அன்னிய செலாவணி மோசடி வழக்கு தொழில் வர்த்தகர் வீடுகளில் ஈ.டி., சோதனை
சென்னை: தலை முடியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வோர், சட்டவிரோத பணப்பரிமாற்றம் மற்றும் அன்னிய செலாவணி மோச டியில் ஈடுபட்டது தொடர்பாக, நாகாலாந்தில் திமாப்பூர், அசாமில் கவுகாத்தி, தமிழகத்தில் சென்னை ஆகிய நகரங்களில், அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு தலைமுடி ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதற்கான நிறுவனங்கள், கோவில்களில் காணிக்கையாக செலுத்தப்படும் தலைமுடி, சிகை அலங்கார கடைகளில் பெறப்படும் தலைமுடி போன்றவற்றை கொள்முதல் செய்கின்றன. இத்தொழிலில் ஈடுபட்டுள்ளோர், 11,000 கோடி ரூபாய் அளவுக்கு, சட்டவிரோத பணப் பரிமாற்றம் மற்றும் அன்னிய செலாவணி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக, அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றன. அதன் அடிப்படையில், மூன்று ஆண்டுகளுக்கு முன்பே, அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், நாகா லாந்து மாநிலம், திமாப்பூர், அசாம் மாநிலம் கவுகாத்தி, தமிழகத்தில் சென்னையை சேர்ந்த தொழில் வர்த்தகர்கள் வீடுகளில், தலைமுடி ஏற்றுமதி செய்ததில் சட்ட விரோத பணப்பரிமாற்றம் மற்றும் அன்னிய செலாவணி மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக, அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னையில், வெங்கடேசன் என்பவர் தலைமுடி ஏற்றுமதி தொழிலில் முக்கிய புள்ளியாக செயல்பட்டு வருகிறார். இவர், கோயம்பேடு அருகே நெற்குன்றத்தில் லோகேஷ்வரன் என்பவரின் வீட்டின் இரண்டாவது மாடியில் வசித்து வருகிறார். இந்த வீட்டில் அசாமில் இருந்து வந்திருந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதேபோல, கோடம்பாக்கம் வெள்ளாளர் தெருவில் உள்ள வீடு மற்றும் சூளைமேடு பகுதியில் உள்ள தொழில் வர்த்தகர் ஒருவரின் வீடு என, மூன்று இடங்களிலும் சோதனை நடத்தினர். இச்சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கிய தாக தகவல்கள் வெளியாகி உள்ளன.