உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருப்பத்தூர் மாவட்ட பதிவாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் ரெய்டு

திருப்பத்தூர் மாவட்ட பதிவாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் ரெய்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருப்பத்தூர்: முத்திரைக் கட்டணம் வசூலிப்பில் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில், திருப்பத்தூர் மாவட்ட பதிவாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.முத்திரைக் கட்டணம் குறைத்து வசூலித்து அரசுக்கு ரூ.1.34 கோடி இழப்பீடு ஏற்படுத்தியதாக திருப்பத்தூர் மாவட்ட பதிவாளர் செந்தூரப்பாண்டியன் மீது புகார் எழுந்தது. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, மதுரவாயல் அடுத்த நும்பல் பகுதியில் அமைந்துள்ள மாவட்ட பதிவாளர் செந்தூரப்பாண்டியனின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். செந்தூரப்பாண்டியனும், அவரது மனைவியும் வீட்டில் இல்லாத போது, சோதனை நடத்தப்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

rama adhavan
பிப் 14, 2025 16:43

லஞ்சம் பிச்சையை விடவும் கேவலமானது. 21ம் பக்கம் போன்றது.


Anantharaman Srinivasan
பிப் 14, 2025 15:41

ஆயிரத்துல ஒரு கேஸ் மாட்டிகிச்சு. 999 ஜாம்ஜாம்னு தினமும் கல்லா கட்டிக்கிட்டு இருக்கு..?


லலிதகுமாரி
பிப் 14, 2025 13:36

திருட்டு திராவிடனுங்களை ஒழிக்கவே முடியாது கோவாலு.


Ramesh Sargam
பிப் 14, 2025 13:07

நாட்டில் உள்ள அணைத்து பதிவாளர்கள், சார்பதிவாளர்கள் வீடுகள் அனைத்திலும், அலுவலகத்திலும் ரைடு செய்தால், வொவொரு மாநிலத்துக்கு போதுமான நிதி கிடைக்கும். கூடவே வொவொரு அரசுத்துறை அதிகாரிகள் வீட்டிலும், அலுவலவத்திலும் ரைடு செய்தால், மொத்த நாட்டிற்கே தேவையான நிதி கிடைக்கும்.


Perumal Pillai
பிப் 14, 2025 12:29

திருநெல்வேலி ஜில்லா பணகுடி சப் ரெஜிஸ்ட்ரார் வீட்டில் எப்போது ரெய்டு பண்ணுவீர்கள்? அந்த ஆபீஸ் லஞ்சத்தின் உறைவிடமாக ஆகிவிட்டது. ரெஜிஸ்டரேஷன் சார்ஜ் விட லஞ்சத்தின் சார்ஜ் அதிகமாக ஆகிவிட்டது .


தர்மராஜ் தங்கரத்தினம்
பிப் 14, 2025 12:13

மேல் இடம் வரைக்கும் கட்டிங் காலாகாலத்துக்கு போய்ச்சேரலைன்னா இதுதான் கதி ......


S Nagarajan
பிப் 14, 2025 17:41

மிகவும் சரி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை