உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 4 மாதமாகியும் நிதிநிலை அறிக்கை வெளியிடாத மின்சார வாரியம்

4 மாதமாகியும் நிதிநிலை அறிக்கை வெளியிடாத மின்சார வாரியம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் செலவு செய்யும் மின் வாரியம், 2024 - 25ம் நிதியாண்டு முடிவடைந்து நான்கு மாதங்களாகியும், அந்த ஆண்டின் வரவு - செலவு அடங்கிய நிதிநிலை அறிக்கையை வெளியிடாமல் உள்ளது. தமிழக மின் வாரிய மானது, மின் உற்பத்தி கழகம், மின் பகிர்மான கழகம், மின் தொடரமைப்பு கழகம், பசுமை எரிசக்தி கழகம் ஆகிய நிறுவனங் களாக செயல்படுகிறது. தமிழகம் முழுதும் மின் வினியோகம் செய்வது உட்பட, மக்களுடன் நேரடி தொடர்பில் உள்ள மிக முக்கியமான நிறுவனமாக மின் பகிர்மான கழகம் உள்ளது. இந்நிறுவனம், 2023 - 24ல் மின் கட்டணம் வாயிலாக, 98,883 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியது. அதேசமயம் செலவு, 1.08 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. மின் கொள்முதலுக்கு மட்டும், 55,892 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டது. நடப்பு நிதியாண்டு துவங்கி, நான்கு மாதங்கள் முடிவடைந்து விட்டன. ஆனாலும், 2024 - 25ம் நிதியாண்டிற்கான வரவு - செலவு உள்ளிட்ட விபரங்கள் அடங்கிய நிதிநிலை அறிக்கையை வெளியிடாமல், மின் வாரியம் தாமதம் செய்கிறது. இதனால், அந்த விபரங்களை மக்களால் தெரிந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், 'கடந்த நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கை தயாரிக்கும் பணி முடிந்து தணிக்கையில் உள்ளது; விரைவில் வெளியிடப்படும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

JAYACHANDRAN RAMAKRISHNAN
ஆக 14, 2025 12:08

அணில் கம்ப்யூட்டர் ஒயர்களை சேதப்படுத்தி விட்டதால் இந்த வருடம் நிதி நிலை அறிக்கை வெளியிட முடியாது. மன்னிக்கவும்.


Eswaran Eswaran
ஆக 14, 2025 08:41

விவசாயம் இலவச மின்சாரம் அறிவித்து இன்னும் வழங்கபடவில்லை. விவசாயிகள் ஏமாற்றபட்டது. மாதம் மகளிர் உரிமைதொகை கொடுக்கும் அரசு விவசாயத்துக்கு அறிவிப்னை ஏன் இன்னும் வழங்கபடவில்லை


Varadarajan Nagarajan
ஆக 14, 2025 07:52

மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வழிகாட்டுதலின்படி ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்திற்குள் முந்தய ஆண்டின் நிதிநிலையை சமர்ப்பிக்கவேண்டும் என தெளிவாக கூறுகின்றது. அதேபோல் அப்படி சமர்பிக்காவிட்டால் மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நடவடிக்கை எடுக்கலாம் அபராதமும் விதிக்க விதிகள் உள்ளது. ஆனால் ஒருமுறைகூட இந்த இரண்டுமே நடந்ததில்லை. ஆணையம் இந்த ஆவணங்களை பரிசீலனை செய்யவேண்டும். மாறாக வரவு லாவ் கணக்குகள் இல்லாமலேயே ஆணையம் தாமாக முன்வந்து மின்கட்டணத்தை உயர்த்த அனுமதி அளித்த வரலாறும் உள்ளது. மின் கட்டணத்தை எவ்வளவு உயர்திக்கொடுத்தாலும் வாரியம் மேலும் மேலும் நஷ்ட கணக்கைத்தான் அளிக்கின்றது. அதை கேள்வி கேட்கவேண்டிய ஆணையமும் பார்த்துக் கொண்டு தான் உள்ளது.


Raj
ஆக 14, 2025 06:45

நிதி இருந்தால் தானே நிலைமை வெளியிடமுடியும், நிதி எல்லாம் நிதியிடம் அல்லவா இருக்கிறது.


ManiMurugan Murugan
ஆக 14, 2025 04:08

எப்படி எல்லாம் பொய் கணக்கு எழுதலாம்னு பேச்சு வார்த்தை நடக்குது போல அயர்லாந்து வாரிசு திராவிட மாடல் ஓட்டை விளம்பர மோக கட்சி தி மு கா கூட்டணிக்குள்


Kumar Ramamurthi
ஆக 14, 2025 02:51

தெரிந்துகொண்டு என்ன செய்யப் போகிறோம். எப்படி இருந்தாலும் நஷ்டக்கணக்குதான். இதில் சான் போனால் என்ன, முழம் போனால் என்ன லாபம் வந்தால் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும். அணில் போனதால் மின் திருட்டு, பாம்பு போனதால் மின் திருட்டு, கட்டணத்தை உயர்த்தினால் நஷ்ட்டம், இதே பாட்டுதான் பாடப்போகிறார்கள்