உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / என்னை அடிமைப்படுத்த முடியாது; இ.பி.எஸ்.,

என்னை அடிமைப்படுத்த முடியாது; இ.பி.எஸ்.,

அன்னூர்: பணத்தாலோ, புகழாலோ என்னை அடிமைப்படுத்த முடியாது என்று கோவையில் நடந்த பாராட்டு விழாவில் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., தெரிவித்துள்ளார். கோவை அன்னூர் பகுதியில் அத்திக்கடவு - அவிநாசி திட்ட கூட்டியக்கத்தின் சார்பில் நடந்த பாராட்டு விழாவில் இ.பி.எஸ்., கலந்து கொண்டார். அப்போது, அவர் பேசியதாவது: ரூ.1652 கோடி செலவில் உருவாக்கப்பட்ட அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை மாநில அரசின் நிதியில் இருந்து முடிக்க உத்தரவிட்டேன். அ.தி.மு.க., ஆட்சியின் போது, 85 சதவீத பணிகள் முடிக்கப்பட்டது. அதன்பிறகு, தி.மு.க., ஆட்சி அமைந்த உடன், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இந்தத் திட்டத்தை 4 ஆண்டுகளாக கிடப்பில் போட்டு விட்டனர். மேட்டுப்பாளையத்தில் இருந்து பவானி வரை 6 தடுப்பணைகள் கட்ட உத்தரவிடப்பட்டது. ஆனால் ஒரு தடுப்பணை அமைக்கும் பணி 40 சதவீதம் முடிந்தது. தி.மு.க., ஆட்சி அமைந்ததும் அந்தத் திட்டங்களும் கிடப்பில் போடப்பட்டு விட்டது. அத்திக்கடவு - அவிநாசி திட்டம் போல தமிழகத்தில் இதுவரையில் எந்த திட்டமும் வரவில்லை. இந்தத் திட்டத்தை நிறைவேற்றியதன் மூலம் பிறவிப் பயனை அடைந்து விட்டேன். இந்தத் திட்டத்திற்காக எந்த முயற்சியும் செய்யாமலேயே வந்து, திட்டத்தை திறந்து வைப்பர்களும் உள்ளனர். மத்திய அரசை எதிர்பார்க்காமல் மாநில அரசு நிதியை ஒதுக்கி திட்டத்தை தொடங்கி வைத்தேன். மக்கள் நலனை பற்றி தி.மு.க., அரசுக்கு அக்கறையில்லை. திறமையற்ற அரசு தான் செயல்பட்டு வருகிறது. பணத்தாலோ, புகழாலோ என்னை அடிமைப்படுத்த முடியாது. யாருக்கும் நான் அடிமையாக மாட்டேன். 2026ல் அ.தி.மு.க., ஆட்சி மீண்டும் அமைந்தவுடன் அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தின் 2வது கட்டப்பணி தொடங்கப்படும். எனக்கு எடுக்கும் இந்த நன்றி பாராட்டு விழாவை, விவசாயிகளின் பாராட்டு விழாவாக பார்க்கிறேன், இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

அப்பாவி
பிப் 10, 2025 13:31

சின்னம்மா காலில் விழுந்து சி.எம் ஆன சீனெல்லாம் நினைவுக்கு வருதே கோவாலு...


மணியன்
பிப் 10, 2025 09:19

அவினாசி-அத்திக்கடவு திட்டம் அப்பகுதி மக்களின் அவர்களுடைய சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி .போராட்டத்தைக்கண்டு பயந்து வேறுவழியின்றி அரசு அதை செயல்படுத்த வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டது.பி.ஏ.பி திட்டத்தில் காமராஜர் விட்டுச்சென்ற ஆனமலையாறு-நல்லாறு திட்டத்தை இரு கழகங்களும் இதுவரை செய்யாமல் கொங்கு மக்களை ஏமாற்றி கொள்ளையடித்துக்கொண்டுள்ளனர்.


Senthoora
பிப் 10, 2025 07:30

அம்மாவுக்கு கூண்பாண்டியாக இருந்ததை மறந்துவிட்டார்.


Kasimani Baskaran
பிப் 10, 2025 06:18

ஆத்தா திம்க்கா மாறும் தாத்தா தீம்க்கா ஆகிய இரண்டு கட்சிகளுமே இந்து விரோத கபட வேடதாரிகள் நிறைந்தவை. நல்ல திட்டங்களை ஊழல் மூலம் நாசம் செய்வது இரண்டு கட்சிகளின் அடிப்படை குணாதிசயம். அத்திக்கடவு திட்டத்தை வைத்து அரை நூற்றாண்டுக்கு மேல் பொழுதை ஓட்டிக்கொண்டு இருக்கிறார்கள். காமராஜரை விமர்சிப்பார்கள் - ஆனால் அவர் காலத்தைய காங்கிரஸ் ஆட்சியில் போடப்பட்ட ஓரிரு திட்டங்கள் கூட இவர்களின் அரை நூற்றாண்டில் முடிக்கப்படவில்லை. ஒருவர் மீது அடுத்தவர் லேபல் ஓட்டுவதில் நிபுணர்கள்...


J.V. Iyer
பிப் 10, 2025 04:58

இந்த 2025 ஈரோடு தேர்தலில் திமுகவுக்கு கிடைத்த ஓட்டுக்களை பாருங்கள்? அது போனமுறை அதிமுக மற்றும் திமுக பெற்ற ஓட்டுக்களை கூட்டினால் கிடைக்கும். அதுபோல, இந்த முறை ந.தா.க பெற்ற வாக்குகள், போனமுறை ந.தா.க. மற்றும் பாஜக பெற்ற ஓட்டுக்களை கூட்டினால் வரும். எனவே இரண்டு கழகங்களும், ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்பது தெளிவாகிறது. இப்போது எம்ஜியார், ஜெயலலிதா இருந்தால் இந்த அதிமுகவை அழித்திருப்பார்கள். 2026ல் திமுக, அதிமுக ஒன்றாகச்சேரும் என்பது மக்களின் கணிப்பு.


naranam
பிப் 10, 2025 03:50

இவருடைய திமிரும் அகம்பாவமும் அதிமுகவை அழித்துவிடும்.


தாமரை மலர்கிறது
பிப் 10, 2025 01:20

கழுத்தில் சங்கிலி இல்லாமல் நாய் வெளியே வராது. அதே மாதிரி தான் நம்ம எடுபிடியும். எடுபிடியின் மூக்கணாங்கயிறு அமித்ஷாவிடம் உள்ளது என்று அனைவருக்கும் தெரியும்.


Laddoo
பிப் 09, 2025 22:50

இவர் தலைமையில் அதிமுக மயான அமைதியில் உள்ளது


Anantharaman Srinivasan
பிப் 09, 2025 22:40

இனிமேலும் என்னை அடிமைப்படுத்த முடியாது. முதல்வர் ஆவதற்காக சசிகலா காலில் விழுந்து ... டயரை குனிந்து பார்த்து Already அடிமையாகி விட்டேன்.


Balasubramaniam
பிப் 09, 2025 22:39

அவிநாசி அத்திக்கடவு நாயகன் எடப்பாடியார்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை