வாசகர்கள் கருத்துகள் ( 2 )
நீக்கியது எதுக்காக? அண்ணாமலையை தோற்கடிக்க .அதுக்குத்தான் இந்த விருது .
கோவை கலெக்டருக்கு எதற்கு விருது? லட்சக்கணக்கான வாக்காளர்களை வாக்கு பட்டியலிலிருந்து சப்தமின்றி நீக்கியதற்கா?
சென்னை: தேர்தல் மற்றும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் சிறப்பாக செயல்பட்டதற்காக திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கோவை மாவட்ட கலெக்டர்களுக்கு தேர்தல் கமிஷன் விருது அறிவித்து உள்ளது.இது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: சிறந்த மாவட்ட தேர்தல் அதிகாரி(டி.இ.ஓ.,), சிறந்த தேர்தல் பதிவு அதிகாரி(இ.ஆர்.ஓ.,), சிறந்த பூத் மட்டத்திலான அதிகாரி(பி.எல்.ஓ.,) மற்றும் சிறப்பு விருதுக்கு அதிகாரிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இந்த விருதுகள் வரும் 25ம் தேதி( தேசிய வாக்காளர் தினம்) சென்னை கலைவாணர் அரங்கில் காலை10:30 மணிக்கு நடக்கும் விழாவில் கவர்னர் ரவி வழங்க உள்ளார். விருது பெறுவோர் விவரம்சிறந்த டி.இ.ஓ.,
1. திருவண்ணாமலை கலெக்டர் பாஸ்கர பாண்டியன்(18-19 வயதுடைய வாக்காளர்களை பட்டியலில் சேர்த்தல்)2. காஞ்சிபுரம் கலெக்டர் கலைசெல்வி மோகன்( சிறந்த வாக்காளர் பட்டியலை கையாளுதல்)3. கோவை கலெக்டர் கிராந்தி குமார்( தேர்தல் நிர்வாகம்)சிறந்த இ.ஆர்.ஓ.,
சங்ககிரி ஆர்.டி.ஓ., லோகநாயகி( வாக்காளர் பட்டியல் நிர்வாகம் உள்ளிட்ட பணிகளுக்காக)2. ராசிபுரம் ஆர்.டி.ஓ., பார்த்திபன்( தேர்தல் நிர்வாகம்)3. சிதம்பரம் சப் கலெக்டர் ரேஷ்மா ராணி( தேர்தல் நிர்வாகம்)சிறந்த பி.எல்.ஓ.,
1.புதுச்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை பஞ்சாயத்து யூனியன் பள்ளி சத்துணவு திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயாம்பிகை2.கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளி தலைமை ஆசிரியர் ஜெபா ராஜன்3. திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அங்கன்வாடி பணியாளர் சிவசக்தி4. ஈரோடு மாவட்டம் பெருந்துரை பள்ளியின் மதிய உணவு திட்ட ஒருங்கிணைப்பாளர் பார்வதி5.தஞ்சாவூர்மாவட்டம் திருவையாறு பொனவரை பள்ளியின் மதிய உணவு திட்ட ஒருங்கிணைப்பாளர் வாசுகி6.சிவகங்கை மாவட்டம் மானாமதுரை. கழுவன்குளம் கிராம வி.ஏ.ஓ., இளையராஜா7. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை ஆண்டனூர் வி.ஏ.ஓ., இளவரசி8. விருதுநகர், மாவட்டம் திருச்சுலி பன்னிகுடி கிராம உதவியாளர் நெப்போலியன்9. தேனி, ஆண்டிப்பட்டியின் சீனிவாசநகரில் உள்ள அங்கன்வாடி மைய ஊழியர் மலர்செல்வி10. திருப்பத்தூர் மாவட்டம் வசந்தபுரம் டேங்க் ஆபரேட்டர் முருகன் ஆகியோருக்கும்சிறப்பு விருது
திருச்சி கலெக்டர் பிரதீப் குமார்கோவை மாவட்டம் பொள்ளாச்சி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கேத்தரீன் சரண்யாவுக்கும்திருப்பத்தூர் தேர்தல் பிஏ ஜெயராமன் ஆகியோருக்கும் வழங்கப்படுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
நீக்கியது எதுக்காக? அண்ணாமலையை தோற்கடிக்க .அதுக்குத்தான் இந்த விருது .
கோவை கலெக்டருக்கு எதற்கு விருது? லட்சக்கணக்கான வாக்காளர்களை வாக்கு பட்டியலிலிருந்து சப்தமின்றி நீக்கியதற்கா?