உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கடப்பாரை, சுத்தியுடன் அமைச்சர் துரைமுருகன் அறையை உடைத்த அமலாக்கத்துறை அதிகாரிகள்

கடப்பாரை, சுத்தியுடன் அமைச்சர் துரைமுருகன் அறையை உடைத்த அமலாக்கத்துறை அதிகாரிகள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வேலூர்: அமைச்சர் துரைமுருகன் வீட்டில் சோதனை நடத்தி வரும் அமலாக்கத்துறை அதிகாரிகள், கடப்பாரை மற்றும் சுத்தி மூலம் அறையை உடைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த வழக்கில், இன்று (ஜன.,03) வேலுார் மாவட்டம் பள்ளிக்குப்பம் நடு மோட்டூர் பகுதியில் உள்ள தி.மு.க., நிர்வாகி பூஞ்சோலை சீனிவாசன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அதேபோல், காட்பாடி காந்தி நகரில் உள்ள தி.மு.க., எம்.பி., கதிர் ஆனந்த் மற்றும் அமைச்சர் துரைமுருகன் ஆகியோரின் வீடுகளிலும் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இரவு நேரமாகியும் இந்த சோதனை நீடித்து வருகிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ri6hs05a&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0வீட்டின் உள்ளே இருக்கும் அமைச்சர் துரைமுருகனின் அறை பூட்டி இருப்பதால், அதனை திறந்து சோதனை நடத்த அதிகாரிகள் முயன்றனர். இதனால், கடப்பாரை , சுத்தி மற்றும் உளியை எடுத்து வருமாறு பணியாளர்களிடம் கூறினர். அதனைப் பெற்றுக் கொண்ட அதிகாரிகள், கையில் கடப்பாரை, சுத்தி போன்ற ஆயுதங்களுடன் துரைமுருகனின் வீட்டுக்குள் சென்றுள்ளனர். உள்ளே பூட்டிக்கிடக்கும் அவரது அறையை அதிகாரிகள் உடைத்து சோதனையில் ஈடுபட்டனர்.மூத்த அமைச்சர் ஒருவரின் வீட்டில் கடப்பாரை, சுத்தியை எடுத்துச் சென்று அதிகாரிகள் சோதனை நடத்தும் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 39 )

N Sekhar
ஜன 04, 2025 12:48

உண்மை


Thavam Muthu
ஜன 04, 2025 12:37

அரசியல் நடத்தி கொள்ளை adikirarkal


SRIKANTH SUBRAMANIAN
ஜன 04, 2025 12:18

தப்பு பண்ணியதர்கு விட்டிலா ஆதாரம் வைத்திருப்பார???அதுவும் திமுககாரர்...மூத்த அரசியல்வாதி.... கருணாநிதி கூட அரசியல் பண்ணிணவர்....சும்மாவா...


Alagusundram Kulasekaran
ஜன 04, 2025 12:04

கட்டுக்கட்டாக பணம் எடுத்தாலும் பரவாயில்லையா அறிவு இல்லையா


Ethiraj
ஜன 04, 2025 10:57

Even ministers dont co-operate with officials defying the oath they have taken at the time of becoming minister. They are setting bad example for citizens. Dy CM can take action.


Ram Moorthy
ஜன 04, 2025 09:48

மிகவும் காலதாமதமான நடவடிக்கை ஆனால் மக்கள் பணத்தை கையாடல் செய்தவன்களுக்கு இந்த நடவடிக்கையால் யாருக்கும் தண்டனை கிடைக்காது மோசடி அரசியலில் இருப்பவர்கள் இதெல்லாம் சகஜம் ஆகி விடும்


அப்பாவி
ஜன 04, 2025 09:04

தத்திகள். பூட்டை உடைக்க ஒரு பூட்டு ரிப்பேர்க் காரன் போதுமே. கத்தி, கடப்பாரைன்னு ஃபில்ம் காட்டறாங்க.


Venkatesan Ramasamay
ஜன 04, 2025 18:14

சரியாய் சொன்னீங்க போங்க ..


Ramakrishnan
ஜன 04, 2025 07:27

என்னது ????


Ramakrishnan
ஜன 04, 2025 07:26

தடையாய் late


Sangi
ஜன 04, 2025 07:15

எதுவுமே நடக்காது. ஈடி சிபிஐ போன்ற பேடிக்கும்பல் சாதாரண மக்களின் வரியில் வாழ்ந்து கொண்டு இதுபோன்ற திருடர்களுக்கு வசதி செய்து தரும் ஈனக்கும்பலே. இதுவரை இவர்கள் ஏதாவது ஒரு உருப்படியானதிருடனுக்கு தண்டனை குடுத்து இருக்கா என பார்த்தால் உண்மை விளங்கும். மோடி அரசு இவர்களை கையாள்வதில் பெரும் தோல்வியை ஒப்புக் கொள்ள வேண்டும்


Alagusundram Kulasekaran
ஜன 04, 2025 12:01

கட்டுக்கட்டாக பணம் அவன் அப்பன் வீட்டு பணமா


புதிய வீடியோ