உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இ - பாஸ் திட்டம் தோல்வி; ஊட்டியில் தீரவில்லை நெரிசல்

இ - பாஸ் திட்டம் தோல்வி; ஊட்டியில் தீரவில்லை நெரிசல்

கூடலுார்: 'இ - பாஸ்' திட்டத்தை நடைமுறைப்படுத்தியும், ஊட்டியில் நெரிசல் தீராததால் அந்த திட்டமே தோல்வி அடையும் நிலை உருவாகி உள்ளது. நீலகிரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமான ஊட்டிக்கு, அதிக வாகனங்கள் வந்து செல்வதால் சுற்றுச்சூழல் பாதிப்பு, நெரிசலை தவிர்க்க, ஐகோர்ட் உத்தரவுப்படி, 2024 மே, 7 முதல் இ -- பாஸ் திட்டம் நடைமுறைக்கு வந்தது. இதற்காக, தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஊட்டி செல்லும் நெடுஞ்சாலைகளில், இ பாஸ் சோதனை சாவடி அமைக்கப்பட்டது. சீசன் நேரங்களில், வார இறுதி நாட்களில், 8,000 வாகனங்கள், வார நாட்களில் 6,000 வாகனங்கள் வரை அனுமதிக்கப்பட்டன. சீசன் அல்லாத நேரங்களில், வாகன எண்ணிக்கையில் எந்த கட்டுப்பாடும் இல்லை. மேலும், இ-பாஸ் இல்லாமல் வரும் வாகனங்களுக்கு, சோதனை சாவடியில் நடுரோட்டில் வாகனத்தை நிறுத்தி, வாகன உரிமையாளர்கள் இ - பாஸ் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, அதற்கு உடனடி ஒப்புதல் வழங்கி, பாஸ் போட்ட பிறகே, வாகனம் அனுமதிக்கப்படுகிறது. இதனால் பாஸ் எடுத்து வந்தாலும், மற்ற வாகனங்கள் வரிசையில் அணிவகுத்து நிற்க வேண்டியுள்ளது. இம்மாதிரியான போக்கால், நெரிசலை குறைக்க அமல்படுத்தப்பட்ட இ -பாஸ் திட்டமே தோல்வி அடைந்துள்ளதாக வாகன ஓட்டிகள் புலம்புகின்றனர். வாகன ஓட்டிகள் கூறுகையில், 'சுற்றுலா பயணியர் திட்டமிட்டு தான் ஊட்டிக்கு வருகின்றனர். அவ்வாறு வருவோர் முன்கூட்டியே இ பாஸ் எடுத்து வரவும், 24 மணி நேரத்திற்கு முன் பாஸ் எடுக்காத வாகனங்களுக்கு, அனுமதி மறுப்பு அல்லது ஏதாவது கட்டணம் வசூலித்து அனுமதி வழங்குவது போன்ற கட்டுப்பாடுகளை கொண்டு வர வேண்டும். 'அப்போது தான் அனைவரும் முன்கூட்டியே பாஸ் எடுத்து வருவர். இதனால் சோதனை சாவடிகளில் மணிக்கணக்கில் வரிசை கட்டி நிற்க வேண்டியது தவிர்க்கப்படும். அதே போல, பசுமை வரி வசூலிக்கும் பணிக்கு தாமதத்தை தவிர்க்க கூடுதல் ஊழியர்களை நியமிக்க வேண்டும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Nagarajan D
அக் 04, 2025 14:15

சுற்றுலா செல்பவர்களுக்கு epass முறை சரி.. என்னை போன்ற தொழில் சம்பந்தமாக ஊட்டி செல்பவர்களுக்கு எது மிக பெரிய பைத்தியக்காரத்தனாமாகவே உள்ளது.. ஒரு பதிவு எண் கொண்ட ஒரு வண்டி மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே செல்ல அனுமதி என்றால் அது சுத்த கிறுக்குத்தனமாக தான் இருக்கும் எனக்கு வாரத்திற்கு ஒரு முறையாவது நீலகிரிக்கு செல்லும் அவசியம் உள்ளது.. என்னை போன்றவர்கள் எப்படி செல்வது.. இதில் பிசினஸ் என்று தேர்வு செய்தாலும் மறுமுறை அனுமதி வழுங்குவதில்லை.. நான் ஒவ்வொரு மாதமும் முதல் முறை செல்லும் தேதியிலிருந்து மாத இறுதி நாள் வரைக்கும் விண்ணபித்திடுவேன்... epass கிடைத்துவிடும் ஆனால் செக் போஸ்டில் மீண்டும் ஒரு வாக்குவாதம் செய்து தான் நான் சென்று வருகிறேன்.. எதிலுமே ஒரு தெளிவு இல்லாத அரசு நிர்வாகம் தான் இதற்க்கு காரணம்


பகுத்தறிவு பாசறை
அக் 04, 2025 12:51

சொத்துக்கு எந்த குந்தகமமும் வராமல் பார்த்துக் கொள்வாம்...


அப்பாவி
அக் 04, 2025 09:29

மலையெல்லாம் உடைச்சு எட்டுவழிச்சாலை போடலாமே


அப்பாவி
அக் 04, 2025 09:28

ரோப் கார் திட்டம் போடலாமே. ஊட்டியில் ஏர்போர்ட் கட்டலாமே.


VENKATASUBRAMANIAN
அக் 04, 2025 08:18

மேட்டுப்பாளையம் முதலில் தனியார் கார்கள் வேர்களை நிறுத்தி விட்டு பேரூந்துகள் ஐ இயக்கலாம். எங்கே போகவேண்டும் ஓ அங்கே இறக்கி விடலாம். இதனால் நெரிசல் குறையும்


Kasimani Baskaran
அக் 04, 2025 07:07

இ-பாஸ் கொடுக்கலாம்.


சண்முகம்
அக் 04, 2025 06:28

கூட்டத்தை குறைக்க, சொந்த வண்டி மற்றும் வாடகை வண்டிகளுக்கு, ஒரு நாளைக்கு ₹5,000 வசூலிக்க வேண்டும். பஸ்ஸில் போனால் மலைப்பாதையில் நெரிசல் குறையும்.


நிக்கோல்தாம்சன்
அக் 04, 2025 15:18

உண்மை இதனை ஏனோ அரசு அதிகாரிகள் யோசிக்க முடியாமல் திணறுகிறார்கள்