உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / போதையில் கார் ஓட்டிய திமுக சேர்மன்; முதியவர் உயிரிழப்பால் அதிர்ச்சி!

போதையில் கார் ஓட்டிய திமுக சேர்மன்; முதியவர் உயிரிழப்பால் அதிர்ச்சி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருப்பூர்: திருப்பூர் அருகே போதையில் கார் ஓட்டி சென்ற திமுக பேரூராட்சி சேர்மன், டூவீலர் மீது மோதி விபத்தை ஏற்படுத்தினார். அதில், முதியவர் பரிதாபமாக இறந்தார்.திருப்பூர் மாவட்டம், சாமளாபுரம், கருகம்பாளையத்தை சேர்ந்தவர் பழனிசாமி, 57. இவர் இன்று (செப்.,10) மாலை, அப்பகுதியில் டீக்கடைக்கு டூவீலரில் சென்று விட்டு, வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது அதே ரோட்டில் வந்த கார், டூவீலர் மீது மோதி விபத்து ஏற்பட்டது. அதில், பழனிசாமி பரிதாபமாக இறந்தார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=wa8g956o&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0காரில் இருந்தவர் போதையில் இருப்பது தெரிந்தது. பொதுமக்கள் திரண்டு வருவதை பார்த்த அவர், காரை வேகமாக எடுத்து தப்பி சென்றார். மங்கலம் போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விட்டு விசாரித்தனர். அதில், விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி சென்றது, சாமளாபுரம் திமுக பேரூராட்சி சேர்மன், கருகம்பாளையம் ராம் நகரை சேர்ந்த விநாயகா பழனிசாமி, 60 என்பது தெரிந்தது. வீட்டுக்கு சென்ற போலீசார் விபத்து ஏற்படுத்திய அவரை ஸ்டேஷனுக்கு விசாரணைக்கு அழைத்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 31 )

Kasimani Baskaran
செப் 11, 2025 04:11

போதையில் கொலை செய்த ஒரு நபரை கைது செய்யாமல் விசாரிப்பது கண்டனத்துக்குரிய, சுத்தமான திராவிடத்தனம். இதெல்லாம் ஆண்டவனுக்கே அடுக்காது...


Shivakumar
செப் 11, 2025 03:42

கவலை வேண்டாம் சேர்மன் சார் ...ஒரு இரண்டு மாதம் கழித்து பிணையில் விட்டுவிடுவார்கள். பிறகு அப்படியே சிறிது நாட்கள் கழித்து விடுதலை கிடைத்துவிடும். எனவே கவலை பட வேண்டாம்.


இராம தாசன்
செப் 11, 2025 01:15

அந்த காரை ஓட்டியது யாரு என்று கண்டு பிடிக்க தனி படை அமைக்க படும்.. அது 10 வருடம் கழித்து அறிக்கை கொடுக்கும் - ஒட்டியது யார் என்று தெரியவில்லை என்று


Raj S
செப் 10, 2025 23:59

நம்ம மா.சு. "சார்" வந்து சொல்லுவாப்ல, அது உற்சாக பானம், மது இல்லனு...


தமிழன்
செப் 10, 2025 21:47

ஆல்ரெடி முன்பணம் கட்டியாச்சு அரசு நாளை அறிவிக்கும் கவலை வேண்டாம் அவர் குடும்பத்திற்கு நிவாரண தொகை அல்லது நஷ்ட ஈடு


pakalavan
செப் 10, 2025 21:35

விவசாயிகள் மேல காரை ஏத்தி கொலைசெஞ்ச பாஜக எம்பி இன்னும் தன்டணை பெறாம இருக்கார்


வாய்மையே வெல்லும்
செப் 10, 2025 21:56

எப்படி மடைமாற்றி பேச்சை திசைதிருப்புவது என்பதில் பட்டம் பெற்றவர்கள்.


krishna
செப் 11, 2025 01:25

ADI MUTTALE ADHAI SEIDHADHU MP ILLAI.AVAR MAGAN.IPPODHU JAILIL ULLAR.MURASOLI MATTUM PADITHU KEVALA JENMAMA ALAYAADHE..UN SANDHADHI AAVADHU MUNNERATTUM.MURASOLI PADIPPADHAI NITUTHU 200 ROOVAA OOPIS COOLIE.


Modisha
செப் 10, 2025 21:31

இந்த கட்சி என்றைக்கு ஒழியும்.


Rajasekaran
செப் 10, 2025 21:23

இவருக்கு மாவு கட்டு போடுவார்களா?


V Venkatachalam
செப் 10, 2025 22:33

மாவுக்கட்டு போட்ட மாதிரி ப்ரி வெட்டிக் போட்டோ ஷூட் நடத்தி அந்த போட்டோவை போடுவாய்ங்க.


Shivakumar
செப் 11, 2025 03:43

இப்படி கேட்டால் உங்களுக்கு தான் மாவு கட்டு.


எஸ் எஸ்
செப் 10, 2025 21:13

திகழ் ஓவியரின் கருத்தை அறிய ஆவல்


திகழ்ஓவியன்
செப் 10, 2025 21:12

அய்யா ஒருவர் MLA ஆக அப்பா முதல்வர் ஆக இருக்க கூடாது என்று CONSTITUTION இல் இருக்கா , இல்லை மந்திரி ஆக என்ன தகுதி MLA , துணை ஆக MLA போதும் இல்லையா , குடும்ப கட்சி , அதை அந்த கட்சி தொண்டன் தான் முடிவுசெயனும் எதிர்க்கணும் , ஏன் உங்களுக்கு வீரம் இருந்த இந்த காரணம் சொல்லி வோட்டு கேளுங்கள்


vivek
செப் 11, 2025 06:30

திராவிட கும்பலே மறை கழன்ற கேசு...அதில் திகழ் இருக்கிறார்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை