உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / போதைப்பொருள் விவகாரம்: நடிகர் கிருஷ்ணாவிடம் விசாரணை

போதைப்பொருள் விவகாரம்: நடிகர் கிருஷ்ணாவிடம் விசாரணை

சென்னை: போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக நடிகர் கிருஷ்ணாவிடம் ஆயிரம் விளக்கு போலீஸ் ஸ்டேசனில் விசாரணை நடந்து வருகிறது.போதைப்பொருள் விநியோகித்ததாக பிரதீப் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் அளித்த தகவலின் பேரில், நடிகர் ஸ்ரீகாந்த்(46) கைது செய்யப்பட்டார். அவர் போதைப்பொருளான கோகைன் பயன்படுத்தியது மற்றும் வீட்டில் பதுக்கி வைத்திருந்ததாக குற்றம்சாட்டப்பட்டது ஸ்ரீகாந்த் புழல் மத்திய சிறையில் முதல் வகுப்பு அறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தில் நடிகர் கிருஷ்ணாவுக்கும் தொடர்பு உள்ளதாக தகவல் வெளியானது. இதனையடுத்து அவருக்கு போலீசார் சம்மன் அனுப்பினர். அதற்கு அவர் ஆஜராகாத காரணத்தினால், அவரை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து இருந்தனர்.இந்நிலையில், கேரளாவில் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய கிருஷ்ணா, வழக்கறிஞர் குழுவுடன் போலீசார் முன்பு ஆஜரானார். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பிரதீப் உடனான உறவு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் விசாரணை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ramesh Sargam
ஜூன் 25, 2025 22:18

திரைப்படத்துறையில் உள்ள 99 சதவிகிதத்தினர் போதைப்பொருள் பயன்படுத்துபவர்களாகத்தான் இருக்கின்றனர் போலும். அதேபோல டிவி சீரியல் துறையில் பணிபுரிபவர்களுக்கும் அந்த பழக்க இருக்கும். போதைப்பொருளை தவிர மற்ற பல பழக்கங்களும் இருக்கும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை