உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னை மாநகராட்சி சொத்து வரி உயர்வுக்கு இ.பி.எஸ்., கண்டனம்

சென்னை மாநகராட்சி சொத்து வரி உயர்வுக்கு இ.பி.எஸ்., கண்டனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை மாநகராட்சியில் ஆண்டுதோறும் 6 சதவீத சொத்து வரி உயர்வு மற்றும் மின் மயானத்தை தனியாருக்கு விடும் முடிவை திரும்ப பெறுமாறு தமிழக அரசுக்கு இ.பி.எஸ்., வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் கடந்த 40 மாதங்களாக நடைபெறும் தி.மு.க.,வின் காட்டாட்சி தர்பார் ஆட்சியில், அப்பாவி மக்களை வாட்டி வதைப்பதையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவது கொடுமையின் உச்சம். நேற்று (செப்.,27) சென்னை மாநகராட்சியில் நிறைவேற்றப்பட்ட ஒருசில தீர்மானங்கள், சென்னை மக்களின் பாக்கெட்டுகளில் இருந்து நேரடியாக பணத்தைப் பிடுங்கும் வகையில் அமைந்துள்ளது மிகவும் கண்டனத்திற்குரியது. சென்னை மாநகராட்சியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில், கீழே குறிப்பிட்டுள்ள இரண்டு தீர்மானங்கள் மக்களை நேரடியாக பாதிக்கக் கூடியவைகளாகும். * ஆண்டுதோறும் 6 சதவீதம் சொத்து வரி உயர்வு. (சொத்து வரி உயர்த்தப்படும் போதெல்லாம் குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்புக் கட்டண உயர்வு, குப்பை வரி உயர்வும் மறைமுகமாக உள்ளடங்கியுள்ளது. * மயானபூமி அமைக்க தனியாருக்கு அனுமதி வழங்குவது. 'பூமியில் பிறந்த மனிதன் நிம்மதி பெறுவது அவன் அடக்கம் ஆகும் போதுதான், பெரும் துயரம் கொள்வது உடனிருந்தவர்கள் காலமாகும்போது' என்று மேலை நாட்டு அறிஞர் ஒருவர் மனித வாழ்க்கை பற்றிக் குறிப்பிட்டுள்ளார். தனியார் மற்றும் அரசுத் துறைகளில் பணிபுரிபவர்களுக்கு ஆண்டுதோறும் ஊதிய உயர்வு அளிப்பது வழக்கம். தனியாருக்கு சம்பள உயர்வு என்பது அந்தத் தனியார்நிறுவனத்தில் லாபம் ஈட்டுதலைப் பொறுத்தது. ஆண்டுதோறும் சம்பள உயர்வு நிலையானதல்ல.அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு 3 சதவீதம்தான் சம்பள உயர்வு, ஆனால், ஏற்கெனவே 100 சதவீதம் மின்கட்டண உயர்வை அறிவித்ததுடன், ஆண்டுதோறும் மின் கட்டணம் மாற்றியமைக்கப்படும் என்று அறிவித்துள்ள ஸ்டானின் தி.மு.க., அரசு, ஆண்டுக்கு 6 சதவீதம் சொத்து வரி உயர்வை அறிவித்து, சென்னை மாநகர மக்களின்தலையில் இடியை இறக்கியுள்ளது. இதன்மூலம் குடிநீர் வரி, கழிவு நீர் அகற்றல் வரி என்று அனைத்து வரிகளும், சொத்து வரி உயர்வுக்கேற்ப தானாகவே உயர்த்தப்பட்டுவிடும். இத்துடன் குப்பைகள் அகற்றும் வரியும் உயர்த்தப்பட்டுள்ளது.இதனால் பாதிக்கப்படுபவர்கள் சொந்த வீடு, வணிக வளாகம் செய்பவர்கள் மட்டுமல்ல, வாடகைக்கு உள்ளவர்களும் பாதிக்கப்படுவார்கள். ஏற்கெனவே விலைவாசிஉயர்வால் தினசரி வாழ்க்கையையே தட்டுத் தடுமாறி நடத்திக்கொண்டிருக்கும் 90 சதவீத சாமான்ய மக்களின் வாழ்க்கைத் தரம் கடுமையாக பாதிக்கப்படும்.இன்றைய சென்னை மாநகராட்சியில் குண்டும் குழியுமான சாலைகள், நிரம்பி வழியும் கழிவு நீர் குழாய்கள், குடிநீர் குழாய்களில் கலக்கும் கழிவு நீர்,நேற்று முன்தினம் பெய்த 10 செ.மீ. மழைக்கே பல் இளிக்கும் மழைநீர் வடிகால் அமைப்பு, வெள்ள நீரால் நிரம்பி வழிந்த சாலைகள், மழை நீரால் கொசு உற்பத்தி கேந்திரமாக மாறியுள்ள பல மாநகராட்சி பூங்காக்கள் என்று காணப்படும் சென்னை மாநகராட்சி, இனி ஆண்டுதோறும் 6 சதவீத சொத்து வரியை அறிவித்துள்ளதற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.அரசின் சேவைகளில், பணிகளில் ஒருசிலவற்றை தனியார்மயமாக்குதல் என்பது அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடியது என்றாலும், வியாபார நோக்கில் மயானத்தை தனியார்மயமாக்கல் என்பதை அ.தி.மு.க., சுடுமையாக எதிர்க்கும் என்று அழுத்தம் திருத்தமாக தெரிவித்துக்கொள்கிறேன். இறப்பிற்குப் பின் நிம்மதியாக அடக்கம் செய்யப்படுவதை சேவையாகக் கருதி, அரசு மயானங்கள் தண்ணீர் வசதி, நவீன எரியூட்டுக் கூடம் போன்ற வசதிகளுடன், குறைந்த கட்டணத்தில் செயல்பட்டு வருகின்றன. இதன் காரணமாக ஏழை, எளிய, நடுத்தர மக்கள் இறப்பவர்களின் இறுதிச் சடங்குகளை குறைந்த கட்டணத்தில் குறித்த நேரத்தில் மேற்கொண்டு வருகின்றனர்.ஆனால், ஸ்டாலினின் தி.மு.க., அரசு, மயானபூமி அமைக்க தனியாருக்கு அனுமதி வழங்கும் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. இச்செயல், இரக்கமற்ற கல் நெஞ்சுகொண்டவர்களிடம் அரசாங்கம் சிக்கி சீரழிவதைக் காட்டுகிறது. மேலும், மயானத் தொகை வரைவோலை (DD) மூலமாகவோ, ஆன்லைன் மூலமாகவோ செலுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. உறவுகள் மறைந்த 3 துக்கத்தில் இருப்பவர்கள் வரைவோலை எடுக்க வங்கிக்கு போய் வரிசையில் நிற்க வேண்டும்; ஆன்லைனில் செலுத்த இ-சேவை மையத்தை நாட வேண்டும் என்பது திராவக மாடல் ஆட்சியாளர்களின் குரூர மனோபாவத்தை தோலுரித்துக் காட்டுகிறது.சென்னை மாநகராட்சியில் தற்போது பணிபுரிந்துவரும் பெரும்பாலான தூய்மைப் பணியாளர்கள் 2007-2008ஆம் ஆண்டுகளில், அப்போதைய தி.மு.க., ஆட்சிக் காலத்தில்தனியார் நிறுவனங்கள் மூலம் ஒப்பந்தத் தொழிலாளர்களாக பணியமர்த்தப்பட்டு, சுமார் 15 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறார்கள். தி.மு.க., ஆட்சியில் நியமிக்கப்பட்டிருந்தாலும். அதன் பின்பு நடந்த 10 ஆண்டுகால அம்மாவின் அரசுகளில், அவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இந்நிலையில், சென்னை மாநகராட்சி தூய்மைப் பணிக்கான ஒப்பந்தத்தை வேறொரு நிறுவனத்திடம் ஒப்படைக்க உள்ளதாகவும், அந்நிறுவனம் நீண்டகாலமாக பணிபுரிந்து வரும் தூய்மைப் பணியாளர்களை வேலையில் இருந்து நீக்கிவிட்டு, குறைந்த சம்பளத்தில் அண்டை மாநிலம் மற்றும் வடமாநிலங்களில் இருந்து ஆட்களை நியமிக்க உள்ளதாகவும், இதை எதிர்த்து சென்னை மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் முன்பு தூய்மைப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருவதாகவும் செய்திகள் வருகின்றன.தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று போன்ற காலகட்டங்களில் தினசரி தூய்மைப் பணிகளை மேற்கொண்ட, சுமார் 15 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்துவரும் தூய்மைப் பணியாளர்களின் பணி பாதுகாப்பை தி.மு.க. அரசு உறுதி செய்திட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Kasimani Baskaran
செப் 29, 2024 07:18

பங்காளிகள் மீது கண்டனம் தெரிவிப்பது, வலியறுத்துவது போன்ற வேளைகளில் முழுநேரமும் பிசி. செ பா அமைச்சாவதற்கு எந்த எதிர்ப்பும் கிடையாது. ஆக ஆதீம்க்கா முழுவதுமாக குளோஸ்.


Rpalnivelu
செப் 29, 2024 04:29

அப்பப்ப நான் இருக்குற மாதிரி காமிச்சிக்கிறது. பழனிச்சாமியின் ஒரே வேல அதிமுகவை இழுத்து மூடுவதுதான்


narayanansagmailcom
செப் 28, 2024 21:13

உபயோகம் இல்லா மாடல் அரசு.


ஆரூர் ரங்
செப் 28, 2024 20:31

பங்காளி கிட்டவே? வேண்டாம்..


Ramesh Sargam
செப் 28, 2024 20:10

மகளிர்க்கு இலவச பேருந்து பயணம் என்று பல இலவசங்களை அள்ளிவிடுவது. பிறகு நிதி பற்றாக்குறை ஏற்பட்டால், அதை சரிசெய்ய இப்படி வரி உயர்வு, பால் விலை உயர்வு, மற்ற அத்தியாவசிய பண்டங்கள் விலை உயர்வு, மின்கட்டண உயர்வு என்று ஏற்றுவது. போதாக்குறைக்கு மத்திய அரசிடம் கையேந்துவது.


S.L.Narasimman
செப் 28, 2024 20:03

சென்னை மக்களுக்காக போராட்டம் நடத்துவது வேஸ்ட். வோட்டு போடுவது தீயசக்தி குடும்பத்துக்கு .


RAJAKUMAR PT
செப் 28, 2024 20:27

அவ்வளவு தான் கண்டனம் மட்டும். தமிழக மக்கள் மேல் அக்கறை இல்லாத ஒரு தலைவர்.


Balaji Ramanathanfeellikebecoming shiva
செப் 28, 2024 19:45

The Corporation is not able to give pure water to the residents of Chennai. It is not concerned about public's health hazards of public.Allowing sewage water mixing inside the lakes supplying water to the residents of Greater Chennai. But simply increase the property and other corporation taxes is not fair.


முக்கிய வீடியோ