உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரசியல் ஸ்டண்ட்களை ஓரம் வைத்துவிட்டு தமிழகத்தை காப்பாற்றுங்கள்: முதல்வருக்கு இ.பி.எஸ்., அறிவுரை

அரசியல் ஸ்டண்ட்களை ஓரம் வைத்துவிட்டு தமிழகத்தை காப்பாற்றுங்கள்: முதல்வருக்கு இ.பி.எஸ்., அறிவுரை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''இந்தியாவை காக்கப் போகிறேன் என்று நாள்தோறும் நீங்கள் செய்யும் அரசியல் ஸ்டண்ட்களை கொஞ்சம் ஓரம் வைத்துவிட்டு, முதலில் உங்கள் அதிகார வரம்பில் இருக்கும் தமிழகத்தைக் காப்பாற்ற வழியைப் பாருங்கள் ,'' என அ.தி.மு.க., பொதுச்செயலர் இ.பி.எஸ்., கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மதுக்கடையில் முத்துக்குமார் என்ற போலீஸ்காரர் அடித்துக் கொலை செய்யப்பட்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. போலீசாருக்கே பாதுகாப்பு துளியும் இல்லாத மாடல் தான் ஸ்டாலின் மாடல்.மக்களுக்கும், மக்களைக் காக்க வேண்டிய போலீசாருக்கும் பாதுகாப்பு இல்லாத இந்த ஆட்சி என்பது செயலற்ற வெறும் பொம்மை ஆட்சியே!தங்கள் பணிகளை செய்யும் போலீசாரின் பாதுகாப்பு பறிபோவதற்கு போலீஸ்துறையை தனது நேரடி கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக சினிமா வசனம் மற்றும் வெட்டி பேச்சு பேசும் நிர்வாகத் திறனற்ற பொம்மை முதல்வர் முழு பொறுப்பேற்க வேண்டும்!முதல்வர் ஸ்டாலின் அவர்களே- இந்தியாவை காக்கப் போகிறேன் என்று நாள்தோறும் நீங்கள் செய்யும் Political Stunt-களை கொஞ்சம் ஓரம் வைத்துவிட்டு, முதலில் உங்கள் Jurisdiction-ல் இருக்கும் தமிழகத்தைக் காப்பாற்ற வழியைப் பாருங்கள்!முத்துக்குமார் கொலையில் தொடர்புள்ளோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பதுடன் , அவர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் , உரிய நிதி உதவியும் வழங்கிட ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் இ.பி.எஸ்., கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

P.S.GANESAN Ganesan
மார் 28, 2025 11:12

அ தி மு க மற்றும் தி மு க என மாறி மாறி ஆட்சி செய்தாலும் சாராயம் மட்டும் மாறாமல் தமிழ்நாட்டில் வியாபித்துக்கொண்டிருக்கிறது.உங்களுடைய கஜானாக்கள் மட்டும் நிரம்பிக்கொண்டிருக்க சாமானியனின் குடிசை கூட தூர்ந்து ஒன்றுமில்லாமல் போய்விட்டது .நீங்கள் இருவரும் குடிமக்களை காப்பதாக நடத்தும் நாடகத்தை தொடருங்கள்.


Mahendran Puru
மார் 28, 2025 10:00

சொந்தக்காரரை காப்பாற்ற எம்ஜிஆர் தன்மானத்தோடு நிறுவி நடத்திய அதிமுகவை காவு கொடுத்து விடாதீர் எடப்பாடியாரே .


Ravi Kulasekaran
மார் 28, 2025 09:22

சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது ஆளுநர் சட்டம் ஒழுங்கு விபரங்களை கேட்டு பெற்றுக் கொள்ளவேண்டும் உண்மையான நிலவரம் தமிழ் நாட்டு காவல்துறை முதல்வர் வசம் உண்மையான விபரக்குறிப்பு கிடைப்பது அரிது


Pr.Kingsly
மார் 28, 2025 06:38

ஐயா உங்களை காப்பாற்றி கொள்ளுங்கள்


Padmasridharan
மார் 28, 2025 06:03

கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு பல லட்சங்கள் உதவி செய்த அரசுக்கு, இந்த இறந்த காவலர் குடும்பத்திற்கு அரசு கண்டிப்பாக உதவி செய்வாங்க, யார் சொன்னாலும் சொல்லாட்டியும்... தமிழகத்தில் நடக்கும் எல்லா குற்றங்களுக்கும், ஆளும் கட்சியை குறை கூறிக்கொண்டிருக்கும் அரசியல்வாதிகளின் நிலை அவலம்.


Ravi Kulasekaran
மார் 28, 2025 09:24

அப்போது யாரை குறைசொல்ல வேண்டும் பிரதமரையா அல்லது உள்துறை அமைச்சரையா சொல்லுங்கள்


தாமரை மலர்கிறது
மார் 27, 2025 22:40

அமித் ஷாவை பார்த்துவிட்டு வந்தபிறகு எடப்பாடி உத்வேகத்துடன் செயல்படுகிறார். மீண்டும் முதல்வர் ஆகிடுவோம் என்று முழுமையாக நம்புகிறார். பிஜேபி தலைமையின் கீழ் ஒரு பம்பரமாக செயல்பட எடப்பாடி உறுதிபூண்டுள்ளார். அடுத்து தேர்தலுக்கு முன் விஜய் மற்றும் சீமான் அமித் ஷாவை போய் பார்ப்பார்கள். ஸ்டாலின் ஆட்சி இதோடு காலி.


சமீபத்திய செய்தி