உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்கம்; 856 மரங்கள் வெட்டி அகற்ற முடிவு!

கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்கம்; 856 மரங்கள் வெட்டி அகற்ற முடிவு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்கத்திற்காக, 856 மரங்கள் வெட்டி அகற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இழப்பீட்டு நடவடிக்கைகள் மற்றும் சுற்றுச்சூழல் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவது குறித்து மாநில நெடுஞ்சாலைத் துறை உத்தரவாதம் வழங்கியதால், தேசிய பசுமை தீர்ப்பாயம் வழக்கை தள்ளுபடி செய்தது.சென்னையின் முக்கிய சாலையான இ.சி.ஆர்., என்ற கிழக்கு கடற்கரை சாலையில் வாகன நெரிசலை கணக்கில் கொண்டு, திருவான்மியூரில் இருந்து அக்கரை வரை விரிவாக்கம் செய்யப்படுகிறது. வழக்கு, நிர்வாக குளறுபடி காரணமாக ஆமை வேகத்தில் நடந்த பணி, ஓராண்டாக வேகமாக நடக்கிறது. அந்த வகையில், முதற்கட்டமாக, கொட்டிவாக்கம்-பாலவாக்கம் பகுதியில் இருந்து 123 மரங்கள் சாலையை விரிவாக்கம் செய்வதற்காக வெட்டி அகற்றப்பட்டன.தற்போது 2ம் கட்டமாக, 856 மரங்கள் வெட்டி அகற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. அனுமதியின்றி மரங்கள் வெட்டப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இது குறித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. சுற்றுச்சூழல் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவது குறித்து மாநில நெடுஞ்சாலைத் துறை உத்தரவாதம் அளித்தது. இதனை தேசிய பசுமை தீர்ப்பாயம் ஏற்றுக்கொண்டது. இது குறித்து நெடுஞ்சாலைத் துறை தாக்கல் செய்த அறிக்கை: 'இத்திட்டத்தின் முதல்கட்டமாக கொட்டிவாக்கத்தில் இருந்து பாலவாக்கம் இடையே சாலை விரிவாக்கம் செய்வதற்காக 123 மரங்கள் அகற்றப்பட்டன. ஒரு மரம் வெட்டப்பட்டதற்கு 10 மரங்கள் என்ற கணக்கில், மொத்தம் 1,230 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன. மாநில வனத்துறைக்கு ரூ. 53 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது, இரண்டாவது கட்டமாக 758 மரங்களை வெட்டி அகற்றவும், 97 மரங்களை இடம்பெயர்வு செய்து மறு நடவு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும். வெட்டி அகற்றப்படும் 758 மரங்களுக்கு பதிலாக, 7,580 புதிய மரக்கன்றுகள் நடவு செய்யப்படும். இதற்கு 3.26 கோடி ரூபாய் தேவை, இதில் வனத்துறைக்கு, 75 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.நடவு செய்யப்பட்ட மரங்களுக்கு தினமும் தண்ணீர் பாய்ச்சி, பராமரிப்பு செய்து வருகிறோம். 22 மரங்களில் புதிய இலைகள் துளிர்விட்டது. ஏற்கனவே 1,400 மரக்கன்றுகள் நடப்பட்ட நிலையில், வனத்துறையினர் மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கினர். மேலும் 4,200 மரக்கன்றுகள் நவம்பர் இறுதிக்குள் நடப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்புகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, வழக்கை முடித்து வைத்தது.இது குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறியதாவது: நெடுஞ்சாலைத் துறை சுற்றுச்சூழல் வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும். கடந்த காலத்தில், சாலை விரிவாக்க பணிக்காக, மகாபலிபுரம் - மரக்காணம் பகுதியில் நூற்றுக்கணக்கான மரங்கள் வெட்டி அகற்றப்பட்டன. மரங்களை வேறு இடத்திற்கு இடம்பெயர்வு செய்தாலும், பராமரிப்பு குறைபாடு காரணமாக, மரக்கன்றுகள் வாடிப்போயின. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Ramesh Sargam
நவ 27, 2024 13:38

இந்த காலத்தில் மரங்களை வெட்டாமல், அவைகளை அப்படியே வேருடன் பெயர்த்து வேறு இடத்தில நட முடியும். ஏன் மரங்களை வெட்டவேண்டும்? பெங்களூரில், மெட்ரோ விரிவாக்கத்தின்போது Krishnarajapuram முதல் Whitefield வரையில் இருந்த சுமார் நூறுக்கும் மேற்பட்ட மரங்களை அப்படியே வேருடன் பெயர்த்து, Whitefield அருகில் உள்ள ஸ்ரீ சத்திய சாய் பாபா மருத்துவ வளாகத்தில் நட்டனர். ஒரு மரம் கூட வாடவில்லை. எல்லாம் சிறப்பாக வளர்ந்து இன்று பூத்து குலுங்குகிறது. நான் கண்கூடாக கண்டேன். அதேபோல சென்னையிலும் செய்யலாம். மனமிருந்தால், மார்க்கமுண்டு.


veeramani hariharan
நவ 27, 2024 12:07

Please plant 2000 plants first then start the wirk


J.Isaac
நவ 27, 2024 13:54

நடுவார்கள் பராமரிக்கமாட்டார்கள்


வைகுண்டேஸ்வரன்
நவ 27, 2024 12:00

அவங்களால முடியல...


வைகுண்டேஸ்வரன்
நவ 27, 2024 12:00

கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்கம். ஓராண்டாக மெதுவாக நடந்து வந்த பணிகள் இப்போது விரைவாக நடக்கின்றன. NPCB, National Pollution Control Board, அதாவது ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ஒப்புதல் அளித்தும் விட்டது. இவ்வளவு நல்ல விஷயங்கள் இருக்கும் இந்த செய்தியில்.. சிலரின் எதிர்மறையான கருத்துகளைப் பாருங்கள். பாவம். அவங்களால முடியல...


Anantharaman Srinivasan
நவ 27, 2024 10:57

உள்ளத்தில் நல்லயுள்ளம் உறாங்காது. இப்படித்தான் புலம்பும். கலிகாலம்.


பெரிய ராசு
நவ 27, 2024 10:53

எனக்கு தெரிந்து வெட்டிய மரங்களுக்கு எவனும் பதில் மரம் வைப்பதில்லை யாரும் கண்டுகொள்வதில்லை , 50 வருட மரம் கொடுக்கும் பிராணவாயு சிறிய செடி தருமா ? ஜனத்தொகை ஏறுகின்றது ஆனால் மரத்தொகை குறைக்கின்றது ,திராவிட அரசு இயற்கையை அழித்து குன்றை வெட்டி எடுத்து லாரிகளை கொண்டு வெளிமாநிலம் கடத்துகிறது , ஆனால் கேரளா தன வளத்தை பாதுகாத்து கழிவுகளை இங்கு கொன்னுடு போடுகிறான் , தமிழன் விழிக்க வில்லை என்றால் தமிழ்நாடு தழிழன் இருந்தான் என்பர் ஏட்டில் படிக்கவேண்டியது தான்


Barakat Ali
நவ 27, 2024 10:41

மரங்களை இடமாற்றித் தொய்வின்றி, சுணக்கமின்றி பராமரிப்பு செய்யவேண்டும் .....


Rpalnivelu
நவ 27, 2024 10:39

த்ரவிஷன்களால் மர வியாபாரிகளுக்கு லாபம். சுற்று சூழல் ஏன் கால் தூசு


அப்பாவி
நவ 27, 2024 10:19

மரங்களை வெட்டி எடுத்து சாலை போட்டு இந்தியாவை வல்லரசாக்கி, அப்புறம் மழை இல்லை, வெள்ளம் வந்தால் போக இடமில்லைன்னு கதறுவோம்.


S.kausalya
நவ 27, 2024 10:16

2026க்குள் எதில் எல்லாம் காசு பார்க்க முடியுமோ, அதில் எல்லாம் பார்த்து விடுவார்கள். மக்களும் இதை பற்றி கவலை கொள்ளாமல் அந்த தேர்தலில், போன முறையை விட அதிகமாக கொடுக்க வேண்டும் என்பார்கள். சிறிது விழித்து யாரவது கேள்வி ஏதாவது கேட்டால் இருக்கவே இருக்கு, ஆரியன், பார்ப்பான்,மோடி மந்திரம். இவர்களை கடவுளும் கேட்பதில்லை. மனிதர்களும் புறம் தள்ளுவதில்லை. கடவுளும் இவர்களிடம் விலை போய் விட்டாரோ என்று நினைக்க வேண்டி உளளது. எளிய நேர்மையை எதிர்பார்க்கும் மனிதர்களை கடவுளும் கலங்க வைக்கிறாரே என்று உளளது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை