உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / போதைப்பொருள் விவகாரம்: நடிகர்களை அடுத்து சிக்கும் உதவி இயக்குநர்கள்

போதைப்பொருள் விவகாரம்: நடிகர்களை அடுத்து சிக்கும் உதவி இயக்குநர்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சினிமா இயக்குநர்கள் மற்றும் உதவி இயக்குநர்களுக்கும் 'கோகைன்' விற்றுள்ளதாக, கைதான போதைப்பொருள் 'டீலர்' கெவின் வாக்குமூலம் அளித்துள்ளார்.

சமூக வலைதளம்

சர்வதேச போதைப்பொருள் டீலரான, சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த கெவின், 47, மற்றும் நடிகர் கிருஷ்ணா, 47, ஆகியோர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர்.போலீசாரிடம் கெவின் அளித்துள்ள வாக்குமூலம்: என் முழு நேர தொழிலே, கோகைன், மெத் ஆம்பெட்டமைன், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பது தான். எனக்கு ஜெஸ்வீர் என்ற பெயரும் உண்டு. கோலிவுட் பிரபலங்கள், 'பவுடர் ஜெஸ்வீர்' என்றே அழைப்பர். என் வாடிக்கையாளர்களில் நடிகர் - நடிகையரை விட, சினிமா பட இயக்குநர்கள், உதவி இயக்குநர்களே அதிகம். கோகைன், ஹெராயின், மெத் ஆம்பெட்டமைன் உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்க, சமூக வலைதளமான வாட்ஸாப், டெலிகிராமில் குழு துவக்கி நடத்தி வந்தேன்.

பார்ட்டி

நடிகர் - நடிகையர் பிறந்த நாள் பார்ட்டி, படங்களின் வெற்றி விழா கொண்டாட்டம் மற்றும் தனிப்பட்ட ரீதியாக சினிமா பிரபலங்கள் அளிக்கும் பார்ட்டிகளுக்கும் போதைப் பொருள் வினியோகம் செய்து வந்தேன்.என் நெருங்கிய நண்பரான நடிகர் கிருஷ்ணா அடிக்கடி தன் நண்பர்களுக்கு பார்ட்டி வைப்பார். வாட்ஸாப் குழுவில், பார்ட்டி நடக்கும் இடம் மற்றும் நேரம் குறித்து தெரிவிப்பார். இரவு நேர துாக்கம் தொலைத்து பணிபுரியும் மென்பொருள் நிறுவன ஊழியர்களும், கோகைன் அதிகளவில் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். மருத்துவக் கல்லுாரி மாணவர்களுக்கும் கோகைன் விற்றுள்ளேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.வாட்ஸாப் குழுகெவின் மற்றும் கிருஷ்ணா ஆகியோர் துவங்கிய வாட்ஸாப் குழுவில் இடம் பெற்ற நடிகர் - நடிகையருக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அந்த குழுவில் இருந்த எல்லாரையும் விசாரணைக்கு ஆஜர்படுத்த, போலீசார் முடிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

ஆரூர் ரங்
ஜூன் 28, 2025 10:57

மொத்த விற்பனையாளர் சாதிக் அமீர் வழக்கை மறக்கடிக்க சூப்பர் வழி?


Kasimani Baskaran
ஜூன் 28, 2025 09:14

நடிகைகளுக்கு இதற்கும் சிறிது கூட சம்பந்தம் கிடையாது. லூயிஸ் வர்ட்டன் பையுடன் வெகுமதியுடன் சேர்த்து போட்டுக் கொடுத்தால் வாங்கிக்கொள்வார்கள்.


திகழ்ஓவியன்
ஜூன் 28, 2025 08:29

இது எங்கு எங்கோ நீளுகிறது என்று தெரிகிறது , ஜனநாயக காவலர் கூட சிக்க வாய்ப்பு உண்டு என்கிறார்கள் , அரசியல் பிரவேசம் கேள்விக்குறி தானோ


srinivasan
ஜூன் 28, 2025 06:41

இது எப்படி இருக்கிறது என்றால் மது குடிப்பவர்களை கைது செய்வோம் விற்பவர்களையும் தயாரிப்பவர்களையும் ஒன்றும் செய்ய மாட்டோம் என்பது போல் இருக்கிறது.


திகழ்ஓவியன்
ஜூன் 28, 2025 08:27

குஜராத்தில் உள்ள முந்திர போர்ட் மீது நடவடிக்கை எடுக்க சொல்லுங்க எல்லாமே நின்றுவிடும் என்று தனியார் மயம் அந்த துறைமுகம் ஆனதோ அன்றில் இருந்து தான் இந்த நிலை அதுவும் மோடி ஆட்சி க்கு வந்த பிறகு தான்


karupanasamy
ஜூன் 28, 2025 06:19

உற்பத்தியாளர் மற்றும் தொழிற்சாலை உரிமையாளர் அமீரு பற்றி ஏன் எந்த ஊடகமும் பேசுவதில்லை? மக்கள் வெளியில் சொல்லுவது போல் அமீரு பற்றி செய்தி வெளியிட்டால் ஐஎஸ் ஐஎஸ் மற்றும் இசுலாமிய பயங்கரவாதிகள் கொலைமிரட்டல் விடுக்கிறது என்று அது உண்மையா?


Mani . V
ஜூன் 28, 2025 04:19

ஆனால், விற்பனை செய்பவர்களை ஒன்றுமே செய்ய மாட்டீர்கள். அப்படித்தானே "அப்பா", "சார்"?


SUBBU,MADURAI
ஜூன் 28, 2025 03:40

நடிகர்கள் உதவி இயக்குனர்கள் இவர்களெல்லாம் அந்த போதை பொருளை பயன் படுத்தியவர்களே சொல்லப் போனால் இவர்கள் நுகர்வோர்கள் மட்டுமே இந்த மெத்தபெட்டமைன் மற்றும் கோகைன் போன்ற போதை வஸ்துகளை இவர்களுக்கு விற்றவர்கள் யார் அதை அவர்கள் யாரிடம் வாங்கினார்கள்? இதற்கு பின்னணியில் இருக்கும் அரசியல்வாதிகள் எப்போது சிக்குவார்கள் அதற்கு இந்த திராவிட மாடல் அரசிடம் பதில் உண்டா? அரசியல்வாதிகளின் பின்புலம் அவர்களின் ஆசி இல்லாமல் தமிழகத்தில் இது போன்ற போதைப் பொருள் புழக்கம் என்பது சாத்தியம் இல்லாதது. எனவே இது போன்ற சின்ன மீன்களை பிடித்து கணக்கு காண்பித்து இந்த வழக்கை ஊத்தி மூடாமல் இதன் மூல காரணமாக விளங்கும் திமிங்கலங்களை பிடித்து அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி கடும் தண்டனை வாங்கித்தர தமிழக காவல்துறை முனைந்து செயல்பட வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை