உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மின் வாரிய ஒப்பந்த ஊழியர்கள் போராட்டம் 

மின் வாரிய ஒப்பந்த ஊழியர்கள் போராட்டம் 

சென்னை : தமிழக மின் வாரிய ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில், மின் வாரியத்தில் பணிபுரியும், ஒப்பந்த ஊழியர்களை, பணி நிரந்தரம் செய்ய கோரி, சென்னை அண்ணா சாலை பின்புறம், நேற்று தொடர் முழக்க போராட்டம் நடந்தது. இது குறித்து, சங்க நிர்வாகிகள் கூறியதாவது: மின் வினியோகப் பிரிவு, மின் நிலையங்களில், 6,000க்கும் அதிகமான ஒப்பந்த ஊழியர்கள் பணிபுரிகின்றனர். அவர்கள் அனைவரையும் அடையாளம் கண்டு, பணி நிரந்தரம் செய்ய வேண்டும். கடந்த பத்து ஆண்டுகளில், 300க்கும் அதிகமான ஒப்பந்த ஊழியர்கள், பணியின் போது உயிரிழந்துள்ளனர். அவர்களின் குடும்பத்திற்கு வாரிசு வேலை, பணப்பயன் வழங்க வேண்டும். ஐந்து முதல், 20 ஆண்டுகளுக்கு மேல், மின் வினியோகப் பணியில் அனுபவம் உள்ள, ஒப்பந்த ஊழியர்களை, எவ்வித தேர்வும் இல்லாமல், நேரடியாக பணியமர்த்த வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர். ***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ