உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இ. கம்யூ கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு தீவிர சிகிச்சை; மருத்துவமனை அறிக்கை

இ. கம்யூ கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு தீவிர சிகிச்சை; மருத்துவமனை அறிக்கை

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, 100, நேற்று முன்தினம் வீட்டில் தவறி விழுந்து தலையில் காயம் ஏற்பட்டதால் சென்னை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிறப்பு மருத்துவர் குழுவினர் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=7wuwzscl&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணுவின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.தலையில் ஏற்பட்ட காயத்தால் தையல் போடப்பட்டு தீவிர சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன. வயது முதிர்வால் ஏற்பட்டுள்ள பிரச்னைகளுக்கும் சிறப்பு மருத்துவர் குழு மூலம் சிகிச்சை அளிக்கப்படுகின்றனஉடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் ஓரிரு நாளில் நல்லக்கண்ணு வீடு திரும்புவார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

vns
ஆக 24, 2025 20:11

கம்யூனிஸ்ட் தலைவருக்கும் தனியார் மருத்துவமனை தான் தகுதியான மருத்துவம் பெற சிறந்த இடமாகத் தெரிகிறது. இவர்கள் வெளியே வந்து அரசு மருத்துவமனையின் குணங்களை பேசுவார்கள் வாய் கிழிய.


புதிய வீடியோ