உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இந்த காரணத்தால் மட்டும் அரசுக்கு 1,100 கோடி ரூபாய் வரை இழப்பு: ஐகோர்ட் நீதிபதிகள் வேதனை

இந்த காரணத்தால் மட்டும் அரசுக்கு 1,100 கோடி ரூபாய் வரை இழப்பு: ஐகோர்ட் நீதிபதிகள் வேதனை

சென்னை: 'வழக்குகளில் ஆஜராகாமல் இருப்பது, ஒரு சில வழக்குகளை மட்டும் தேர்வு செய்து ஆஜராவது போன்ற செயலால், கடந்த சில ஆண்டுகளில், கல்வித்துறை சார்ந்த வழக்குகளால் அரசுக்கு 1,100 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது' என்று வழக்கு விசாரணையின் போது சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.மணல் குவாரிகளில் நிர்ணயித்த அளவுக்கும் அதிகமாக மணல் எடுத்து விற்பனை செய்ததாகவும், அதில் கிடைத்த வருவாயை சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்ததாகவும், புகார் எழுந்தது. இது குறித்து, அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்தது. பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி, ஆவணங்களை கைப்பற்றியது. விசாரணைக்கு ஆஜராகும்படி, மாவட்ட கலெக்டர்களுக்கு அமலாக்கத்துறை, 'சம்மன்' அனுப்பியது. இதை எதிர்த்து, பொதுத்துறை செயலர், நீர்வளத்துறை கூடுதல் செயலர், திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலுார் மற்றும் வேலுார் மாவட்ட கலெக்டர்கள் சார்பில், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அமலாக்கத்துறை சம்மனுக்கு தடை விதித்தது. தடையை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்தது. மனு மீதான விசாரணையின் போது, அமலாக்கத்துறையின் விசாரணைக்கு ஒத்துழைப்பதாக, கலெக்டர்கள் மற்றும் தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து, இவ்வழக்கு மீண்டும் உயர் நீதிமன்ற விசாரணைக்கு திருப்பி அனுப்பப்பட்டு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம்.ஜோதிராமன் அடங்கிய அமர்வில், நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில் யாரும் ஆஜராகவில்லை.அதனால், அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், வழக்கு தொடர்ந்திருந்த தமிழக பொதுத்துறை செயலரை ஆஜராகும்படி உத்தரவிட்டனர். அதன்படி, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம்.ஜோதிராமன் அடங்கிய அமர்வில், நேற்று வழக்கு விசாரணைக்கு வந்த போது, பொதுத்துறை செயலர் ரீட்டா ஹரிஷ் தக்கர் ஆஜரானார்.இதன்பின், கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி வாதாடியதாவது: நேற்று முன்தினம் எவரும் ஆஜராகாததற்கு மன்னிப்பு கோருகிறோம். பண மோசடி விவகாரங்களில் அமலாக்கத்துறையுடன் இணைந்து செயல்பட, மாநில அரசு உறுதி பூண்டுள்ளது. ஆனால், பழிவாங்கும் நோக்குடன் வழக்குகள் இருக்கக்கூடாது.மாநில அரசு சம்பந்தப்பட்ட விஷயங்களில், அரசின் ஒப்புதல் இல்லாமல், அமலாக்கத்துறை தலையிடும் அதிகாரம், கூட்டாட்சியின் அடிப்படை கட்டமைப்பை மீறுவதாகும். இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், அடுத்த கட்ட நகர்வு பற்றி, பொதுத்துறை தேவையான சட்ட ஆலோசனைகளை பெற, அவகாசம் வழங்க வேண்டும். விசாரணையை தள்ளிவைக்க வேண்டும். இவ்வாறு அவர் வாதாடினார்.அதை ஏற்ற நீதிபதிகள், வழக்கின் விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்தனர், அடுத்த முறை, பொதுத்துறை செயலர் ஆஜராகுவதில் இருந்தும் விலக்களித்தனர்.

நடவடிக்கை அவசியம்

விசாரணையின் போது, நீதிபதிகள் கூறியதாவது: வழக்கு விசாரணையில், அரசு தரப்பில் வழக்கறிஞர் ஆஜராகாதது ஏற்புடையதல்ல. சட்ட அதிகாரிகளான வழக்கறிஞர்கள், வழக்குகளை தேர்வு செய்து, அந்த வழக்குகளில் மட்டுமே ஆஜராக ஆர்வம் காட்டுகின்றனர். அதுமட்டுமின்றி, நீதிமன்றத்துக்கு தவறான தகவல்களையும் தெரிவிக்கின்றனர்.இந்தச் செயலால், பொதுமக்கள் தான் அதிகம் பாதிப்படைவர். பணியில் தவறு செய்யும் அரசு ஊழியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதுபோல, தன் கடமையில் இருந்து விலகும் அரசு வழக்கறிஞர்களின் செயல்பாடுகளை கண்காணித்து, அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தகுதியான வழக்கறிஞர்களை நியமனம் செய்வது தொடர்பாக, தலைமை செயலரின் கவனத்துக்கு, பொதுத்துறை எடுத்துச் செல்ல வேண்டும். உதாரணமாக, வழக்குகளில் ஆஜராகாமல் இருப்பது, ஒரு சில வழக்குகளை மட்டும் தேர்வு செய்து ஆஜராவது போன்ற செயலால், கடந்த சில ஆண்டுகளில், கல்வித்துறை சார்ந்த வழக்குகளால் அரசுக்கு 1,100 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 31 )

V GOPALAN
டிச 01, 2024 11:11

நம் கோர்ட் தகுந்த தீர்ப்பு வழங்கவதற்கு விடுறது மக்களுடனும் சேர்ந்து அழுவதற்கு நமக்கு கோர்ட் இனி தேவை இல்லை. இழுத்து மூடுவது மேல்


pmsamy
டிச 01, 2024 07:25

நீதிமன்றங்கள் சிறப்பாக இயங்கினால் குற்றங்கள் குறைய வேண்டும் ஆனால்.....


வைகுண்டேஸ்வரன்
நவ 30, 2024 19:34

மாநில அரசு சம்பந்தப்பட்ட விஷயங்களில், அரசின் ஒப்புதல் இல்லாமல், அமலாக்கத்துறை தலையிடும் அதிகாரம், கூட்டாட்சியின் அடிப்படை கட்டமைப்பை மீறுவதாகும்.


ஆரூர் ரங்
நவ 30, 2024 22:06

மாநில அரசுகள் அரசியல் சட்டப்படி பார்த்தால் மத்திய அரசின் தாற்காலிக கிளைகள் மட்டுமே. மத்திய அரசு நினைத்தால் மாநிலங்களைப் பிரிக்கலாம் அல்லது. சேர்க்கலாம். அவற்றுக்கு தனிப்பட்ட இறையாண்மை எதுவும் கிடையாது.


Sathyanarayanan Sathyasekaren
நவ 30, 2024 22:48

டேய் கொத்தடிமை. எதற்கு தான் சொம்பு தூக்குவது என்ற விவஸ்தை கிடையாதா. திருட்டு திராவிட வழக்கறிஞ்சர்களால் 1100 கோடி மக்கள் பணம் நஷ்டம் அதற்கு பதில் சொல்ல வக்கில்லை. ஊழல் செஞ்சு கொள்ளை அடிக்கும் ...க்கு ஜால்ரா அடிக்க வெட்கமா இல்லையா?


NATARAJAN R
நவ 30, 2024 19:23

எந்த நீதிமன்றமும் எந்த அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மிரட்டல் மட்டுமே விடும். நடக்கும் அத்தனை அக்கிரமங்களை நீதிமன்றம் பல வருடங்களாக எச்சரிக்கை மட்டும் விடுத்து வேடிக்கை மட்டுமே பார்க்கப்படுகிறது. பிறகு எப்படி ஊழல் ஒழியும்?


PR Makudeswaran
நவ 30, 2024 18:39

என்ன திரு வைகுண்டேஸ்வரன் போன்றவர்களை kaanavillaiye


வைகுண்டேஸ்வரன்
நவ 30, 2024 19:33

ஆஜர் சார். இதில், "மாநில அரசு சம்பந்தப்பட்ட விஷயங்களில், அரசின் ஒப்புதல் இல்லாமல், அமலாக்கத்துறை தலையிடும் அதிகாரம், கூட்டாட்சியின் அடிப்படை கட்டமைப்பை மீறுவதாகும்."- இதை நீதிபதிகள் ஏற்றுக் கொண்டனர். மேலும், "அரசியல் நோக்கில் வழக்குகள் இருக்கின்றன " என்றும் அரசு வக்கீல் சொல்லிவிட்டார். பிறகு இதில் என்ன சொல்ல? அதான் எதுவும் எழுதவில்லை. 471 நாட்கள் அமைச்சர் செந்தில் பாலாஜியை சிறையில் வைத்துக் கொண்டிருந்தும், அமலாக்கத்துறையால் குற்றப் பத்திரிகை தயாராக்க இயலவில்லை???


Sathyanarayanan Sathyasekaren
நவ 30, 2024 22:53

எங்க ஊருக்கு வந்து காவிரி மற்றும் கொள்ளிடத்தில் எவ்வளவு மணல் கொள்ளை அடித்து இருக்கிறார்கள் என்று பார். காவிரி கரையில் இருக்கும் பனை மரங்கள் பட்டு போகும் அளவிற்க்கு மணல் ஆழமாக தோண்டி கொள்ளை அடித்து இருக்கிறார்கள். நீ வெட்கம் இல்லாமல் அந்த கொள்ளையர்களை ஆதரித்துக்கொண்டு இருக்கிறாய்.


karupanasamy
நவ 30, 2024 18:17

சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பாணியிலே பதில் சொல்லனும்னா நீதியாவது மண்ணாவது.ஒருத்தரும் குறை சொல்லமுடியாத ஆட்சியாக்கும் இது


joe
நவ 30, 2024 13:41

அரசாங்கம் என்கிற அரசு நாற்காலியில் உட்காரும் ஆட்சியாளர்களால்தான் சுய நல அதிகாரம் என்கிற தோரணையில் ஊழல் செய்து இவர்கள் சம்பாதிக்கிறார்கள் .அதற்காகத்தான் இவர்கள் தேர்தல் பாத்திரத்தில் அரசியலை தொழில் என்று என்று குறிப்பிட்டு அதை சமூக தொண்டு என கருதாமல் ஊழல் ஆட்சியை கொடுக்கிறார்கள் .இது தொடர்ந்து நடந்து கொண்டுதானே இருக்கிறது .


திராவிடாலு
நவ 30, 2024 13:33

இது ஜனநாயக நாடு. திருடச் சொல்லி திருடனை மக்கள்தான் தேர்ந்தெடுத்துள்ளார்கள். பிறகு திருடன் திருடினானா என்று சோதிப்பது ஜனநாயக விரோதம்தானே...


குமரன்
நவ 30, 2024 13:29

தவறுகள் செய்யும் எவரும் தவறை ஒப்புக்கொள்ளவோ உணர்ந்தாககூட தெரியாத நிலையில் திருடனிடம் கொள்ளைக்கான காரணமோ அல்லது நியாயமாஎன கேட்டால் என்ன சொல்வர். இப்போது ராஜாஜி காமராஜர் ஓமந்தூரார் ஆட்சி செய்யவில்லை இதை காலம் மிக அழகாக பதில் சொல்லும் ஏனெனில் தவறு செய்தவன் தனக்கும் பிள்ளைகளுக்கும் சேர்த்த தவறான வருவாயை பங்கு பெறும் அதிலிருந்து தப்பமுடியாது


சிந்தனை
நவ 30, 2024 13:27

வரிகட்ற முட்டா பசங்க ஜோரா கைதட்டுங்க...


புதிய வீடியோ