உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மாவட்ட நீதிபதிகளாக பதவியேற்க தகுதி நிர்ணயம்!: 7 ஆண்டுகள் வக்கீலாக இருந்தால் போதும்

மாவட்ட நீதிபதிகளாக பதவியேற்க தகுதி நிர்ணயம்!: 7 ஆண்டுகள் வக்கீலாக இருந்தால் போதும்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

'ஏழு ஆண்டுகள் தொடர்ச்சியாக வழக்கறிஞராக பணியாற்றியவர்கள், மாவட்ட நீதிபதிகளாக நேரடியாக நியமனம் செய்ய தகுதியுடையவர்கள்' என, உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது. மாவட்ட நீதிபதிகள் நியமனம் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், அரவிந்த் குமார், சதீஷ் சந்திர சர்மா, வினோத் சந்திரன் அடங்கிய அரசியல் சாசன அமர்வு அளித்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாவது: ஏழு ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றியவர், மாவட்ட நீதிபதியாக நேரடியாக நியமனம் செய்ய தகுதி பெறுவார். ஆனால், ஒருவர் ஐந்து ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றிவிட்டு, பின், 10 ஆண்டுகள் இடைவெளிவிட்டு மீண்டும் இரண்டு ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றினால், அவர் மாவட்ட நீதிபதி பதவிக்கு தகுதி பெறமாட்டார். அவர் இடைப்பட்ட காலத்தில் வழக்கறிஞராக இல்லை என்பது தான் கருத்தில் கொள்ளப் படும். எனவே, ஏழு ஆண்டுகள் தொடர்ந்து வழக்கறிஞராக பணியாற்றிவரை மட்டுமே மாவட்ட நீதிபதியாக நியமிக்க முடியும். மாவட்ட கூடுதல் நீதிபதி நியமனத்திற்கான தகுதி என்பது, தேர்வு செய்யும் நேரத்தில் பரிசீலிக்கப்படும். விண்ணப்பிக்கும் காலத்தில் கருத்தில் கொள்ளப்படாது. வழக்கறிஞராக பணியாற்றி பெறும் அனுபவத்தை விட, நீதித்துறை அதிகாரிகள் பெறும் அனுபவம் அளப்பரியது. எனவே, அத்தகைய திறமை வாய்ந்த நீதித்துறை அதிகாரிகளை, மாவட்ட நீதிபதி பதவிக்கு நியமனத்திற்கான போட்டியில் இருந்து விலக்கி வைப்பது நியாயம் இல்லை. அரசு பிளீடர்கள், அரசு உதவி வழக்கறிஞர்கள், நீதிமன்றங்களில் வழக்கறிஞர்களாக பயிற்சி பெற்று வருபவர்கள் மாவட்ட நீதிபதி பதவிக்கு நேரடியாக விண்ணப்பிக்க தகுதி பெற்றவர்களாக கருதப்படுகின்றனர். நீதித்துறை அலுவலர்களான இவர்கள், மாவட்ட நீதிபதி பதவிக்கு போட்டியிடக்கூடாது என கூறுவது முரண்பாடாக இருக்கிறது. மேலும் ஜூனியர்களாக இருப்பவர்கள், சீனியர்களுக்கு முன்பாக பதவி உயர்வு பெறுவதால், மற்றவர்களுக்கு மனவருத்தம் ஏற்படும் என்ற வாதத்தையும் நிராகரிக்கிறோம். ஏனெனில், தகுதியின் அடிப்படையில் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டு ஒருவர் மாவட்ட நீதிபதி பதவிக்காக பணியமர்த்தப்படுகிறார். இதனால், மற்றவர்கள் மனவருத்தம் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. அனைவருக்கும் சமவாய்ப்பு என்பதை உறுதிசெய்யும் வகையில், மாவட்ட நீதிபதி மற்றும் கூடுதல் நீதிபதி பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான குறைந்தபட்ச வயது, விண்ணப்ப தேதியின்போது, 35 ஆக பூர்த்தியாகி இருக்க வேண்டும். அனைத்து மாநில அரசுகளும் உயர் நீதிமன்றங்களுடன் கலந்தாலோசித்து, இன்னும் மூன்று மாத காலத்துக்குள்ளாக உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு ஏற்ப விதிகளை திருத்த வேண்டும். இவ்வாறு அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது. - டில்லி சிறப்பு நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

மணிமுருகன்
அக் 10, 2025 23:49

அருமை


V Venkatachalam
அக் 10, 2025 19:08

ஜட்ஜ் செந்தில் குமார் பதவியில் நீடிப்பாரா? இந்த மாதிரி வெளிப்படையா கட்சி சார்பாக இருக்கிறவர்களை அந்த கட்சியோட வக்கீல் டீமுக்கு அனுப்ப ஒரு வழியும் இல்லையா?


என்றும் இந்தியன்
அக் 10, 2025 16:51

அப்படி அவர்கள் பதவிஏற்க இன்னும் ஒரு தகுதி நிர்ணயம் இப்படி செய்யப்படுகின்றது. ஆளும்கட்சி அரசியல்வாதிகள் தவறு செய்தால் அதற்கு எந்த தண்டனையும் கொடுக்கக்கூடாது.


Alphonse Mariaa
அக் 10, 2025 15:06

, they just qualify for post but needs to write exam and get noc from police station.


Rengaraj
அக் 10, 2025 11:45

நீதிபதிகள் சட்டத்தின் பாதுகாவலர்கள். நாட்டில் தர்மம், நேர்மை மற்றும் அறம் நிலைக்க தூண்களாக இருப்பவர்கள். அவர்களை நியமிக்கும் விஷயத்தில் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு விதிகளை உண்டாக்குகிறது. தவறில்லை. ஆனால் சட்டத்தை உருவாக்குபவர்கள் அரசியல்வாதிகள். அவர்கள் தேர்தல் மூலம் மக்களால் தேர்ந்தேடுக்கப்பட்டு சட்டமன்றத்திலோ பாராளுமன்றத்திலோ வருகிறார்கள். எனவே தேர்தல் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. இப்படி இருக்கும்போது , தேர்தலில் கிரிமினல்கள், ஊழல்வாதிகள் யாரும் போட்டி போட கூடாது , தங்கள் மீது ஊழல் கறை இருந்தால் அது துடைக்கப்படும்வரை எந்தவித தேர்தலிலும் போட்டிபோடக்கூடாது என்று உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன சபை ஏன் நேரடியாக விதிகளை வகுக்கவில்லை.


ASIATIC RAMESH
அக் 10, 2025 09:56

எங்களுக்கு மட்டும் நீட், UPSC, TNPSC போன்ற எந்த தேர்வும் கிடையாது. ஏனென்றால் நாங்கள் மட்டுமே சர்வ அதிகாரம் பெற்றவர்கள்.... நீங்கள் சட்டம் போட்டாலும் தீர்ப்புகள் எங்கள் கையில்.... சொல்லிப்புட்டேன் ...


duruvasar
அக் 10, 2025 08:35

20 ஆண்டுகளுக்கு மேல் வக்கில் இருப்பவர்களுக்கு வாய்ப்பு கிடையாதா ? கன்பேர்ட் IAS அதிகாரிகள் இருபது போல . யோசியுங்கள்


duruvasar
அக் 10, 2025 08:30

........... போடுதல் என்ற T & C க்கு அப்பாற்பட்டதுதான் இந்த வழிகாட்டுதல் . இட ஒதுக்கீடு பற்றி குறிப்பு இல்லையே ?


VENKATASUBRAMANIAN
அக் 10, 2025 07:37

7 வருடம் சும்மா வக்கீல் என்று மட்டுமே இருந்தால் போதுமா. செயல்பாடுகள் முக்கியம் இல்லை. ஒரு கம்பெனியில் வேலை பார்க்க எத்தனை தகுதிகள் தேவை. ஒரு நாட்டு மக்களின் தலை எழுத்தை மாற்றி அமைக்கும் இடத்தில் உள்ள நீதிபதிக்கு எவ்வளவு தகுதி தேவை.


GMM
அக் 10, 2025 07:24

மாநில அரசுகளும்...நிர்வாகம் அல்ல. மாநில உயர் நீதிமன்றங்களுடன் கலந்தாலோசித்து, இன்னும் மூன்று மாத காலத்துக்குள்ளாக மாவட்ட நீதிபதி நியமனம் தொடர்பாக உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு ஏற்ப விதிகளை திருத்த வேண்டும். விதிகளின் படி தான் தீர்வு காண வேண்டும்? . அல்லது நீதிமன்றம் விதிகளை பரிந்துரை செய்ய வேண்டும். மாநிலங்கள் மாறுபட்ட விதிகள் வகுக்க வாய்ப்பு உள்ளது. இது பிரிவினையை வளர்க்கும். தேசம் ஒன்று என்று கருதி தான் மக்கள் வரி செலுத்தி வருகிறார்கள். மாநிலம் விதிகளை பரிந்துரை செய்யலாம். தேசம் முழுவதும் ஒரே விதியை மத்திய அரசு தான் அறிவிக்க வேண்டும்.


புதிய வீடியோ