உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / துரைமுருகன் அப்பவே அப்படி... முதல் நாளே சீனியர் வக்கீலை மாட்டி விட்ட கலகல அனுபவம்!

துரைமுருகன் அப்பவே அப்படி... முதல் நாளே சீனியர் வக்கீலை மாட்டி விட்ட கலகல அனுபவம்!

செங்கல்பட்டு: வக்கீலாக பணியாற்றிய முதல் நாள் அனுபவத்தை கலகலப்பாக கூறினார் அமைச்சர் துரைமுருகன். தன் சீனியர் வக்கீலை, நீதிபதியிடம் மாட்டி விட்ட அவரது அனுபவம், தி.மு.க., சட்டத்துறை மாநாட்டில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.செங்கல்பட்டில் நடந்த தி.மு.க., சட்டத்துறை மாநில மாநாட்டில், அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது: பொன்முடி அவர் வக்கீல் தான். கோர்ட்டுக்கே போகாதவர். அவரு கேஸ்க்கு மட்டும் போயிட்டு வருவார். சட்டத்துறை அமைச்சரும் அப்படிதான். அவரும் அதிகமாக கோர்ட்டுக்கு போகாதவர். பேசுகிற நான் எப்படி என்று கேட்டால், நானோ... அவர்களை யெல்லாம்விட பூஜ்ஜியம். முதல் முதலாக, நான் வக்கீல் ஆகி, பெரிய கோட் எல்லாம் தச்சுப்போட்டுட்டு, பல்கிவாலா மாதிரி கோர்ட்டுக்கு போனேன். என்னுடைய சீனியர் ஜி.ராமசாமி, 'யோவ் வாய்யா... கோர்ட்டுக்கு போகலாம்' என்றார். 'எந்த கோர்ட்டுக்கு' என்றேன். 'கோகுலகிருஷ்ணன் கோர்ட்' என்றார். நான் கோர்ட்டில் போய் பிரமாதமாக உட்கார்ந்து கொண்டேன். திடீரென சீனியர் என்னிடம், 'நான் போறேன். ரூமில் இருக்கிறேன். இந்த நம்பர் கேஸ் டபாலி கூப்பிடுவாரு. 'அரசு தரப்பில் யார் ஆஜராகிறீர்கள் என்று கேட்பாங்க, நீ எழுந்து நில்லு. 'மைசெல்ப்' என்று சொல்லு. 'நீங்க அரசு தரப்பில் ஆஜர் ஆகிறீர்களா, உங்கள் கருத்து என்ன' என்று கேட்பார்கள். நீ, 'நோ அப்ஜக்சன்' என்று சொல்லிவிட்டு வந்துவிடு என்றார். 'நான் தலை, கால் தெரியாமல் அப்ஜக்ஸன் இல்லைன்னு சொல்ல சொல்கிறீர்களே, ஏதாவது மாட்டிகிட்டா என்ன செய்வது' என்று கேட்டேன். 'அது எல்லாம் ஒண்ணும் கிடையாது. இதைச்சொல்லு போதும்' என்றார். நானும், 'வாட் இஸ் யுவர் ஒப்பினியன்' என்று நீதிபதி கேட்டவுடன், 'நோ அப்ஜக்சன் யுவர் ஹானர்' என்றேன். அவரு திருப்பி கேட்டாரு, 'நீங்க அரசு தரப்பில் ஆஜர் ஆகிறீர்களா' என்றார். 'ஆமாம்' என்றேன். 'உங்களுக்கு ஆட்சேபம் இல்லை என்று சொல்கிறீர்கள், ஏன் அப்படி சொல்கிறீர்கள்' என்றார். 'என் சீனியர் அப்படித்தான் சொல்லச்சொன்னார்' என்றேன். 'அவர் எங்கே இருக்கிறார்' என்று கேட்டார். 'அவர் சேம்பரில் இருக்கிறார்' என்றேன். 'அவரை அழைத்து வாங்க' என்றார் நீதிபதி. 'நான் போய், வாங்க சார்' என்று கூட்டி வந்தேன். அரை மணி நேரம் பேசி, எனது சீனியரை நீதிபதி வாங்கு வாங்கு என்று வாங்கிவிட்டார். இவ்வாறு துரைமுருகன் பேசினார். அமைச்சர் சொல்லச்சொல்ல கூட்டத்தில் சிரிப்பலை ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

Gajageswari
ஜன 24, 2025 05:52

இப்படி இன்றும் எல்லா அரசு வழக்குகள் நடைபெறுகிறது. அதனால் தான் நீதிமன்றத்தில் இத்தனை வழக்காறுகள் தேங்கி நிற்கின்றன


Bhaskaran
ஜன 20, 2025 13:06

கட்சி சார்பு வக்கீல்கள் நீதிபதியாக நியமிக்கப்பட்டால் அவர்கள் கட்சி வழக்குகள் விசாரணைக்கு வந்தால் எப்படி செயல்படுவர கோகுல் கிருஷ்ணன் மாவட்ட செயலாளராக இருந்து முக்கூடல் தொகுதியில் சுதந்திரா கட்சி வேட்பாளர் சிவப்பிரகாசர் திட்டம் தோற்று பின் நீதிபதியான ரத்னவேல் பாண்டியன். கேரள அமைச்சாராக இருந்து பின் சுப்ரீம் கோர்ட் நீதிபதியான வி.ஆர் கிருஷ்ணய்யர் .இந்திராவை எதிர்த்து தன் சுப்ரீம் கோர்ட் நீதிபதி பதவியை ராஜினாமா செய்து பின் ஜனதா கட்சி காலத்தில் சபாநாயகராக ஹெக்கடே..விரைவில் வில்லனும் அம்மாதிரி நீதிபதியாவார். . அரசியல் கட்சி சார்பு உள்ளவர்களை நீதிபதி நியமனம் செய்யாமல் சர்வீஸ் கமிஷன் தேர்வு நேர்முகம் கலந்துரையாடலில் வென்ற இளைய சமுதாயத்தை மட்டும் நீதிபதிகளாக்கலாமே பின் அவரது பெர்பாமன்ஸ் பார்த்து உச்ச நீதிமன்றத்துக்கு பதவி உயர்த்தலாம்


Venkataraman
ஜன 19, 2025 19:10

இதெல்லாம் முன்பே தெரிந்த விஷயம்தான். திமுகவில் இருக்கும் பெரும்பாலான தலைவர்கள் சட்டம் படித்திருந்தாலும் கோர்ட் பக்கமே போயிருக்க மாட்டார்கள். அவர்கள் வாங்கிய பட்டமும் உண்மையாக இருக்காது. அத்தனையும் ஏமாற்று வேலை.


V GOPALAN
ஜன 19, 2025 09:18

திருமா , துரை முருகன் , ராஜா லா டிகிரி எல்லாம் பித்தலாட்ட டிகிரி. பெயில் லா கூட தெரியாத மக்கு kootangal


sankaranarayanan
ஜன 18, 2025 20:57

இப்போதுதான் கட்சியை ல் சாயம் வெளுத்துப்போகிறது எல்லா உண்மைகளும் தானாகவே வெளி வருகின்றன இவர்களை அமைச்சர்களாக வைத்துக்கொண்டு எப்படி அய்யா இந்த திராவிட மாடல் அரசு ஆட்சி செய்கிறது எல்லாருமே கோமாளிகளாகவே இருக்கிறார்களே. இன்னும் இப்படியே ஒவ்வொரு அமைச்சரும் உண்மையை வெளியே கக்கிவிட்டால் ஆட்சி எப்படி நடக்கும்


Anantharaman Srinivasan
ஜன 18, 2025 20:39

துரைமுருகனான நானோ... பொன்முடி, சட்டத்துறை அமைச்சரையெல்லாம் விட பூஜ்ஜியம். இன்றுவரை தொடர்ந்து திமுக MLA/ அமைச்சர். தேர்ந்தெடுக்கும் மக்கள் அதைவிட பூஜ்யம்.


rama adhavan
ஜன 18, 2025 20:08

எல்லாம் பொய்.


Ramesh Sargam
ஜன 18, 2025 20:02

சீனியரும் சரியில்லை. ஜூனியரும் சரியில்லை. உண்மையில் இருவரும் சட்டக்கல்லூரி சென்று, முறையாக படித்து பட்டம் வாங்கினார்களா.... அல்லது Munnaabai MBBS .... முறையில் பட்டம் பெற்றார்களா என்று தெரியவில்லை?


Anantharaman Srinivasan
ஜன 18, 2025 19:42

Law college ல படிக்கும் போது Compound wall தாண்டி வகுப்புக்கு எத்தனை நாள் போயிருப்பார்..?


பாலா
ஜன 18, 2025 19:13

எம் ஜி ஆர் அவர்களுக்குச் செய்த துரோகம் இவர சும்மா விடாது?


சமீபத்திய செய்தி