உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கருணாநிதியை எதிர்த்து பிரச்சாரம் : இளங்கோவன் ஆவல்

கருணாநிதியை எதிர்த்து பிரச்சாரம் : இளங்கோவன் ஆவல்

ஈரோடு: ''தீவிரவாத சக்திக்கு ஆதரிவு தெரிவிக்கும் கருணாநிதியை எதிர்த்து பிரச்சாரம் செய்வோம்,'' என, முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவன் கூறினார்.

'உள்ளாட்சி தேர்தலில் தனித்துப்போட்டி' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளது குறித்து, காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவன் கூறியதாவது: கருணாநிதியின் இந்த அறிவிப்பு, காங்கிரஸின் உண்மையான தொண்டர்களுக்கும், இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கும் பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. உள்ளாட்சி தேர்தலில், காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட்டால், தி.மு.க., கூட்டணியில் இருந்து பெறும் வெற்றியைவிட கூடுதலாக பெறுவோம். அது மிகப்பெரிய வெற்றியாக காங்கிரஸுக்கு அமையும்.

உள்ளாட்சியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகம் செய்யும்போது, ஊழலற்ற, திறமையான பணி செய்வோம். மக்களின் அடிப்படை தேவையான சாலை வசதி, கழிப்பறை வசதி போன்றவற்றை செய்து கொடுப்பது காங்கிரஸின் திட்டமாக இருக்கும். மக்களின் அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பது குறித்து பிரச்சாரம் செய்வோம். அதேநேரம், தீவிரவாத சக்திக்கு ஆதரவு தெரிவித்துள்ள கருணாநிதியை எதிர்த்தும் பிரச்சாரம் செய்வோம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ