உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / என்கவுன்டர் பேச்சு: மனித உரிமை கமிஷன் விசாரணை

என்கவுன்டர் பேச்சு: மனித உரிமை கமிஷன் விசாரணை

சென்னை: 'கத்தியை எடுத்து, கொலை வழக்கில் சிக்கினால் என்கவுன்டர்தான்' என, வீடு தேடிச் சென்று ரவுடியின் மனைவியை எச்சரித்த உதவி கமிஷனர், மாநில மனித உரிமை கமிஷனில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பின், ரவுடிகளின் வீடுகளுக்கு சென்று, போலீசார் எச்சரித்து வருகின்றனர். திருவொற்றியூரில் உள்ள ரவுடி ஒருவரின் வீட்டிற்கு, ஜூலை மாதம் போலீசாருடன், உதவி கமிஷனர் இளங்கோவன் சென்றார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=np50v2p2&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ரவுடியின் மனைவியிடம், 'உங்கள் கணவர் ஏதேனும் குற்றத்தில் ஈடுபட்டால், என்னிடமோ, இன்ஸ்பெக்டர் மற்றும் தனிப்படை போலீசாரிடமோ தகவல் தெரிவிக்க வேண்டும். நிலுவையில் உள்ள வழக்கு விசாரணைக்கு, நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்.ஏதேனும் குற்றங்களில் ஈடுபட்டால், கை, கால்கள் உடைக்கப்படும். கத்தியை எடுத்து கொலை வழக்கில் சிக்கினால், என்கவுன்டர் தான்' என, எச்சரிக்கை விடுத்தார். இது தொடர்பான வீடியோ, சமூக வலைதளங்களில் பரவியது. இதையடுத்து, உதவி கமிஷனரின் என்கவுன்டரின் பேச்சு குறித்து, மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகிறது. ஆணையத்தில் நேற்று, உதவி கமிஷனர் இளங்கோவன் ஆஜராகி, ''என் பேச்சில் எவ்வித உள்நோக்கமும் இல்லை. குற்றம் நடந்துவிடக்கூடாது என்பதற்காகவே முன்னெச்சரிக்கை செய்தேன்,'' என, விளக்கம் அளித்தார்.இந்த விவகாரம் தொடர்பாக, வரும் 14ம் தேதி, ஆணையத்தில் ஆஜராக வேண்டும் என, சென்னை மாநகர போலீஸ் கமிஷனருக்கு, சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

தமிழ்வேள்
அக் 08, 2024 22:09

இனி மனித உரிமை கமிஷன் ரவுடிகளுக்கு பெண் பார்த்து கல்யாணம் கூட பண்ணி வைக்கும்..


ஆரூர் ரங்
அக் 08, 2024 16:24

இனிமே போலீஸே ரவுடிகள் காலில் விழுந்து குற்றங்களில் ஈடுபட வேண்டாம்ன்னு கெஞ்சுவதே ஒரே வழி.


Bahurudeen Ali Ahamed
அக் 08, 2024 13:31

இந்த காவல் துறை அதிகாரி செய்தது மிகசரியான செயல், குற்ற செயல்களை தடுப்பதற்கான முன்முயற்சிதான் அந்த எச்சரிக்கை. அதையும் மீறி ஒருவன் கொலை செய்வானென்றால் அவன் சாகட்டும், கொலைக்குற்றவாளி சாகக்கூடாது என்றால் அப்பாவிகள் சாவார்கள் , இது ஏற்புடையதா மனித உரிமை கமிஷன்?


பாமரன்
அக் 08, 2024 12:47

அந்த ஆபீஸர் காமிரா முன் சொன்னது தவறு... மேபி கவனிக்காமல் இருந்திருக்கலாம். அதை வீடியோ எடுத்தவர் விரைவில் பாத் ரூம்ல வழுக்கி விழ வாய்ப்புகள் அதிகம். மற்றபடி அந்த அப்ரோச் மிகச் சரி. இந்த மனித உரிமை அமைப்புகள் என்னத்த இதுவரை சாதிச்சாங்க... பேட்ஜ் குத்திக்கொண்டு அதிகாரம் செய்ததை தவிர...?


Kanns
அக் 08, 2024 11:26

Eye Wash Inquiry.


Barakat Ali
அக் 08, 2024 11:16

வன்முறையாளர்களுக்காக வரிந்து கட்டிக்கொண்டு வரும் மனித உரிமை கமிஷன், அதே வன்முறையால் பாதிக்கப்படும் சாதாரண மக்களுக்கு அதே மனித உரிமையைப் பேசுவதில்லையே ????


Govinda raju
அக் 08, 2024 09:45

மெதல்ல இந்த மண்னாங்கட்டி சமாசனல்லாம் மூடுடனும் கமிசனர் நடவடிக்கை சரி


Shekar
அக் 08, 2024 09:42

முதல்ல இந்த மனித உரிமைகாரனுகளை என்கவுண்டர் செய்யணும், கிரிமினல்களை பாதுகாக்குறது இவனுகதான். பாதிக்கப்பட்டவன் எப்படியும் ஒழியட்டும், ஆனால் ரவ்டி கஷ்டப்படக்கூடாது என்பது இவனுக கொள்கை


தமிழன்
அக் 08, 2024 09:25

கள்ள சாராய சாவு என்றால் 10 லட்சம் அரசின் நிர்வாக திறமை இல்லாத அலட்சியத்தால் என்றால் 5 லட்சம் என்கவுண்டர் என்றால் குற்றங்களில் இருந்து விடுதலை No confidence in Tamil Nadu போலீஸ்: ஹக் என உயர்நீதிமன்றம் சொல்வதாக போன வாரம் ஆங்கில நாளிதழ் செய்திகள் சொல்கிறது இதுவா சட்டம் இதுவா ஒழுங்கு


தமிழன்
அக் 08, 2024 09:18

பேட்டி என்றால் ஆணையர் போகிறார் விசாரணை என்றால் உதவி ஆணையராக... மேனேஜ்மென்ட் சயின்ஸ் படி உயர் பதவிகளுக்கு தகுதியானவர்கள் தான் தேர்வு செய்ய பட வேண்டும். இதை தான் வள்ளுவம் இதனை இதனால் இவன் முடிப்பான் என்று ஆய்ந்து அதனை அவன் கண் விடல் என்று சொல்கிறது. புரிந்தவர்கள் புத்திசாலிகள்


முக்கிய வீடியோ