உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வி.சி.க., நிர்வாகி ஆதவ் அர்ஜூனா, லாட்டரி அதிபர் மார்ட்டின் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு!

வி.சி.க., நிர்வாகி ஆதவ் அர்ஜூனா, லாட்டரி அதிபர் மார்ட்டின் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: கோவை துடியலூரில் பிரபல தொழிலதிபர் லாட்டரி மார்ட்டின் வீடு மற்றும் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தினர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா வீட்டிலும் சோதனை நடந்தது.சென்னை, கோவையில் மார்ட்டின் குழும அலுவலகங்களில், இன்று (நவ.,14) அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கோவை துடியலூரில் தொழிலதிபர் லாட்டரி மார்ட்டினின் வீடு மற்றும் அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=gz3pjzh0&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சென்னை தேனாம்பேட்டை கஸ்தூரி ரங்கன் சாலையில் உள்ள விடுதலை சிறுத்தைக் கட்சி துணைப் பொதுச் செயலாளரும், லாட்டரி அதிபர் மார்ட்டின் மருமகனுமான ஆதவ் அர்ஜுனா வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். மத்திய பாதுகாப்பு படை வீரர்களின் பாதுகாப்புடன் சோதனை நடந்து வருகிறது. சமீபத்தில், லாட்டரி அதிபர் மார்ட்டின், அவரது மனைவி உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கை முடித்து வைத்த கீழ் கோர்ட் உத்தரவை, ஐகோர்ட் ரத்து செய்தது; வழக்கை தொடர்ந்து நடத்த உத்தரவிட்டு இருந்தது. இந்த சூழலில் மார்ட்டினுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

Yasararafath
நவ 14, 2024 22:01

ரெய்டு நடத்துவது சரி


BHARATH
நவ 14, 2024 19:02

ஜோசப் விஜயின் வலது கை


Narasimhan
நவ 14, 2024 14:12

ஒண்ணும் நடக்காது. எலெக்டோரல் பாண்டுகளில் வைப்பிட்டால் கேஸ் மூடப்படும். மக்கள் முட்டாள்கள் என்பது அவர்களுக்கு தெரியும்


Duruvesan
நவ 14, 2024 13:15

சார் இது வரை 1000 மேல ரெய்ட், end result zero, சிங்கம் அசிங்கம் ஆகி விட்டது


Duruvesan
நவ 14, 2024 15:57

Modi என்ற சிங்கம்


sridhar
நவ 14, 2024 17:14

மோடி நீதிபதி அல்ல. ஆயிரம் சதவீதம் நிரூபணம் கேட்கும் நீதிமன்றங்கள் தான் மாற வேண்டும். பழைய பிரிட்டிஷ் தத்துவம் நூறு குற்றவாளிகள் தப்பிக்கலாம் .. ஆனால் .. ஒழிக்கப்பட வேண்டும்.


Edward,Aruppukkottai 626105
நவ 14, 2024 19:08

ஔவைக்கு நெல்லிக்கனி கொடுத்த அதியமான் வாழ்ந்த தர்மபுரியில் இப்படியும் ஒரு தற்குறி...


Narayanan Muthu
நவ 14, 2024 12:58

முன்னது வி சி க வை உடைக்கும் முயற்சி. பின்னது பாஜகவின் பண வசூல் தந்திரம்.


Smba
நவ 14, 2024 12:34

ஒன்னும் பண்ண முடியாது இதுக்கு முன்னர் பல முறை நடந்து இருக்குது வேலைக்காகாது


வைகுண்டேஸ்வரன்
நவ 14, 2024 12:14

இதை வைத்தாவது இவனை வி சி க, கட்சியை விட்டு தூக்கவில்லை என்றால் சிறுத்தைகள், அடுப்படிப் பூனைகளாகப் போவது உறுதி.


சரவணன்,துறையூர்
நவ 14, 2024 19:11

நீ அறிவாலய அடுப்படி பூனையா இருக்கிற மாதிரி.. ஹா ஹா ஹா...


வைகுண்டேஸ்வரன்
நவ 14, 2024 12:05

"திமுகவினரின் அழுத்தம் காரணமாக இருக்குமோ? " சூப்பர். திமுகவினருக்கு இவ்வளவு பவர், செல்வாக்கு இருக்குமோ என்று பிறரை நினைக்க வைப்பதே திமுக வின் வெற்றி.


Perumal Pillai
நவ 14, 2024 10:58

நாளுக்கு நாள் மோடி சர்க்கார் மேல் உள்ள நம்பக தன்மை குறைகிறது. பெரும் திருடர்களை கண்டால் பயம் . ஒரு பக்கம் தமிழக திருடர்களுக்கு ராஜமரியாதை .


Barakat Ali
நவ 14, 2024 11:59

தேர்தல் பத்திரங்களை சாண்ட்ரா சூடர் தடை பண்ணிட்டார் ..... பாஜக தனக்கு வேண்டிய தேர்தல் நிதியை எப்படித்தான் குவிப்பதாம் ????


ஆரூர் ரங்
நவ 14, 2024 10:46

திமுக வுக்கு 500 கோடி தேர்தல் பத்திரங்கள் அளித்ததற்கு கைமாறாக (வலுவான ஆதாரங்கள் இருந்தும்) வழக்கு வாபஸானதா? கவர்னர் சூதாட்டத்துக்கு ஆதரவானவர் என குற்றம் சாட்டும் தகுதி திமுகவுக்கு இல்லவே இல்லை.


புதிய வீடியோ