உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பொழுது போக்கு மன்றம்: நா.த.க.,வை கிண்டல் செய்த துரைமுருகன்

பொழுது போக்கு மன்றம்: நா.த.க.,வை கிண்டல் செய்த துரைமுருகன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வேலூர்: '' டெபாசிட் போனது, பணம் பறிபோனது குறித்து நாம் தமிழர் கட்சியின் கவலைப்பட மாட்டார்கள். அது ஒரு பொழுதுபோக்கு மன்றம்,'' என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.ஈரோடு கிழக்கு தொகுதி சட்டசபை தேர்தலில் தி.மு.க.,- நாம் தமிழர் கட்சி இடையே போட்டி நிலவியது. இத்தேர்தலில் தி.மு.க., 90 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நாம் தமிழர் கட்சி 24,151 ஓட்டுகள் மட்டுமே பெற்று டெபாசிட் இழந்தார். இந்நிலையில் வேலூரில் நிருபர்களைச் சந்தித்த துரைமுருகன் கூறியதாவது: காலநிலை ஊருக்கு ஊர் மாறும். ஒரு சில இடங்களில் குளிர் இருக்கலாம். அரசியல் தட்பவெப்பநிலைக்கு ஏற்க அங்கு அரசியல் நடக்க வேண்டும். அப்படித்தான் டில்லியில் பாஜ வெற்றி பெற்றுள்ளது. அனைத்து ஊர்களிலும் தாமரை மலரலாம். மலர செய்கிறார்களா என தெரியாது. தமிழகத்தில் தாமரையை மலர வைக்க பிரதமர் மோடியாலும் முடியாது. அக்கூட்டத்தினாலும் முடியாது. ஈரோடு கிழக்கு தொகுதியில் டெபாசிட் பணம் போனதால் நாம் தமிழர் கட்சியினர் கவலைப்பட மாட்டார்கள். டெபாசிட் வருவது போவது பற்றி அவர்களுக்கு கவலை இல்லை. அது ஒரு பொழுது போக்கு மன்றம். இவ்வாறு துரைமுருகன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 29 )

Matt P
பிப் 10, 2025 08:45

வயசான காலத்தில் பேரப்பிள்ளைகளுடன் நேரம் செலவழிப்பதை விட்டு விட்டு அவரின் மகன் வயதில் இருப்பவரை கிண்டல் அடிக்கிறார்.


V வைகுண்டேஸ்வரன்,Chennai
பிப் 09, 2025 21:48

அதெல்லாம் சரி தொரை. யார் அந்த சார்/ கார். அதை செல்லும்


அப்பாவி
பிப் 09, 2025 17:34

துணை முதல்வரும் கூத்தாடிதான். தொரைக்கு தெரியாது போலிருக்கு.


Nagarajan D
பிப் 09, 2025 14:30

அந்த கட்சி பொழுது போக்கு மன்றம்....


Viswanathan B N
பிப் 09, 2025 14:08

அந்த பொழுது போக்கு மன்றத்துக்கு 22000 பேரு ஆதரவு தெரிவித்து உள்ளனர். அதை பார்த்து நீங்கள் பொறாமை பட வேண்டும்


GoK
பிப் 09, 2025 14:00

தமிழ்நாட்டின் அரசியல் குடும்பங்கள் 2026 இல் சிறைக்குப்போகும்


Esan
பிப் 09, 2025 13:29

திமுக எத்தனை அமைச்சர்கள் அதிகாரிகள் எவ்வளவு பணம் ஈரோடு தேர்தலுக்கு அனுப்பியது?


Murthy
பிப் 09, 2025 13:20

காந்தி நாட்டுக்கு கிடைத்த வெற்றி.. ஈவெராவின் 21 ஆம் பக்கத்துக்கு கிடைத்த வெற்றி...ஈவெரா வின் கொள்கைகளை கூறி வாக்கு கேட்டவருக்கு கிடைத்தது 1000 க்கும் குறைவான ஓட்டுகளே .


D Natarajan
பிப் 09, 2025 12:56

தன்மானம் இல்லாத மனிதர். பதவிக்காக, பணத்துக்காக எதையும் இழக்க தயார்


Yasararafath
பிப் 09, 2025 12:15

உண்மையில் பொழுதுபோக்கு மன்றம் தான் நா.த.க


சமீபத்திய செய்தி