உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டாஸ்மாக் நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை சட்ட விரோதம் அல்ல; ஐகோர்ட் தீர்ப்பு

டாஸ்மாக் நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை சட்ட விரோதம் அல்ல; ஐகோர்ட் தீர்ப்பு

சென்னை: ''டாஸ்மாக் நிறுவனத்தில் சோதனை நடத்தியது சட்டவிரோதம் அல்ல'' எனக் கூறி அமலாக்கத்துறைக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. மாநில அரசின் அனுமதியின்றி நடத்தப்பட்ட சோதனையை சட்ட விரோதமானது என, அறிவிக்கக் கோரியும், விசாரணை என்ற பெயரில் அதிகாரிகளை துன்புறுத்த தடை கோரியும், சென்னை ஐகோர்ட்டில், தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், கே.ராஜசேகர் அடங்கிய அமர்வு விசாரணை நடத்தியது. சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் டாஸ்மாக் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சிலர் ஈடுபட்டதாக தகவல் கிடைத்ததால் சோதனை நடத்தினோம் என அமலாக்கத்துறை தெரிவித்து இருந்தது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், கே.ராஜசேகர் அமர்வு இன்று (ஏப்ரல் 23) தீர்ப்பு அளித்தனர்.அமலாக்கத்துறைக்கு எதிராக தொடரப்பட்ட தமிழக அரசின் மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். ''டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனை சட்டவிரோதம் அல்ல. அமலாக்கத்துறை நடத்திய சோதனை தேச நலனுக்கானது.நள்ளிரவு சோதனை நடத்திய போது ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பியதை ஏற்க முடியாது'' என நீதிபதிகள் தெரிவித்தனர். அதுமட்டுமின்றி, சோதனை அடிப்படையில் தொடர்ந்து விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு ஐகோர்ட் அனுமதி அளித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 48 )

Karthik
ஏப் 23, 2025 20:09

இந்த டாஸ்மாக் கேஸ் முதல், கோர்ட் விசாரணை, நீதிபதி விலகல், வழக்கு ஒத்திவைப்பு, அரசு கோரிக்கை மனு, தீர்ப்பு வரை இதற்கு இடைப்பட்ட காலத்தில் /நாட்களில் டாஸ்மாக்கின் அனைத்து விதமான டாக்குமெண்ட்டுகளும் ரிசர்வ் பேங்க் அச்சடிக்கும் ரூபாய் நோட்டை விட மிகத் துல்லியமாக தயார் செய்திருப்பர் இந்நேரம். இனி ரெய்டு வந்தால் என்ன... வராட்டி என்ன? எதையும் கண்டுபிடிக்க போவதில்லை. கேஸ் குளோஸ்ட்.


Sridhar
ஏப் 23, 2025 15:14

இவ்வளவு அயோக்கியமாக அராஜகமாக இந்த வழக்கை தொடர்ந்த தமிழக அரசுமீதும் டாஸ்மாக் நிர்வாகத்தின்மீதும் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறீர்கள் மிலார்ட் அவர்களே? சும்மா கேஸை டிஸ்மிஸ் செய்தால் போதுமா? வேண்டுமென்றே திட்டமிட்டு காலதாமதம் செய்வதற்கு அதாவது அவர்கள் செய்த மாபெரும் ஊழல் வெளியே வந்துவிடக்கூடாது என்பதற்காக செய்த இந்த கிரிமினல் நடவடிக்கைக்கு எந்த தண்டனையும் கிடையாதா? திருட்டு கும்பல் இதோடு நிற்காது. மேல்முறையீடு செய்வார்கள். இதற்கான வக்கீல் பீஸும் மக்கள் வரிப்பணத்திலிருந்துதான் என்ன ஒரு கொடுமை இவற்றுக்கெல்லாம் மேலே நமக்கெல்லாம் பெரும் அதிர்ச்சியை கொடுக்கப்போகும் விஷயம் நடக்கவிருக்கிறது. இந்த விஷயத்தில் ED மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்காது


RAMESH
ஏப் 23, 2025 15:12

திருடனுக்கு தேள் கொட்டியது போல் உள்ளது தீர்ப்பு..... இந்த தீர்ப்பு இனிக்குமா இல்லை கசக்குமா... கூட்டணி தான் பதில் சொல்ல வேண்டும்


SUBBU,MADURAI
ஏப் 23, 2025 19:09

இந்த நேரத்தில் கட்டுமர கருணாநிதி இருந்தார் என்றால் நீதிபதிகள் யாரும் வானத்தில் இருந்து குதித்து வந்தவர்கள் அல்ல என்றும் இது வாங்கப் பட்ட தீர்ப்பா அல்லது வழங்கப் பட்ட தீர்ப்பா என்று கேட்டிருப்பார். ஆனால் அவரது மகன் தத்திக்கு இந்த தீர்ப்பை பற்றி யாரும் துண்டுச் சீட்டை எழுதித்தரவில்லை போல அதனால்தான் அவரிடம் இருந்து இந்த தீர்ப்பை பற்றி ஒரு அறிக்கையும் வரவில்லை. கவர்னருக்கு எதிராக வந்த தீர்ப்பை மட்டும் தனக்கு கிடைத்த வெற்றி என கொண்டாடிய தத்தி முதல்வர் இந்த தீர்ப்பை பற்றி வாயை திறக்கவில்லை ஏன்?


V Venkatachalam
ஏப் 23, 2025 14:51

உடனே தில்லிக்கு போன் செய்து தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு தமிழ் நாடு இல்லத்தில் வைத்து உதவி செய்யுங்கள் என்றும் காயம் பட்டவர்களை உடனே தமிழ்நாடு அழைத்து வாருங்கள் என்றும் உத்தரவிட்டுள்ளேன். பயங்கர வாதத்தை ஒடுக்க மத்திய அரசுக்கு துணை நிற்போம் என்று சட்ட சபையில் அறிவிக்கிறேன்.அதற்கு முன்னர் பயங்கர வாத தாக்குதலில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தி விட்டேன். டாஸ் மாக் தீர்ப்பு பற்றி யாரும் மூச்சு விடக்கூடாது. சரியா?


ஆரூர் ரங்
ஏப் 23, 2025 13:54

மது தயாரிக்கும் (திமுகவுக்கு நெருக்கமான) நிறுவனங்களில் பலமுறை வருமானவரி மற்றும் அமலாக்கத்துறை ரெய்டு நடந்துள்ளது. அவற்றின் தொடர்ச்சியாக அவர்களின் வாடிக்கையாளரான டாஸ்மாக்கில் சோதனை செய்வது மட்டும் எப்படி தவறாகும்? வழக்குக்கு மாநில அரசு செலவிட்ட தொகை முழுவதையும் செந்தில் பாலாஜி மற்றும் ஸ்டாலினிடம் வசூலிக்க உத்தரவிடவேண்டும்.


ramani
ஏப் 23, 2025 13:51

விரைவில் பத்து ரூபாய்யுடன் பெருசா சிறுசா யார் சிறைக்கு போவது


ponssasi
ஏப் 23, 2025 13:50

அமலாக்கத்துறை நடத்திய சோதனை தேச நலனுக்கானது. அமலாக்கத்துறையால் விசாரிக்கப்பட்ட ஊழியர்கள் அனைவரும் குற்றவாளிகளே, குற்றவாளிகள் தங்களை கன்னியமாக மரியாதையாக நடத்தப்படவேண்டும் என எதிர்பார்க்கக்கூடாது. சர்வதேச குற்றவாளிகளை, வழிப்பறி செய்பவனை தமிழக காவல்துறை எப்படி நடத்துகிறது அதுபோலத்தான் இவர்களும். யாரோ ஒரு முதலாளிக்காக அரசுக்கு சேரவேண்டிய தொகையை முறைகேடு செய்து தனிப்பட்ட ஆதாயம் அடைந்துள்ளனர்.


Murthy
ஏப் 23, 2025 13:49

திருடனை பிடிக்க போகும்முன் தகவல் கொடுக்கவேண்டும் என்கிறது திராவிட மாடல் அரசு .....


venugopal s
ஏப் 23, 2025 13:21

அமலாக்கத்துறை நடத்திய சோதனை சட்டபூர்வமானது என்று தான் தீர்ப்பு சொல்லி உள்ளது உயர்நீதிமன்றம். டாஸ்மாக்கில் ஊழல் நடந்தது நிரூபிக்கப்பட்டுள்ளது என்று தீர்ப்பு சொல்லவில்லை.நாங்கள் என்ன சங்கிகளா தீர்ப்பு கொடுத்த நீதிபதிகளை இழிவாகவும் தரக்குறைவாகவும் பேச? நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மதிக்கிறோம்!


தேசம் காப்போம்
ஏப் 23, 2025 15:52

அப்ப நீதிமன்ற தீர்ப்பை மதித்து பொருளாதார ரீதியாக உத்தரவிடப்பட்ட 10 சதவீத இட ஒதுக்கீட்டை நிறைவேற்ற வேன்டியது தானே. எந்த கேஸையும் நீர்த்து போக செய்வதில் நீங்கள் கைதேர்ந்தவர்கள் என்பது உங்களது பதிவின் மூலம் உனர முடிகிறது


ஸ்ரீனிவாசன் ராமஸ்வாமி
ஏப் 23, 2025 13:09

2ஜி வழக்கில் காங்கிரஸ் ஆட்சியில் ராஜா ராணி திஹார் சென்றனர். மதுபான ஊழலில் ... சிறை சென்றது. ஆனாலும் இங்கு யாருமே சிறைக்கு செல்லவில்லை.


Yes your honor
ஏப் 23, 2025 13:31

மாப்பிள்ளைகளாக மாமியார் வீட்டிற்கு சிறிது காலம் மட்டும் சென்றுவிட்டு அதன் பிறகு ஆயுளுக்கும் ஜாலியாகச் சுற்றும் ஜோலி இனி இருக்காது. இனிவரும் காலங்களில் விடியாத கூட்டம் ஒருமுறை சிறை சென்றாலும் ஆயுளுக்கும் அனுபவிப்பார்கள். காட் ஈஸ் வெயிட்டிங்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை