உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சிரியாவில் ஆசாத் குடும்ப ஆட்சிக்கு முடிவு; உலக தலைவர்கள் சொல்வது என்ன?

சிரியாவில் ஆசாத் குடும்ப ஆட்சிக்கு முடிவு; உலக தலைவர்கள் சொல்வது என்ன?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டமாஸ்கஸ்: சிரியாவில் அதிபர் ஆசாத் ஆட்சி வீழ்ச்சி அடைந்தது பற்றி அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

வரலாற்று நாள்

இது குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியதாவது: சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் இரண்டு தசாப்த கால ஆட்சி வீழ்ச்சியடைந்ததை பாராட்டுகிறேன். இது மத்திய கிழக்கிற்கு ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாள். ஆசாத்தின் ஆட்சியில் டமாஸ்கஸ் நகரில் நடந்து வந்து கொடுங்கோன்மை முடிவுக்கு வந்தது. அதே நேரத்தில் குறிப்பிடத்தக்க ஆபத்துகள் உள்ளது. நாங்கள் அமைதியை விரும்புகிறோம். சிரியாவில் பல்வேறு நகரங்களை கைப்பற்றி உள்ள கிளர்ச்சியாளர்கள் படை அண்டை நாடுகளுடன் அமைதியான நல்ல உறவை உருவாக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

அடக்குமுறை

இது குறித்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியதாவது: ஆசாத்தின் சர்வாதிகார ஆட்சியின் வீழ்ச்சி, பல தசாப்த கால மிருகத்தனமான அடக்குமுறையை முடிவுக் கொண்டு வருகிறது. சிரியாவிற்கான புதிய அத்தியாயம் துவங்கி உள்ளது. மக்களுக்கு துன்பம் இல்லாத சூழல் உருவாகி உள்ளது. சிரியாவில் நடக்கும் மாற்றத்தை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

அமெரிக்கா ஆதரவு

அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் கூறியதாவது: அமெரிக்கா தனது பங்காளிகள் மற்றும் சிரியாவில் உள்ள பங்குதாரர்களுடன் இணைந்து உதவி செய்யும். பல ஆண்டுகளாக ஆசாத்துக்கு ஆதரவு அளித்து வந்த ஈரான், ஹிஸ்புல்லா மற்றும் ரஷ்யா கை விட்டது. வளமான எதிர்காலத்தை சிரியா மக்கள் உருவாக்க இதுவே சரியான நேரம். சிரியாவில் அமைதி திரும்ப கூட்டாளிகளுடன் அமெரிக்கா பணியாற்றும். கடந்த நான்கு ஆண்டுகளில், எனது நிர்வாகம் சிரியா தொடர்பாக தெளிவான கொள்கையை பின்பற்றியது. ஜோர்டான், லெபனான், ஈராக் மற்றும் இஸ்ரேல் உள்ளிட்ட சிரியாவின் அண்டை நாடுகளுக்கு அமெரிக்கா ஆதரவளிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

Mohan
டிச 09, 2024 18:54

ஆசாத்தின் குடும்ப ஆட்சி முடிவுக்கு வந்ததாக சிரியா மக்கள் சந்தோஷப்பட முடியாது. FROM FRYING PAN INTO THE FIRE என்கிற நிலைமை தான் ஆசாத்தின் ஆட்சியில் இருந்து முஸ்லீம் அடிப்படைவாத கொடூர ஆட்சியில் மாட்டிக்கொண்டு நாய் படாத பாடு படப்போகிறார்கள். பாவம்.


J.V. Iyer
டிச 09, 2024 18:25

இதைச்செய்ததே டீப் ஸ்டேட் தலைவன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தான். கனடா பிரதமர் கூறுவதெல்லாம் ஒரு பொருட்டா? இவன் அடுத்தவருடம் சிறையில்.


Mohan das GANDHI
டிச 09, 2024 17:58

தமிழ்நாட்டு மக்களும் கொந்தளிப்பார்கள் 2026 க்குள் திமுக கட்சி பல துண்டுகளாக சிதறும் தமிழ்நாட்டில் அனைத்து திமுக தொண்டர்கள் பாஜகவில் இணைவார்கள் DMK ஒழியும் என்பதே வாழ்க தமிழகம் அடுத்த தமிழக முதல்வர் படித்த தமிழன் பாஜக மாநில தலைவர் விவசாயி திரு.அண்ணாமலை IPS என்பதே நடக்கும்


Vijay D Ratnam
டிச 09, 2024 14:54

வாரிசு அரசியல், பரம்பரை அரசியல், குடும்ப அரசியல் எனும் பச்சை அயோக்கியத்தனத்தை மக்கள் அடித்து துரத்தினால் ஒழிய அது தானாக போகாது. உலகம் முழுக்க அங்கங்கே குடும்ப அரசியல் அழிக்கப்பட்டு வருகிறது. ஒட்டுமொத்த இத்தியாவையும் ஆட்டி புடைத்துக்கொண்டு இருந்த அந்த தீய சக்தியை 2014 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி ஒழித்து காட்டினார். உத்தரபிரதேசத்தில் அந்த நாசகார சக்தியை உ.பி முதல்வர் யோகி ஆதித்யாநாத் ஒழித்துக்கட்டினார். இப்போ மஹாராஷ்டிராவில் முதலமைச்சர் தேவேந்திர பட்நாவிஸ் தடம் தெரியாமல் செய்துவிட்டார். இது எல்லாவற்றையும் விட பேராபத்தை விளைவிக்கும் தமிழ்நாட்டின் தீய சக்தி வைரஸ் மாதிரி பரவி இருக்குது. இந்த 2026 லாவது தமிழகத்துக்கு நல்லகாலம் வருதான்னு பார்ப்போம்.


Rangarajan Cv
டிச 09, 2024 13:10

JB says (outgoing US president) will support


Kumar Kumzi
டிச 09, 2024 13:00

ஓசிகோட்டருக்கும் ஓவாவுக்கும் வாலாட்டும் கொத்தடிமை கூட்டம் இருக்கும் வரை ஓங்கோல் துண்டுசீட்டுக்கு பாதிப்பில்லை


sankaranarayanan
டிச 09, 2024 12:14

ஆசாத்தின் சர்வாதிகார ஆட்சியின் வீழ்ச்சி, என்று கூறிய காணாத பிரதமர் ட்ரூடோ மட்டும் என்ன விதி விலக்கா இந்தியர்களை காலிஸ்தான் பயங்காரவாதிகளிடம் காட்டிக்கொடும் மஹா மஹா பாவி பாதகன்இந்து கோயில்களை பார்த்து சூறையாடும் காலிஸ்தான் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்து வளரவிட்டதே ட்ரூடோதான் அவனுக்கும் இதே கத்தி விரைவில் எதிர்பார்க்கலாம் அரசியலிலிருந்து விரட்டி அடிக்கப்படுவான்


Ramesh Sargam
டிச 09, 2024 12:00

தமிழகத்தில் என்றைக்கு?


magan
டிச 09, 2024 14:27

கண்டிப்பா ஒருநாள் நடக்கும் நடக்கணும்


S.V.Srinivasan
டிச 09, 2024 10:31

கனடாவில் ஜஸ்டின் த்ருடோ ஆட்சி எப்போ முடிவுக்கு வரும்???


ராமகிருஷ்ணன்
டிச 09, 2024 09:58

தமிழ்நாட்டை ஆட்சி செய்யும் டாஸ்மாக் கொடுங்கோலர்களின் பரம்பரை திருடர்களுக்கு முடிவு எப்போது. மக்கள் பணம் வாங்காமல் ஓட்டு போடுவது எப்போது.


S.V.Srinivasan
டிச 09, 2024 10:35

மக்கள் பணம் வாங்காமல் ஓட்டு போடுவது என்பது நடக்காது. தமிழக மக்கள் பணத்திற்கு அடிமையாகி விட்டார்கள். தேர்தல் எப்போ வரும் யாரு எவ்வளவு பணம்கொடுப்பார்கள் என்று நாக்கை தொங்க விட்டு அலைகிறார்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை