உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஒரு நாளில் படிப்பு பாதிக்காது என்கிறார் துரைமுருகன்

ஒரு நாளில் படிப்பு பாதிக்காது என்கிறார் துரைமுருகன்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் மோசூர் அரசு தொடக்கப்பள்ளி, சூரை அரசு உயர்நிலைப்பள்ளி, மாம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஆகிய இடங்களில், 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் நடந்தது . இதனால் மாணவர்கள், அவதியடைந்தனர். இதற்கிடையே, குமணன் தாங்கலில் உள்ள அரசுப் பள்ளியிலும், முகாம் நடந்தது. இதில், பங்கேற்ற அமைச்சர் துரைமுருகன் அளித்த பேட்டி: காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து, அரசு பள்ளி திறக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் அரசு பள்ளியில் நடைபெறுகிறதே என கேட்கிறீர்கள். ஒரே நாளில், அப்படி எதுவும், பள்ளியில் பாடம் நடந்து விடாது. இதனால் மாணவர்களுக்கு கல்வியில் இடையூறு ஏற்படாது . இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

viiyasan
அக் 21, 2025 06:29

எல்லாரும் இவன் குடும்பத்துக்கு அடிமையா இருக்கோணும்


Uthamarseeli Kattanthadi
அக் 09, 2025 16:48

கருணாநிதி வம்சத்தினர் ஆளும்வரை அடிமைகள் வேண்டும்தானே,... அப்போ படிப்பாவது மண்ணாங்கட்டியாவது..யார் அங்கே கேள்வி கேட்கிறது அவரை சிறையில் அடையுங்கள்.


JANA VEL
அக் 09, 2025 16:32

அதை பள்ளிக்கூடம் போனவங்க... போறவங்க ... சொல்லணும். பள்ளிக்கூடம் பக்கமே போகாத மந்திரிங்கள் சொல்ல கூடாது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை