உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  மாற்றுத்திறனாளி மாணவர்களை தேடும் கல்வி நிறுவனங்கள்

 மாற்றுத்திறனாளி மாணவர்களை தேடும் கல்வி நிறுவனங்கள்

- நமது நிருபர் -நம் நாட்டில், மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் சட்டம், 2016ன் படி, அனைத்து அரசு மற்றும் உதவி பெறும் கல்வி நிறுவனங்களில், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு, 5 சதவீத ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்த ஒதுக்கீட்டின் கீழ், கலை, அறிவியல், பொறியியல், மருத்துவம், வேளாண் உள்ளிட்ட உயர்கல்வியில் சேரலாம். கலை படிப்புகளில், மாற்றுத்திறனாளிகள் மாணவர் சேர்க்கை, ஓரளவு நிரம்புகிறது. அதேநேரம், மருத்துவம், வேளாண் உள்ளிட்ட படிப்புகளில், 1 - 3 சதவீதத்திற்கு கீழ் தான், ஒவ்வொரு ஆண்டும் மாணவர் சேர்க்கை நடக்கிறது. இதையடுத்து, மாற்றுத்திறனாளிகள் ஒதுக்கீட்டில் சேர, மாணவர்கள் இருந்தால் சேர்த்து விடுங்கள் என, வேளாண் கல்வி நிறுவனங்கள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையை அணுகியுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !