டார். அவர் நேற்று மாலை விழுப்புரம் மாவட்ட வருவாய் அதிகாரியாக பொறுப்பேற்றார். தொடர்ந்து கலெக்டரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.