உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஈமு நிதி நிறுவன மோசடி; குற்றவாளிக்கு 10 ஆண்டு சிறை; ரூ.19 கோடி அபராதம்

ஈமு நிதி நிறுவன மோசடி; குற்றவாளிக்கு 10 ஆண்டு சிறை; ரூ.19 கோடி அபராதம்

கோவை: ஈரோடு சுசி ஈமு பண்ணை மேலாண் இயக்குநருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை டான்பிட் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2010ம் ஆண்டு ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் சுசி ஈமு பார்மஸ் எனும் நிறுவனம் பல்வேறு கவர்ச்சிகரமான விளம்பரங்களை அள்ளி வீசினர். ஈமு பண்ணை அமைத்து ஈமு கோழி வளர்த்தால் ஊக்கத்தொகை, முதலீடு செய்த பணம் திருப்பி தரப்படும் என அறிவித்தனர். இதனை நம்பி தமிழகம் முழுவதும் ஏராளமானோர் முதலீடு செய்தனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=0uh8p2rg&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஆனால், கூறியபடி ஊக்கத்தொகையும் வழங்காமல், முதலீடு செய்த பணத்தையும் திருப்பி கொடுக்காமல் முறைகேட்டில் ஈடுபட்டனர். இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், சுசி ஈமு பண்ணை மேலாண் இயக்குநர் குருசாமி உள்பட பலர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், சுசி ஈமு கோழி மோசடி தொடர்பான வழக்கு கோவை 'டான்பிட்' கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, நிறுவன மேலாண் இயக்குனர் குருசாமிக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், 19.03 கோடி ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Bhaskaran
பிப் 01, 2025 10:35

தடியன் சத்யராஜ் கோமாளி பாக்யராஜ் ஆகியோரிடம் பல கோடிகள் பணத்தை பிடுங்க வேண்டும்


shakti
ஜன 30, 2025 14:20

அ-சத்யராஜுக்கு எப்போ தண்டனை மிலார்டு ???


Dharmavaan
ஜன 30, 2025 09:12

14 வருடமே கழித்து நீதி கேட்பாரில்லை 19 கோடிக்கு வட்டி என்ன ஆயிற்று கேவலமான நீதி எதனை முறை நிந்திப்பது மாடி அரசு தலையிட்டு சட்டம் போட வேண்டும்


Muguntharajan
ஜன 29, 2025 19:57

கிழிஞ்சது போ. தண்டனை 10 வருசம். இந்த தீர்ப்புக்கு 15 வருசம் ஆச்சு. அதுவும் மாவட்ட கோர்ட்டில். இன்னும் ஹைகோர்ட் அப்புறம் சுப்ரீம் கோர்ட் தீர்ப்புகள் உள்ளது. கடைசி தீர்ப்பு வருவதற்குள் குற்றவாளி பரலோகம் போயிடுவான். அப்புறம் அந்த தீர்ப்பு வந்து எதற்கு? இத்தனை ஆண்டுகள் இதற்காக அலைந்தது பணம் நேரம் எல்லாம் வேஸ்ட். இதுதான் இந்திய நீதித்துறையின் லட்சணம்.


Mathan
ஜன 29, 2025 18:44

கட்டப்பா எங்கே?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை