| ADDED : நவ 29, 2024 10:03 AM
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் பா.ஜ., மற்றும் அ.தி.மு.க., பிரமுகர்களின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதால் பரபரப்பு நிலவியது. புதுக்கோட்டையில் பா.ஜ., மாவட்ட பொருளாளர் முருகானந்தம் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதேபோல, கறம்பக்குடி அருகே கருக்காக்காடு பகுதியில் உள்ள முருகானந்தத்தின் சகோதரர், கரம்பக்குடி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன் வீட்டிலும் ரெய்டு நடத்தப்பட்டது. அ.தி.மு.க., எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி மாவட்ட செயலாளர் பழனிவேல் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், புதுக்கோட்டையில் பரபரப்பு நிலவி வருகிறது.