உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இத்தனை பேர் உயிர்கள் பறிபோனதே; நேரில் அஞ்சலி செலுத்திய இபிஎஸ் உருக்கம்

இத்தனை பேர் உயிர்கள் பறிபோனதே; நேரில் அஞ்சலி செலுத்திய இபிஎஸ் உருக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கரூர்: தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவிலேயே அரசியல் கட்சி நடத்திய பொதுக்கூட்டத்தில் இவ்வளவு உயிர்கள் பறிபோனது இல்லை என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தெரிவித்து உள்ளார்.கரூர் சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு எதிர்கட்சி தலைவர் இபிஎஸ் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து பேசினார். பின்னர் கரூர் அரசு மருத்துவமனையில் நிருபர்களிடம் இபிஎஸ் கூறியதாவது: https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=w11pff9q&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவிலேயே அரசியல் கட்சி நடத்திய பொதுக்கூட்டத்தில் இவ்வளவு உயிர்கள் பறிபோனது. அரசாங்கம் ஒரு தலைப்பட்சமாக நடக்கிறது. போலீசார் முழுமையாக பாதுகாப்பு அளிக்கவில்லை.

பாதுகாப்புக் குறைபாடு

AIR SHOWவில் முறையான பாதுகாப்பு வழங்காததாலே 5 பேர் இறந்தனர். இதில் பாடம் கற்காத ஸ்டாலினின் அலட்சியத்தால் மற்றொரு பெருந்துயரம் நடந்துள்ளது. பொதுக்கூட்டம் ஆரம்பித்த சிறிது நேரத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. மின் இணைப்பு துண்டிப்பால் கூட்ட நெரிசல், தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. அரசும், போலீசாரும் முழுமையான பாதுகாப்பு கொடுத்திருக்க வேண்டும். கரூரில் நடந்த பெருந்துயரத்திற்குக் போலீசாரின் முறையற்ற பாதுகாப்புக் குறைபாடுதான் காரணம்.

முழுமையான பாதுகாப்பு

முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாதது செய்திகளை பார்த்தல் தெரிகிறது. எனது பிரசாரத்தில் கூட போலீசார் முறையான பாதுகாப்பு அளிக்கவில்லை. ஆளுங்கட்சி நிகழ்ச்சி நடந்தால் ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். அரசும் போலீசுல் ஒருதலைப் பட்சமாக செயல்படுகிறது. எந்த கட்சி என்று பாராமல் போலீசார் நடுநிலையாக செயல்பட வேண்டும். முழுமையான பாதுகாப்பு வழங்கியிருந்தால் உயிரிழப்புகளை தவிர்த்திருக்கலாம். அறிவித்த நேரத்தில் கூட்டம் நடத்தாமல் பல மணி நேரம் தாமதமாக வந்து கூட்டம் நடத்துகிறார்கள். குறிப்பிட்டு விட்டு பலமணி நேரம் கழித்து வருவது ஏற்கத்தக்கது அல்ல.

புதிய கட்சிகள்

அரசியல் கட்சி தலைவரும் நிலைமையை கூர்ந்து கவனித்து ஆலோசித்து செயல்பட்டிருக்க வேண்டும். அரசியல் கட்சி கூட்டம் நடத்தினால் கட்சி, போலீசார், அரசை நம்பி தான் மக்கள் பங்கேற்கிறார்கள். கூட்டத்துக்கு ஏற்றவாறு அரசியல் கட்சியினரும் ஏற்பாடுகளை செய்திருக்க வேண்டும். அனுபவம் மிக்க அரசியல் கட்சித் தலைவர்களை மற்ற கட்சித் தலைவர்களும் பின்பற்ற வேண்டும். அனுபவமுள்ள கட்சிகளின் கூட்டங்களை பார்த்து புதிய கட்சிகள் கற்றுக்கொள்ள வேண்டும். முந்தைய கூட்டங்களின் நிலையை ஆய்வு செய்து, அதற்கேற்ப முழு பாதுகாப்பை அரசு, போலீசார் தந்திருக்க வேண்டும். இவ்வாறு இபிஎஸ் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Makkal Manam
செப் 28, 2025 14:51

விஜய் ரசிகர்கள் தற்குறிகள். இடம் பொருள் ஏவல் தெரியாத முட்டாள்கள்.


தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 28, 2025 12:49

எடப்பாடியார் ஆட்சியில் இருந்திருந்தால், இப்படி நிகழ்ந்திருக்காது ....... எப்படியென்றால் டிவிகே உதித்திருக்காது .....


பஷீர் அகமது
செப் 28, 2025 10:28

நடிகர் ஜோசப் விஜய் மீதும் அவர்களின் ரசிகர்கள் மீது இருந்த கோபத்தையும் வெறுப்பையும் கூட்டத்திற்கு வந்த மக்கள் மீது காட்டி இருக்கக் கூடாது. அரசியல் விருப்ப வெறுப்பு அப்பாவி மக்கள் மீது திணிப்பது தவறு


தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 28, 2025 14:26

கூட்டம் அதிகம் இருக்கும் என்று தெரிந்தும் கூட, தண்ணீர் கூட எடுத்துச் செல்லாமல், அதே சமயம் குழந்தைகளை எடுத்துச் சென்றவர்கள் அப்பாவிகளா


sekar ng
செப் 28, 2025 10:00

மின் இணைப்பை ஸ்டாலின் ஏன் துண்டிக்க வேண்டும்


வாய்மையே வெல்லும்
செப் 28, 2025 18:55

குயிதிபுத்தி கொண்ட சில அரசியல் அரக்கர்கள் செப்புடுவித்தை கைதேர்ந்தவர்கள் எதற்கும் துணிந்தால் இப்படி செய்ய தோணும். இந்தமாதிரி குறுக்குபுத்தி சிலபேருக்கு தான் இருக்கும். எல்லாம் தமிழக மக்களின் தலையெழுத்து .. வெட்க கேடு ..இனிமேல் சினிமாவை நம்பி அரசியலில் குதித்தால் மக்கள் அவர்களை பார்க்க கூடுவது இயல்பு..பலிகளும் இனிமேல் ஜாஸ்தியாக இருக்கும் ..


Barakat Ali
செப் 28, 2025 19:44

ஆம்புலன்சில் இருந்து இறங்குபவர்கள் அடையாளம் தெரிந்துவிடக் கூடாதே ????


புதிய வீடியோ