உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கடலில் கார் ஓட்டிய போதை ஆசாமிகள் : கயிறு கட்டி கரை சேர்த்தனர் மீனவர்கள்

கடலில் கார் ஓட்டிய போதை ஆசாமிகள் : கயிறு கட்டி கரை சேர்த்தனர் மீனவர்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கடலுார்:கடலுார் அருகே கடலில் காரை ஓட்டி விஷப்பரீட்சையில் இறங்கிய போதை ஆசாமிகளை, மீனவர்கள் உயிருடன் மீட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.சென்னையில் இருந்து நேற்று முன்தினம் இரவு, இரண்டு பெண்கள் உள்ளிட்ட ஐந்து பேர், 'மஹிந்திரா சைலோ' காரில், கிழக்கு கடற்கரை சாலை வழியாக கடலுார் வந்தனர். காரில் இருந்த மூன்று பேர் மதுபோதையில் இருந்தனர். கடலுார் முதுநகர் அடுத்த சொத்திக்குப்பம் கடற்கரையில் அதிகாலை, 3:00 மணியளவில் காரில் சென்றனர்.அப்போது, போதை ஆசாமி ஒருவர், 'நம்ம கார் 4 வீல் டிரைவ் மெக்கானிசம்... மணற்பரப்பிலும் ஓடும்' என்று கூற, போதையில் உடன் இருந்தவர்கள், உடனே கடற்கரை மணற்பரப்பில் காரை ஓட்டி சென்றனர். காரில் இருந்த மற்றொரு போதை ஆசாமி, 'இந்த கார் மணற்பரப்பில் மட்டுமின்றி, தண்ணீரிலும் செல்லும்' என, கூறினார்.இதை மற்றொருவர் மறுத்ததால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.அப்போது, காரை தண்ணீரில் இறக்கி சோதனை ஓட்டம் ஓட்டி பார்த்து விட வேண்டியது தான் என்ற முடிவுக்கு வந்தவர்கள், சொத்திக்குப்பம் அருகே காரை அருகில் உள்ள கடலில் இறக்கி விஷப்பரீட்சையில் ஈடுபட்டனர்.கார் கடலில் சில அடி துாரம் சென்றதும் இன்ஜின் ஆப் ஆனது. அலையின் வேகத்தில் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டது. அதிகாலை நேரம் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல கடற்கரையில் மீன் வலைகளை தயார் செய்து கொண்டிருந்தனர். அப்போது, கார் கடலில் தத்தளிப்பதை பார்த்து, அவசரமாக ஓடிவந்து, உள்ளே சிக்கியவர்களை மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.அவர்களில் ஒருவருக்கு மயக்கம் ஏற்பட்டது. தொடர்ந்து, கடலில் இருந்த காரை டிராக்டரில் கயிறு கட்டி இழுத்து கரை சேர்த்தனர். தகவலறிந்த தேவனாம்பட்டினம் போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இச்சம்பவம் குறித்து புகார் ஏதும் வராததால் போதை ஆசாமிகளை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Padmasridharan
செப் 13, 2025 08:34

பணம் வாங்கி கொண்டு அனுப்பி வைத்திருப்பார்கள் சாமி, எச்சரித்து மட்டுமல்ல. புகார் வந்தால்தான் காவலர்கள் விசாரணை செய்வார்களென்றால், ஏன் கடற்கரை போனற பொது இடங்களில் இருக்கும் இளைஞர்களை மிரட்டி, அதட்டி விசாரணை என்ற பெயரில் அவர்களின் தனி உரிமையில் தலையிடுகின்றனர்.


vee srikanth
செப் 12, 2025 12:26

கேஸ் போடமாட்டாங்களா


venugopal s
செப் 12, 2025 11:35

இது போன்ற திமிர் பிடித்த மூடர்களை காப்பாற்றியது அந்த மீனவர்கள் செய்த தவறு, சனியன்கள் சாகட்டும் என்று விட்டு இருக்க வேண்டும்!


Vasan
செப் 12, 2025 10:02

கப்பலோட்டிய தமிழன். மன்னிக்கவும். கடலில் காரோட்டிய தமிழன்.


theruvasagan
செப் 12, 2025 09:55

வெள்ளையர் ஆட்சியில் கடலில் கப்பலோட்டியவன் சுதந்திர போராட்ட வீரத்தமிழன். விடியல் ஆட்சியில் போதையில் கடலில் காரை ஓட்டியவன் டாஸ்மாக் போதை டம்ளன்.


Sun
செப் 12, 2025 09:45

அப்பாவோட விடியல் ஆட்சில போதையில கடல்ல மட்டும் கார் ஓட்டல. அவனவன் ப்ளைட் இல்லாமலே ரோட்டில ப்ளைட் ஓட்டிட்டு இருக்கான். அப்பா சொல்றேன் போதையின் பாதையில போகாதீங்க என்பதெல்லாம் வெறும் விளம்பர அளவில்தான்.


Kjp
செப் 12, 2025 09:26

இதையெல்லாம் தமிழக முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள். எதற்கெடுத்தாலும் தமிழகம் முதலிடம் தமிழகம் முதலிடம் என்று பீலா விட்டுக் கொண்டிருக்கிறார்.


Kalyanaraman
செப் 12, 2025 08:54

நல்லா இருக்கிறவன் கிட்டையே பணம் புடுங்குற போலீசு போதையில் கடலில் காரை இறக்கி இருக்கானா சும்மா இருந்திருப்பார்களா? எவ்வளவு உருவ முடியுமோ உருவி விட்டுத் தான் அனுப்பி இருப்பாங்க.


KOVAIKARAN
செப் 12, 2025 07:33

எல்லாம் அரசு சாராயம் செய்யும் விஷம வேலை. அங்கு அந்த நேரத்தில் மீனவர்கள் வராமல் இருந்திருந்தால், இந்நேரம், அவர்கள் காருக்குள்ளேயே மூழ்கி இறந்து கடலில் ஆழத்தில், காருடன் ஜல சமாதி அடைந்திருப்பார்கள். இந்த செய்தியைப் பார்த்தபின்பாவது குடித்து விட்டு கார் ஓட்டுவதை நிறுத்துவர்களா? குடித்து விட்டு கார் ஓட்டினதற்காக போலீசார் ஏன் அவர்கள் மீது வழக்குப்பதிந்து சிறையில் தள்ளாமல், வெறுமனே விசாரித்து அனுப்பிவிட்டார்கள்? அந்த காரில் பயணித்தவர்கள் இரண்டு பெண்கள் உட்பட யார் அவர்கள்? எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்ற விபரம் எதையும் போலீசார் கூறவில்லையா?


பிரேம்ஜி
செப் 12, 2025 07:22

அப்படியே கடலில் விட்டிருந்தால் பூமிக்கு பாரம் குறைந்திருக்கும்! மீனவர்கள் தவறு செய்து விட்டனர்!


புதிய வீடியோ