உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உயிருக்கு ஆபத்து: டி.எஸ்.பி. சுந்தரேசன் கண்ணீர்

உயிருக்கு ஆபத்து: டி.எஸ்.பி. சுந்தரேசன் கண்ணீர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மயிலாடுதுறை; எனது உயிருக்கு ஆபத்து உள்ளது என மதுவிலக்கு டி.எஸ்.பி., சுந்தரேசன் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். மயிலாடுதுறை மதுவிலக்கு டி.எஸ்.பி., சுந்தரேசன் இன்று காலை அலுவலகம் செல்லும் வழியில் நிருபர்கள் அவரை மறித்து அவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு சுந்தரேசன் அளித்த பதில்கள் வருமாறு; https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=gcukgj4s&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0என் மீது முந்தைய காலங்களில் நடந்த பல குற்றச்சாட்டுகளை முன் வைக்கிறார்கள். அப்போது நான் தவறு செய்து இருந்தால் என்னை சஸ்பெண்ட் செய்திருக்க வேண்டும். ஆனால் என்னை டிரான்ஸ்பர் செய்கிறார்கள்.ஒருவரை பிடிக்கவில்லை என்றால் கை பட்டால் குற்றம் கால் பட்டால் குற்றம் . இதுதான் காவலர்களின் நிலை.ஒரு ஒரு வருடத்திற்கும் ஒரு ஊதிய உயர்வு உண்டு. எனது ஒன்பது ஊதிய உயர்வை தடுக்கின்றனர்.நான் நேர்மையான அதிகாரி. பல பிரச்னைகளை சந்தித்துள்ளேன். போலீசார் நேர்மையான அதிகாரிகளை விட மாட்டார்கள் குற்றச்சாட்டுகளை வைக்கத்தான் செய்வார்கள். என் மீது பாலியல் உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகளை சொல்கிறார்கள். ஆனால் தற்போது வரை ஏன் என்னை சஸ்பெண்ட் செய்யவில்லை.கடந்த 11 மாதமாக இரவு பகலாக நேர்மையாக வேலை செய்து வருகிறேன்.தன்னை விசாரிக்காமல் எப்படி டி.ஐ.ஜி., சஸ்பென்ட் செய்ய பரிந்துரைக்கலாம். நான் அனைத்திற்கும் தயாராக உள்ளேன்.மாவட்ட எஸ்.பி., ஸ்டாலின் தவறான தகவல் என தெரிவிக்கிறார். உங்களால் ஏதாவது பதில் சொல்ல முடிந்ததா. நான் ஓடி ஒளியவில்லை. நான் பதில் சொல்கிறேன். எனது தந்தைக்கு சென்னையில் ஹார்ட் அட்டாக் வந்துள்ளது. இந்த செய்திகளை பார்த்து அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இது தொடர்பாக விடுமுறை கேட்டு செல்போனில் மாவட்ட எஸ்.பி.,க்கு தகவல் அனுப்பி உள்ளேன். ஆனால் அவர் தற்போது வரை எனக்கு பதில் அளிக்கவில்லை. நான் குடும்பத்துடன் சென்னை சென்று எனது தந்தையை பார்க்க வேண்டும்.இது தொடர்பான பிரச்னை டி.ஐ.ஜி.,க்கு தெரியும். ஆனால் தற்போது வரை என்னை விசாரிக்கவில்லை. 11 மாதம் நான் பணி செய்து வருகிறேன். ஆனால் இதுவரை என்னைப் பற்றி யாரும் புகார் அளிக்கவில்லை.டி.எஸ்.பி., விஷ்ணு பிரியா நாமக்கல்லில் மறைந்தார். அந்த வழக்கை விசாரணை செய்ததில் நானும் ஒரு காவலராக இருந்தேன். அடுத்து விஜயகுமார் ஐ.பி.எஸ்., இறந்தார். அவரிடம் நான் வேலை செய்ததில்லை ஆனால் அவர் தங்கம் என தெரிவித்தார் .தமிழக முதல்வர் ஏன் இன்னும் எனது பிரச்னையில் தலையிடவில்லை என எனக்கு தெரியவில்லை. தமிழக டி.ஜி.பி., ஏன் என்னை அழைத்து இன்னும் விசாரிக்கவில்லை எனவும் தெரியவில்லை.நான் காவல்துறையில் மிகுந்த மன அழுத்தத்தில் உள்ளேன். எனது உயிருக்கு ஆபத்து உள்ளது. எனக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும். சில பேரின் சுயநலத்தால் தான் எங்களை போன்ற அதிகாரிகள் பாதிக்கப்படுகின்றனர்.அவர்களுக்கு தேவையானது நான் காவல்துறையில் பணியாற்றக்கூடாது. எனக்கும் சட்டம் தெரியும். தற்போது நான் பேசுவதால் என்ன விளைவுகள் வரும் எனக்கு தெரியும். என் மீது ஏணியை தூக்கி அடிக்கிறீர்கள். எனது தந்தை உயிருக்கு போராடிக் கொண்டு இருக்கிறார். அப்போதும் நான் இங்கு நின்று கொண்டு பேசிக் கொண்டிருக்கிறேன். என் மீது தவறு இருந்தால் தூக்கில் போடவும்.காவல்துறையில் ஸ்டார் முக்கியமில்லை. மன நிம்மதி மட்டுமே முக்கியம். எனது குடும்பத்திற்கு யார் பாதுகாப்பு. நான் இறந்து விட்டால் மலர் வளையம் வைத்து விட்டு கண்ணீர் விட்டு சென்று விடுவீர்கள். ஆனால் நான் கடைசிவரை பிரச்னைகளை சந்திப்பேன். மற்ற காவலர்களை போன்று எவ்வித தவறான முடிவும் எடுக்க மாட்டேன்.டி.ஜி.பி., சங்கர் ஜிவால் நல்ல அதிகாரி. ஆனால் தற்போது வரை தன்னை கூப்பிட்டு விசாரிக்கவில்லை.மீண்டும் பதிவு செய்கிறேன். எனது உயிருக்கு உத்தரவாதம் இல்லை.தேசிய மனித உரிமைகள் ஆணையம் உடனடியாக எனது பிரச்சனையில் விசாரிக்க வேண்டும்.இவ்வாறு பேட்டியளித்த சுந்தரேசன் பின்னர் தமது அலுவலகப் பணிக்கு சென்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Padmasridharan
ஜூலை 20, 2025 06:22

என் மீது "ஏணியை" தூக்கி அடிக்கிறீர்கள் இது ஏணியா அல்லது வேறு ஏதாவதா அய்யா உண்மையான தைரியமான ஆட்கள் இவருடன் வேலை செய்பவர்கள் ஒன்றாக சேர்ந்து கெட்டவர்களை அழிக்க இதுவே தருணம். ஆனால் பல கோழைகள்தான் தைர்யமானவர்கள் போல் நடித்துக் கொண்டிருக்கிறார்கள் மக்களை அதட்டி பணம்/பொருள் புடுங்குகின்றனர். . இந்த துறையில் குற்றங்களை நிறுத்தினாலே பல குற்றங்கலும் குறையும் நாட்டிலே.


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஜூலை 19, 2025 14:02

ஒரு காவல் துறை உயரதிகாரியே தனது உயிருக்கு ஆபத்து என கூறுகிறார். காவல் துறை மந்திரிக்கு இதை விட பெரிய கேவலம் வேறு எதுவும் இல்லை.


Ramesh Sargam
ஜூலை 19, 2025 11:29

தமிழகத்தில் அதுவும் திமுக ஆட்சியில் நேர்மையான அதிகாரிகளுக்கு எப்பவும் சோதனைதான். பெரிய பதவியில் உள்ள காவல் அதிகாரியின் உயிருக்கே ஆபத்து என்றால், பொது மக்கள் நிலை?


VSMani
ஜூலை 19, 2025 11:27

ஏன் இவருக்கு ஆதரவாக சீமான் விஜய், திருமா, நயினார் போன்றோர் குரல் கொடுக்கவில்லை?


ஆரூர் ரங்
ஜூலை 19, 2025 10:53

வேலை போனா போகட்டும். உயிர் பத்திரம்.


Anand
ஜூலை 19, 2025 10:43

திருட்டு திரவிடிய ஆட்சியில் நேர்மைக்கு இடமில்லை, அதையும் மீறி நேர்மையை கடைபிடித்தால் உங்களின் நிலைதான்..... அந்த ஆண்டவன் தான் தமிழ்நாட்டு மக்களை காப்பாற்றவேண்டும்..


kumaran
ஜூலை 19, 2025 10:36

கொடுமையிலும் கொடுமை பாதுகாப்பு கொடுப்பவருக்கே பாதுகாப்பு இல்லை இங்கு


Nesan
ஜூலை 19, 2025 10:31

ஆட்சி அரசியல் வாதிகள் எப்படிப்பட்ட கொடூரத்தையும் செய்வார்கள். நேர்மை வெல்லவே வெல்லாது. இவர் படும் இன்னலுக்கு காரணமான அனைவரையும் திருச்செந்தூர் முருகன் தண்டனை வழங்கவேண்டும். நேர்மையான, மனிதமானமிக்க தொண்டுள்ளம் உள்ளவர்கள் துணை நிற்க வேண்டும். அட பாவிகளா உங்க குடும்பன் உருப்படுமா?


loganathan
ஜூலை 19, 2025 10:18

வணக்கம், போலீஸ்க்கு இந்த நிலைமை என்றால் சாதாரண மக்களுக்கு சங்குதான். கடவுளே எங்களை காப்பாற்றுங்கள்.


rasaa
ஜூலை 19, 2025 10:12

காவல் துறை டி.எஸ் பி.க்கே இந்த நிலை என்றால் சாதாரண மக்களின் கதி. இதுதான் திராவிட மாடலா?