உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஒண்ணுமே புரியல... எனக்கே ரூ.12,000 கரண்ட் பில் வருது: மக்கள் மத்தியில் இபிஎஸ் கலகல பேச்சு

ஒண்ணுமே புரியல... எனக்கே ரூ.12,000 கரண்ட் பில் வருது: மக்கள் மத்தியில் இபிஎஸ் கலகல பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுக்கோட்டை: இஷ்டத்துக்கு மின் கட்டணத்தை எழுதுகின்றனர். என்ன கணக்கு வைத்து கணக்கிடுகின்றனர் என எங்களாலேயே கண்டுபிடிக்க முடியவில்லை. என் வீட்டுக்கு 12,000 ரூபாய் வருகிறது என்று அதிமுக பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., பேசினார்.தமிழகம் முழுவதும் மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற தேர்தல் பிரசார பயணத்தின் மூலம் தினமும் மக்கள் மத்தியில் இ.பி.எஸ்., பேசி வருகிறார். அதன் ஒரு கட்டமாக அவர் இன்று புதுக்கோட்டை மாவட்டம் சென்றார்.அங்குள்ள சத்தியமூர்த்தி சாலையில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் திறந்த வேனில் நின்றபடி பேசினார். அப்போது புதுக்கோட்டை மாவட்டத்திற்கு அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்ட நலத்திட்டங்கள், கல்லூரிகள், சுகாதார கட்டமைப்புகளை உருவாக்கியது உள்ளிட்டவற்றை பட்டியலிட்டு பேசினார். தொடர்ந்து அவர் மக்கள் மத்தியில் பேசியதாவது; அ.தி.மு.க., ஆட்சியில் கொரோனா காலம், கஜா புயல் காலத்திலும் விலைவாசி ஏறவில்லை. ஆனால் இப்போது அனைத்து வரிகளும் திமுக அரசால் உயர்த்தப்பட்டு விட்டன. அதிலும் குறிப்பாக மின் கட்டணம் எப்படி கணக்கீடு செய்கிறார்கள் என்று எனக்கே இன்னமும் புரியவில்லை. இஷ்டத்துக்கு மின் கட்டணத்தை எழுதுகின்றனர்.என்ன கணக்கு வைத்து கணக்கிடுகின்றனர் என்று கண்டுபிடிக்க முடியவில்லை. எங்களாலேயே கண்டுபிடிக்க முடியவில்லை. என் வீட்டுக்கு வழக்கமாக 4500 அல்லது 5000 ரூபாய் வரை மின்கட்டணம் வந்து கொண்டு இருந்தது.ஆனால் இப்போது 12,500 ரூபாய் வருகிறது. நான் அதிகாரியிடம் கேட்டேன். அவர்கள் ஏதேதோ சொல்கிறார்கள். ஆகவே இப்படி மக்களை குழப்பி, மக்களிடம் இருந்து சுரண்டுகிற ஆட்சி தேவையா? இந்த (திமுக) ஆட்சி வந்தபின்னர், 52 சதவீதம் மின்கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. ஆண்டுதோறும் 5 சதவீதம் என 3 முறை 15 சதவீதம் உயர்த்தி, இப்போது 67 சதவீதமாக மின்கட்டணத்தை உயர்த்தி உள்ளனர்.மின்கட்டண உயர்வால் நமக்கு வரவேண்டிய தொழிற்சாலைகள் எல்லாம் அண்டை மாநிலங்களுக்கு சென்று கொண்டிருக்கின்றன. எப்படி படித்தவர்களுக்கு வேலை கொடுக்க முடியும்? அதிமுக ஆட்சியில் 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன, செயல்பாட்டுக்கு வந்தன. திமுக ஆட்சி வந்தபின்னர், இதுவரைக்கும் எத்தனை தொழில் வந்தது? எவ்வளவு முதலீடு ஈர்க்கப்பட்டது, எத்தனை பேர் வேலைவாய்ப்பு பெற்றனர்? இதை எல்லாம் கேட்டால் எதற்குமே பதில் இல்லை. இன்றைக்கு ஊழல் நடக்காத துறையே இல்லை.கலெக்ஷன், கமிஷன், கரப்ஷன் என்பது தான் திமுகவின் கொள்கை.நேர்மையான அதிகாரிகள் பழிவாங்கப்படுகின்றனர். மக்களை பாதுகாக்கும் அதிகாரிகள் பந்தாடப்படுகின்றனர். இந்த ஆட்சியில் குற்றவாளிகளுக்கு பயமில்லை, மக்களுக்கு பாதுகாப்பில்லை. இவ்வாறு இ.பி.எஸ்., பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

தமிழ் மைந்தன்
ஜூலை 26, 2025 03:22

இது 200க்கு ஆரம்பிக்கப்பட்ட சங்கம் இதுல ஜால்ரா போடவேண்டும் சரி் அதற்காக இப்படியா


சங்கி
ஜூலை 25, 2025 23:09

திராவிட திருடர்கள் இருவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் .


Infomation Technology Officers ASSOCIATION Tamilnadu Municipal Dept
ஜூலை 25, 2025 22:48

உதய் மின் திட்டத்தில் கையெழுத்திட்டது யாரு.தவழப்பாடி பணம் கொடுத்து கூட்டி வந்துவிட்டு உன்னிஷ்டம் போல் கதை சொல்லக்கூடாது


krishnan
ஜூலை 25, 2025 21:21

அய்யா, நன்றி, நீங்க கேட்ட கேள்விக்கு !, ஆனா, உங்க ஆட்சியில மாதம் ஒரு முறை EB பில் நீங்க மட்டும் ஏன் எடுக்க வைக்கல? இல்லை அனுமதிக்கல? நீங்க ஆட்சியில இருந்தபோது, உங்க வீட்டுல EB பில் எவ்வளவு கட்டி இருந்தீங்க, எத்தனை மாதமா இவ்வளவு தொகை இப்ப கட்டுறீங்க, எதன்னை AC உங்க வீட்டில் உள்ளது, எத்தனை பணியாளர்கள் உள்ளார்கள், என பல கேள்விகள் தொங்கி உள்ளன


B N VISWANATHAN
ஜூலை 25, 2025 21:13

இவருக்கு இப்ப தான் பாதி தகவல் கொடுத்து இருக்காங்க. விளையாட்டு முடிஞ்சி 65 லக்ஷம் பேர் பட்டியலை பீஹார் அரசு கொடுத்துஆச்சு.


திகழ்ஓவியன்
ஜூலை 25, 2025 20:56

எடுபுடி அது உங்கள் தங்கமணி உதய் மின்திட்டத்தில் கையொப்பம் இட்டதால் தான் இது கூட தெரியல , அம்மா ஜெயா முடியாது என்று சொன்ன திட்டம் அது


ஆரூர் ரங்
ஜூலை 26, 2025 12:06

இப்போது கூட லேட் இல்லை. மீத்தேன் ஒப்பந்தத்தை ரத்து செய்தது போல உதய் யையும் வாபஸ் வாங்கலாம். ஆனால் மாட்டார்கள்.


Shankar C
ஜூலை 25, 2025 20:53

திமுக தேர்தல் வாக்குறுதிப்படி மாத மின் கணக்கெடுப்பும் நடக்கவில்லை. அதிமுக- வின் நிலை என்ன?


முதல் தமிழன்
ஜூலை 25, 2025 20:39

இவர் முதல்வரானால் கரண்டு பில்ஸ் எவ்வளவு. மத்த வரிகள் எவ்வளவு குறைப்பார். ஒன்னும் நடக்காது. வந்ததும் இவரும் ஏத்துவார் பிறகு 5 வருடம் ஓடும்.


varatha
ஜூலை 25, 2025 20:33

ஆட்சிக்கு வருவதற்காக என்ன என்ன வேலை செய்கிறார் பாருங்கள் முதலில் சசிகலா காலை வாரினர் இப்பொழுது மக்கள் காலை வார தயாராகிறார்


bogu
ஜூலை 25, 2025 20:32

நான் ஒரு சாமானியன் எங்கள் வீட்டில் 3 பேர் மட்டுமே வழக்கமாக 3500 தான் கரண்ட் பில் வரும் ஆனாஸ் இந்த மாதம் 12500 வந்து இருக்கிறது என்ன சொல்ல


சமீபத்திய செய்தி