உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மின்வாரிய அறிவிப்பால் விவசாயிகள் கொந்தளிப்பு: சூடாகிறது சோலார் பம்ப்செட் விவகாரம்

மின்வாரிய அறிவிப்பால் விவசாயிகள் கொந்தளிப்பு: சூடாகிறது சோலார் பம்ப்செட் விவகாரம்

கோவை: சோலார் பம்ப்செட் நிறுவியுள்ள விவசாயிகளுக்கு, இலவச மின் இணைப்பு வழங்கப்படமாட்டாது என, தமிழ்நாடு மின் வினியோகக் கழகம் அறிவித்துள்ளது. இதற்கு, விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.தமிழகத்தில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. ஆண்டுதோறும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான விவசாயிகளுக்கு, இலவச மின் இணைப்பு, பதிவு மூப்பு அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், கடந்த 8ம் தேதி, தமிழ்நாடு மின் வினியோக கழகம் (டி.என்.பி.டி.சி.எல்.,) புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. இதன்படி, விவசாயிகள் தாங்களாகவோ, அரசின் மானியத் திட்டங்கள் ஏதாவது ஒன்றின் வாயிலாகவோ, விவசாய நிலத்துக்கு சோலார் பம்ப் நிறுவியிருந்தால், அவர்களுக்கு இலவச மின் இணைப்பு வழங்க வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.தாழ்வழுத்த கட்டணம் 4வது மானியத் திட்டத்தின் கீழும், புதிதாக விவசாய மின் இணைப்பைப் பெற முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு, விவசாயிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.விவசாயிகள் கூறியதாவது: மின்சாரம் இன்றி, விவசாயம் செய்யவே முடியாது. மின் இணைப்புக்குக் கட்டணம் செலுத்துவது பெரும் சுமையாகவே முடியும். இந்நிலையில், சோலார் பம்ப்செட் நிறுவியுள்ள விவசாயிகளுக்கு, இலவச மின் இணைப்பு இல்லை என்ற அறிவிப்பு முட்டாள்தனமானது. சோலார் மின் உற்பத்தியை ஊக்குவிக்க வேண்டிய அரசு, அதைத் தடுப்பதற்கான அனைத்து வழிகளையும் செய்து வருகிறது. கோவை, திருப்பூர் மாவட்டங்களில் விவசாயம் நிலத்தடி நீரை மட்டுமே நம்பி உள்ளது. இலவச மின் இணைப்பு இன்றி, விவசாயிகளால் கட்டுபடியாகக்கூடிய வகையில் விவசாயம் செய்ய முடியாது. இத்திட்டத்தை உடனே திரும்பப்பெற வேண்டும்.இவ்வாறு, விவசாயிகள் தெரிவித்தனர்.தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் பழனிசாமி கூறியதாவது:விவசாயத்தைக் காலி செய்ய வேண்டும் என்பதற்காகவே, வெளியிடப்பட்ட அறிவிப்பு இது. கோவை, திருப்பூர் மாவட்டங்களில் ஏரி, குளம், ஆற்றுப்பாசனம் இல்லை. நிலத்தடி நீரை நம்பியே விவசாயம் செய்கிறோம். இங்கு அதிகபட்சம் 4,000 கிணறுகள் இருக்கும். மற்றவர்கள், ஆழ்துளைக் கிணறை நம்பித்தான் உள்ளனர்.நிலத்தடி நீர்மட்டம் 1,200 அடிகளைத் தாண்டி விட்டது. மின் இணைப்பு இல்லாமல் என்ன செய்வது. இந்த அறிவிப்பு விவசாயிகளுக்கு நெருக்கடியை உருவாக்கும். அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

'மின்சார சூடு' தி.மு.க., அறியாததல்ல!

விவசாயிகள் கூறுகையில், 'மின் கட்டணம் தொடர்பான போராட்டத்தில், 1970களில் இரண்டு முறை நடந்த போராட்டத்தில், 19 பேர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தனர். அப்போது முதல்வராக இருந்தவர் கருணாநிதி. 2011ல் தி.மு.க., ஆட்சி பறிபோக, முக்கியக் காரணமும் மின்சாரம்தான். மின்சாரத்தால் சூடுபட்டுக் கொள்வது, தி.மு.க.,வுக்கு புதிதல்ல. தற்போது கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக இருப்பவர், மின்துறை அமைச்சர்தான். விவசாயிகளுக்கு எதிரான இந்த உத்தரவை திரும்பப் பெற வேண்டும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Vasan
ஏப் 14, 2025 09:15

This announcement withdrawal of free electricity to farmers, who have installed solar pump sets subsidised by Government may be bury the other hot news about Ponmudis derogatory speech against Tamilnadu women.


Gurumurthy Kalyanaraman
ஏப் 14, 2025 12:08

சரியான கருத்து.


rama adhavan
ஏப் 14, 2025 08:59

சோலார் மின்சாரத்தை என்ன செய்வார்கள் விவசாயிகள்? விற்கவா செய்வார்கள்? அதிலும் லாபம் பார்க்கவா.நல்ல வேலை, உலர்த்த, பரம்படிக்க அரசு நிலம் தங்கள் நிலத்துக்கு பக்கத்திலேயே கேட்கவில்லை. சந்தோஷப்படுவோம்.


தமிழன்
ஏப் 14, 2025 10:55

சோலார் பேனல் அமைக்க விவசாயிகளுக்கு 50 சதவீதம் மானியம் மத்திய அரசால் வழங்கப்படுகிறது சோழர் பேனல் அமைத்த பின்பு கிடைக்கும் மின்சாரத்தை தேவைக்கு அதிகமாக இருந்தால் அரசுக்கு விற்க முடியும் அதற்கு ஒரு யூனிட்டுக்கு நான்கு ரூபாய் என்று மத்திய அரசு விலை நிர்ணயம் கூட செய்துள்ளது தமிழ்நாட்டைத் தவிர மற்ற மாநிலங்களில் விவசாயிகளுக்கு சோலார் மின் உற்பத்தி மூலமும் வருமானம் வருகிறது தமிழ்நாட்டில் சோழர் மின் உற்பத்தி செய்தால் அரசின் மூலம் தண்டனை தான் கிடைக்கிறது இரண்டு நாள் தொடர்ந்து மேகமூட்டத்துடன் காணப்பட்டால் பயிர்களுக்கு எப்படி நீர் பாய்ச்சுவது? சோலார் மின்சாரம் வெயில் இருக்கும் போது மட்டும் தான் வேலை செய்யும் இது கூட தெரியாத முரசொலி வாசகர் தமிழ்நாட்டை ஆள்வது தமிழ்நாட்டிற்கு பேராபத்து இது போன்ற ஒரு நபரை முதலமைச்சராக தேர்ந்தெடுத்ததன் மூலம் தமிழர்கள் தங்களை தங்களை முரசொலி வாசகர்கள் என்று நிரூபித்துக் கொள்கிறார்கள்


Rajan A
ஏப் 14, 2025 08:28

அரசே எல்லாம் செய்ய வேண்டும் என்று நினைப்பது முட்டாள்தனம். விவசாயிகள் ஒன்று சேர்ந்து ஏன் நீர் நிலைகள் சுத்தம் செய்தல் மற்றும் பராமரிப்பு செய்ய கூடாது?


Kannan Chandran
ஏப் 14, 2025 08:45

வரி வாங்குவதும் அதை பங்கிட்டு கொள்ளையடிப்பது மட்டுமே விடியலில் அரசின் வேலையோ?.


சுராகோ
ஏப் 14, 2025 08:51

நாங்கள் எல்லாவாற்றையும் செய்துகொள்கிறோம் நீங்கள் வரி வாங்குவதை நிப்பாட்டிக்கொள்ளுங்கள் மற்றும் மக்கள் செய்யும் நல்ல விஷயங்களுக்கு அரசியல் வியாதிகள் இடையூறாக இல்லாமல் இருக்கமுடியுமா?


ஆரூர் ரங்
ஏப் 14, 2025 09:07

அது போன்ற குடி மராமத்து பணியை அரசே நிறுத்தி விட்டு பொதுப்பணித் துறையே நேரடியாக செய்கிறார்கள். மணல் திருட்டு மாஃபியா களுக்கு உதவியாக உள்ளது,?


Paramasivam
ஏப் 14, 2025 11:52

முதல்வர் பதவியில் இருந்து இறங்கச்சொல், நாங்களே ஆண்டுகொள்கிறோம்.


இந்தியன்
ஏப் 14, 2025 08:11

யாரு கேட்டாலும் போய் சொல்லு...இதுதாண்டா திராவிட மாடல்...இதுதாண்டா விடியல் மாடல்...


புதிய வீடியோ