உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / போதைப்பொருள் நடமாட்டத்தால் குற்றச்செயல் அதிகரிப்பு: அன்புமணி

போதைப்பொருள் நடமாட்டத்தால் குற்றச்செயல் அதிகரிப்பு: அன்புமணி

சென்னை: தமிழகத்தில் போதைப்பொருள்கள் நடமாட்டம் அதிகரித்திருப்பதால் தான் குற்றச்செயல்கள் பெருகுகிறது என்று பாமக தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.அவரது அறிக்கை:திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கத்தில் கடந்த ஜூலை 12-ஆம் நாள் நான்காம் வகுப்பு பயிலும் 8 வயது மாணவி கொடிய முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த குற்றவாளி ராஜு பிஸ்வகர்மாவுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் ரூ. 2 லட்சம் தண்டமும் விதித்து திருவள்ளூர் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது வரவேற்கத்தக்கது. குற்றவாளி தண்டிக்கப்படுவதற்கு பங்களித்த அனைவருக்கும் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.பெண்களும், குழந்தைகளும் பாதுகாப்பாக நடமாடுவதை ஆட்சியாளர்கள் உறுதி செய்ய வேண்டும். சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக தண்டிக்கப்பட்டிருக்கும் குற்றவாளி அசாமிலிருந்து ஆந்திரா சென்று அங்குள்ள தொடர்வண்டி நிலையத்தில் உள்ள கடையில் பணி செய்து வந்திருக்கிறார். வார இறுதி நாள்களில் தமிழ்நாட்டுக்கு வந்து கஞ்சா புகைப்பதையும் குற்றச்செயல்களில் ஈடுபடுவதையும் வாடிக்கையாகக் கொண்டிருந்திருக்கிறார். தமிழ்நாட்டில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்களின் நடமாட்டம் அதிகரித்திருப்பது தான் இத்தகைய குற்றச்செயல்கள் பெருகுவதற்கு காரணம் ஆகும். இத்தகைய குற்றங்களைத் தடுக்க தமிழ்நாட்டில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களை அடியோடு ஒழிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அன்புமணி அறிக்கையில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை