உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கொலை எதிரொலி; கோர்ட்களில் துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு; டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உத்தரவு!

கொலை எதிரொலி; கோர்ட்களில் துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு; டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உத்தரவு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: திருநெல்வேலி கோர்ட் அருகே நடந்த கொலை சம்பவத்தையொட்டி, தமிழகம் முழுவதும் கோர்ட்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.திருநெல்வேலி மாவட்ட கோர்ட் வளாகத்தில் மாயாண்டி என்பவர் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த சென்னை உயர்நீதிமன்றம், 'பாதுகாப்பு விஷயத்தில் போலீஸ் என்ன செய்கிறது?' என, சரமாரியாக கேள்வி எழுப்பியது. கோர்ட் முன்பு, பட்டப்பகலில் கொலை நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியது. இந்த சம்பவத்தையொட்டி, தமிழகம் முழுவதும் கோர்ட்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: தமிழகம் முழுவதும் கோர்ட்டுகளில் பிஸ்டல் துப்பாக்கியுடன் எஸ்.ஐ. மற்றும் துப்பாக்கிகளுடன் ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும்.சம்பந்தப்பட்ட அனைத்து பிரிவு அலுவலர்களும் நடவடிக்கை எடுக்கப்பட்ட அறிக்கையை தலைமை அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு போலீசாருக்கு டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

D.Ambujavalli
டிச 23, 2024 06:16

துப்பாக்கியை இடுப்பில் சொருகிக்கொண்டும், கையில் ஏந்திக்கொண்டும் பந்தா காட்டுவார்கள் ‘எல்லாம்’ முடிந்தபிறகு கொலையாளி தப்பி ஓடிவிட்டான் என்று முழிப்பார்கள்


Mohanakrishnan
டிச 22, 2024 21:39

நாளை பேருந்து நிலையத்தில் ஒரு கொலை நடக்கும். இப்பொழுதே அங்கும் ஒரு துப்பாக்கி ஏந்திய காவலர்கள் நியமிக்கப்படலாம். மேலும் பூங்காக்கு... பூங்காவிலும் கொலை நடக்கலாம். தண்டனை சரியாக கொடுக்கும் வரை இடம் ஒரு இடம் அல்ல


Ram pollachi
டிச 22, 2024 19:13

போலீஸ் கையில் துப்பாக்கி, லத்தி குச்சி எதுவும் இருக்க கூடாது என்ற உத்தரவு போட்டுட்டு இப்போது கைபேசியில் மூழ்கி விட்டார்கள் என்றால் என்ன அர்த்தம் .


N.Purushothaman
டிச 22, 2024 17:19

ராஜீவ் காந்தி கொலையாளியை கட்டியணைத்து உச்சி முகர்ந்தது ஒரு பக்கம் என்றால் ஓட்டு பிச்சைக்காக பயங்கரவாதிக்கு இறுதி ஊர்வலம் நடத்த அனுமதி கொடுத்து பாதுகாப்பும் கொடுத்தது தான் இந்த அரசின் வாழ்நாள் சாதனை ....ராஜீவ் படுகொலைக்கு பிறகு அப்போதைய திருட்டு திராவிட தலைவர் கருணாநிதியின் தீவிரவாதத்திற்கு எதிரான பார்வை மாறியது ....ஆனால் தற்போதைய திருட்டு திராவிட கட்சி மீண்டும் பழைய நிலைக்கு செல்வது அவர்களின் பித்தலாட்டத்தை தோலுரிக்கிறது ..


chidhambaram
டிச 22, 2024 13:50

தைரியம் என்பது ஆய்தத்தால் வருவதுல்லை...உயிருக்கு பயப்படுவர்களின், கையில் ஆய்தம் இருந்தும் ஒரு பலன் இல்லை ....


Srinivasan Krishnamoorthi
டிச 22, 2024 13:12

ஒரு வழியாக போக்குவரத்து காவல் தாண்டி இப்போது சட்டம் ஒழுங்கின் பக்கம் பார்வை திரும்பி விட்டதே நல்லது


SIVA
டிச 22, 2024 13:03

கோவையில் இருபது வெடிகுண்டு வைத்தவன் தியாகி அவன் மரணத்திற்கு மூன்று ஆயிரம் போலீசார் பாதுகாப்பு , முன்னாள் பிரதமரை கொன்றவனுக்கு பொது மன்னிப்பு , இப்படி திராவிட மாடல் என்ற பெயரில் தீவிரவாத மாடல் ஆட்சி நடத்தினால் குற்றம் செய்பவனுக்கு , குற்றம் செய்ய நினைப்பவனுக்கு எப்படி பயம் வரும் .....


அப்பாவி
டிச 22, 2024 13:02

போலுஸ்காரங்க செல்போனை முடக்குங்க.


Rpalni
டிச 22, 2024 12:47

இது பத்தாது. பிணங்களை கொண்டு செல்ல அமரர் ஊர்தியும் படுகாயமடைந்தவர்களை ஏற்றி செல்ல ஆம்புலன்ஸ்ம் தேவை


Murugesan
டிச 22, 2024 11:57

அப்ப துப்பாக்கி இருந்தும் நெல்லையில் சுடவில்லை, இட ஒதுக்கீட்டிலும் லஞ்சம் கொடுத்து வேலையில் சேருகின்றனர், சேர்ந்து ஒன்று ரெண்டு வருடத்தில், லஞ்சமாக கொடுத்த பணத்த திரும்ப பெற நடுத்தர ஏழை மக்களின் பணத்தை வாங்கி பிழைக்கிற 90 சதவீத ஆட்கள் தமிழக அரசு ஊழியர்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை