உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 2 பெண் போலீசார் உயிரிழப்புக்கு தி.மு.க.தான் காரணம்! இ.பி.எஸ்., பகீர் குற்றச்சாட்டு

2 பெண் போலீசார் உயிரிழப்புக்கு தி.மு.க.தான் காரணம்! இ.பி.எஸ்., பகீர் குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை; பெண் காவலர்களுக்கு எந்தவித வசதியும் செய்து தராத தி.மு.க., அரசின் அலட்சியத்தால் இரண்டு பெண் போலீசார் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்த பரிதாபம் ஏற்பட்டுள்ளதாக இ.பி.எஸ்., விமர்சித்துள்ளார். அவரது அறிக்கை: சென்னை மாதவரம் காவல்நிலையத்தைச் சேர்ந்த பெண் காவல் உதவி ஆய்வாளர் ஜெயஸ்ரீ மற்றும் பெண் காவலர் நித்யா ஆகிய இருவரும் ஒரு வழக்கு தொடர்பாக குற்றவாளியைப் பிடிக்க செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சென்றுள்ளனர். மதுராந்தகத்தில் இருவரும் இருசக்கர வாகனத்தில் குற்றவாளிகளைத் தேடிச் சென்றபோது சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் பின்னால் வந்த கார் மோதிய விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.சென்னையில் இருந்து அவர்கள் இருவரும் எப்படிச் சென்றார்கள் என்று தெரியாத நிலையில் மதுராந்தகம் காவல்துறையினரும் அவர்கள் இருவருக்கும் வேண்டிய வாகன வசதிகளை செய்து தராதது கண்டிக்கத்தக்கதாகும்.இந்த அரசின் அஜாக்கிரதையால் பணியின்போது உயிரிழந்த இருவரின் குடும்பங்களுக்கும் உரிய நிவாரணத்தொகை வழங்க வேண்டுமென்றும், அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் உடனடியாக வேலை வாய்ப்பு வழங்க வேண்டுமென்றும், இனிமேலும் இதுபோன்ற துயரச் சம்பவங்கள் நிகழாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தி.மு.க., அரசை வலியுறுத்துகிறேன்.இவ்வாறு அந்த அறிக்கையில் இ.பி.எஸ்., கூறி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Mani . V
நவ 05, 2024 06:18

சேக்கிழார் எழுதிய கம்பராமாயணம் படித்த மேதாவியே, அதுக ரெண்டும் ரீல்ஸ் பைத்தியங்களாம். தெரியுமா? தெரியாதா?


Ramesh Sargam
நவ 04, 2024 20:42

திமுகவுக்கு என்ன ஏதாவது நிவாரணம் கொடுத்து இறந்தவர்களின் குடும்பத்தினரின் வாயையும், பொதுமக்களின் வாயையும் அடைத்துவிடுவார்கள். காவலர்களுக்கு தேவையான வசதி எதையும் ஏற்படுத்திக்கொடுக்க மாட்டார்கள். திமுக அமைச்சர்கள் போகும்போது முன்னாடி ஒரு பத்து வாகனம், பின்னாடி ஒரு பத்து வாகனத்துடன் பத்திரமாக செல்வார்கள்.


m.n.balasubramani
நவ 04, 2024 20:27

உனக்கு மனசாட்சியே இல்லியா


சாண்டில்யன்
நவ 04, 2024 19:28

பின்னால் வந்த கார் மோதிய விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். தேசிய நெடுஞ்சாலையில் இந்த இடம் ஆபத்தானது


S Srinivasan
நவ 04, 2024 18:56

Police drp4t under CM, he tells lies that he is for women empowerment. All these things are exposed poor management of Dept


மோகனசுந்தரம்
நவ 04, 2024 18:17

நீ வேற குருக்க மறுக்க ஓடிக்கிட்டு இருக்குற. ஆக வேண்டிய வேலை பார். உன்னை போன்ற துரோகியை நினைத்தாலே வயித்தெரிச்சலாக உள்ளது.


Apposthalan samlin
நவ 04, 2024 18:01

இதே ரெண்டு பெரும் லடாக் போய் வந்தவர்கள்


Jysenn
நவ 04, 2024 17:28

தூத்தூக்குடியில் 13 நபர்களை துப்பாக்கி சூடு செய்து


Muthu Kumaran
நவ 04, 2024 18:09

Tuticorin incident against public, not police


Sathyanarayanan Sathyasekaren
நவ 04, 2024 19:36

ஜயசேனன் நாட்டின் முன்னேற்றத்தை தடுக்கவேண்டும் என்பதற்காக சர்ச்சில் பாதிரியார் சொன்னார் என்பதற்காக நாட்டிற்கு எதிராக வேலை செய்தால் சுடத்தான் செய்வார்கள்.


புதிய வீடியோ