உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தவெக கொடியில் யானை சின்னம்: பதிலளிக்க விஜய்க்கு உத்தரவு

தவெக கொடியில் யானை சின்னம்: பதிலளிக்க விஜய்க்கு உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: த.வெ.க., கட்சிக் கொடியில் யானை சின்னம் பயன்படுத்துவதற்கு தடை கேட்டு தொடரப்பட்ட வழக்கிற்கு பதிலளிக்கும்படி அக்கட்சி தலைவர் விஜய்க்கு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.நடிகர் விஜயின் த.வெ.க., கட்சிக் கொடியில் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்துடன் இரண்டு யானைகளும், வெற்றியை குறிக்கும் வாகைப்பூவும் இடம்பெற்றுள்ளது. இந்தக் கொடி அறிமுகம் செய்யப்பட்ட போதே எதிர்ப்பு கிளம்பியது. தேர்தல் கமிஷனிலும் புகார் அளிக்கப்பட்டு இருந்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=eo3b7hny&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில பொதுச்செயலர் பெரியார் அன்பன் உரிமையையில் நீதிமன்றத்தில், த.வெ.க., கொடியில் யானை சின்னத்தை பயன்படுத்த தடை கேட்டு வழக்கு தொடர்ந்தார். இதனை பயன்படுத்துவது தேர்தல் சின்னங்கள் விதிகளுக்கு எதிரானது எனவும் கூறியிருந்தார்.இதனை விசாரித்த நீதிமன்றம், இந்த வழக்கு குறித்து ஏப்.,29க்குள் பதிலளிக்கும்படி நடிகர் விஜய்க்கு உத்தரவிட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Balasubramanian
ஏப் 18, 2025 05:39

அட யானை இல்லை என்றால் பூனை! ஏதோ ஒரு மிருகம்!தேர்தல் முடிவுகள் தெரிந்து பிறகு சீனியர் உலக நாயகன் மாதிரி பம்ம வேண்டியதுதான்! இதற்கு எந்த மிருகம் ஆனால் என்ன?


vijai hindu
ஏப் 18, 2025 11:50

டைனோசரஸ் ஃப்ரீயா இருக்கு அதை போட்டுக்கலாமே


அப்பாவி
ஏப் 17, 2025 23:06

ஸ்ரீரங்கம் கோவில்ல ரெண்டு யானைங்க.மாயாவதிக்கே சொந்தமாம். வழக்கு போட்டிருக்காங்க.


அப்பாவி
ஏப் 17, 2025 23:05

இந்து பேப்ப்ரில் ரெண்டு யானைங்க. முத்தூட் ஃபனான்ஸ் க்கு ரெண்டு யானைங்க. எல்லாத்தயும் பிடிங்கி மாயாவதிக்கு குடுத்திருங்க.


நிக்கோல்தாம்சன்
ஏப் 17, 2025 21:29

வேற எதுவும் வேலையே இல்லையா அன்பன்


தமிழ்வேள்
ஏப் 17, 2025 21:27

ஒண்ணு மூணுசா..இன்னோண்ணு...அதான்..அது.. அதேதான்...புரிஞ்சுதா?


sankaranarayanan
ஏப் 17, 2025 21:10

இரண்டு யானைகளையும் அகற்றிவிடுங்கள் பிறகு எல்லாமே சரியாகிவிடும்


மீனவ நண்பன்
ஏப் 17, 2025 20:47

பிடிலைட் கம்பெனியின் பெவிகால் விளம்பரத்தில் இதே இரண்டு யானைகள் இருக்கும். அதையே காப்பியடித்து கொடி...சுவரில் விளம்பரம் வரைகிறவர்களுக்கு தான் வேலை ஜாஸ்தி ..


SUBBU,MADURAI
ஏப் 17, 2025 20:18

ஏப்ரலுக்குள் என்னங்க ...இதோ இப்பவே சொல்றேன்.என் கட்சிக் கொடியில் இருப்பது இரண்டு யானை.என் கட்சியில் இருக்கும் அனைவரும்...


nagendhiran
ஏப் 17, 2025 20:01

இவர் மேல் எனக்கு பெரிய அபிப்பிராயம் இல்லைன்னாலும்? யானை எவன் அப்பன் வீட்டு சொத்து!போடகூடாது என்று சொல்ல?


அப்பாவி
ஏப் 17, 2025 20:00

அப்பிடியே மனுசங்க எப்ப பாத்தாலும் கை காமிக்கிறாங்க. தினமும் சூரியன் உதிக்குது. கோவிலில் தாமரைப்பூ விக்கிறாங்க. சம்பந்தப் பட்ட கட்சிகளுக்கு உடனே நோட்டீஸ் அனுப்பி விசாரிங்கய்யா...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை