உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கொளுத்தும் கோடை வெயிலால் 1,245 ஏரிகளில் தண்ணீர் இல்லை: 17 அணைகளும் வறண்டன

கொளுத்தும் கோடை வெயிலால் 1,245 ஏரிகளில் தண்ணீர் இல்லை: 17 அணைகளும் வறண்டன

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் காரணமாக, 1,245 ஏரிகளும், 17 அணைகளும் வறண்டு விட்டன. தமிழகத்தில், 37 மாவட்டங்களில் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில், 14,141 ஏரிகள் உள்ளன. அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டத்தில், 2,040 ஏரிகளும், சிவகங்கை மாவட்டத்தில், 1,459, மதுரை மாவட்டத்தில், 1,340, புதுக்கோட்டை மாவட்டத்தில், 1,132 ஏரிகள் உள்ளன. நீலகிரி மாவட்டத்தில் மட்டும் ஏரிகள் இல்லை.கடந்த ஆண்டு டிசம்பர் வரை பருவமழை கைகொடுத்ததால் ஜனவரி, 1ல், தமிழகத்தில், 5,732 ஏரிகள், 100 சதவீதம் முழுமையாக நிரம்பி இருந்தன. 76 - 99 சதவீதம் வரை, 3,558 ஏரிகளும், 51 - 75 சதவீதம் வரை, 2,349 ஏரிகளும், 26 - 50 சதவீதம் வரை, 1,501 ஏரிகளும், ஒன்று - 25 சதவீதம் வரை, 816 ஏரிகளும் நிரம்பி இருந்தன. நீரின்றி, 184 ஏரிகள் இருந்தன.தற்போது, தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. அக்னி என்ற கத்திரி வெயில் துவங்கிய நிலையில், நீர்நிலைகளில் உள்ள தண்ணீர் இருப்பு வெகுவாக குறைந்து வருகிறது; 655 ஏரிகளில் மட்டுமே, 100 சதவீதம் நீர் இருப்பு உள்ளது. அத்துடன், 76 - 99 சதவீதம் வரை, 1,263 ஏரிகளிலும், 51 - 75 சதவீதம் வரை, 2,650 ஏரிகளிலும், 26 - 50 சதவீதம் வரை, 4,273 ஏரிகளிலும், ஒன்று - 25 சதவீதம் வரை, 4,055 ஏரிகளிலும் தண்ணீர் இருப்பு உள்ளது. நீரின்றி வறண்ட நிலையில், 1,245 ஏரிகள் உள்ளன.தமிழகத்தில், 90 அணைகள் நீர்வளத்துறை பராமரிப்பில் உள்ளன. இவற்றின் ஒட்டு மொத்த கொள்ளளவு 224 டி.எம்.சி.,யாகும். இதில் தற்போது, 122 டி.எம்.சி., நீர் இருப்பு உள்ளது. அதிகபட்சமாக சேலம் மேட்டூர் அணையில், 76 டி.எம்.சி.,யும், ஈரோடு பவானிசாகரில், 10.3, கோவை பரம்பிகுளத்தில், 5.73 டி.எம்.சி.,யும் இருப்பு உள்ளது. பல்வேறு மாவட்டங்களில் உள்ள 17 அணைகள் நீரின்றி வறண்டு கிடக்கின்றன. கத்திரி வெயில் வெப்பம் காரணமாக, மேலும் பல ஏரிகள், அணைகள் வறண்டு விடும் கட்டத்தில் உள்ளன. ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழை துவங்கினால், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள அணைகளுக்கு நீர்வரத்து கிடைக்கும். அதன்பின், அணைகளின் கையிருப்பு படிப்படியாக உயரும் என, நீர்வளத்துறையினர் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

அப்பாவி
மே 12, 2025 13:42

சீக்கிரமாகவே வறட்சி நிதி ஒரு 10000 கோடி ரேஞ்சில் கோரப்பட்டு அவிங்க 1000 கோடி பெருந்தன்மையாக் குடுத்து அதிலும் 40 பர்சண்ட் ஆட்டை போடப்படும்.


அப்புசாமி
மே 12, 2025 10:58

ஜல்ஜீவன் ஜல்ஜீவன் தண்ணி கொட்டுது.


bmk1040
மே 12, 2025 08:59

மண் கொள்ளை கனிமவளக்கொள்ளை இல்லாமல் இருந்தால் நீரும் நிலத்தில் நிற்கும். உள்ள நீரும் சத்துடன் இருக்கும். எல்லாவற்றையும் பணமாக ஆக்கி மனிதர்களை வாழ முடியாத அளவுக்கு ஆக்கி விட்டார்கள்.


Kasimani Baskaran
மே 12, 2025 05:16

கத்திரி வெயில் கடுமை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை