போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணாவுக்கு ஈடி சம்மன்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
Your browser doesn’t support HTML5 audio
சென்னை: போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணாவுக்கு ஈடி சம்மன் அனுப்பியுள்ளது. போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா இருவரும் கடந்த ஜூன் 26ல் நுங்கம்பாக்கம் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில் இருவருக்கும் ஈடி சம்மன் அனுப்பியுள்ளது. ஸ்ரீகாந்த் வரும் 28 ம் தேதியும், கிருஷ்ணா வரும் 29ம் தேதியும் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுளளது.வழக்கில் ஏற்கனவே பலர் கைது செய்யப்பட்ட நிலையில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்துள்ளதா என்ற கோணத்தில் விசாரிக்க அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளது.