உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இ.பி.எஸ்., தேர்தல் சுற்றுப்பயணம்: ஜூலை 7ல் கோவையில் துவக்குகிறார்

இ.பி.எஸ்., தேர்தல் சுற்றுப்பயணம்: ஜூலை 7ல் கோவையில் துவக்குகிறார்

சென்னை: சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், அ.தி.மு.க., பொதுச்செயலர் இ.பி.எஸ்., முதற்கட்டமாக வரும் ஜூலை 9 முதல் தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அவரது பயணம் கோவையில் துவங்குகிறது.சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், அ.தி.மு.க., மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்களுடன் இ.பி.எஸ்., ஆலோசனை நடத்தினார். அப்போது, விரைவில் தொகுதிவாரியாக சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக கூறியிருந்தார்.இந்நிலையில், இந்த சுற்றுப்பயணம் குறித்த விவரங்களை அ.தி.மு.க., வெளியிட்டு உள்ளது. இதன்படி, ' மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்' என்ற நோக்கத்துடன், முதற்கட்டமாக வரும் ஜூலை 7 முதல் 21 வரை கோவை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார்.இ.பி.எஸ்., பயண விவரம்:ஜூலை 7 - கோவை புறநகர்ஜூலை 8 - கோவை மாநகர்ஜூலை 10 - விழுப்புரம்ஜூலை 11- விழுப்புரம்ஜூலை 12 - கடலூர் வடக்கு, கடலூர் தெற்குஜூலை 14 - கடலூர் தெற்கு, கடலூர் மேற்கு, கடலூர் கிழக்குஜூலை 15- மயிலாடுதுறைஜூலை 16- திருவாரூர், நாகைஜூலை 17 - நாகை, திருவாரூர்ஜூலை18 - திருவாரூர், தஞ்சாவூர் கிழக்குஜூலை 19 - தஞ்சாவூர் மேற்கு, தஞ்சாவூர் மத்தி, தஞ்சாவூர் மேற்குஜூலை 21- தஞ்சாவூர் மத்தி, தஞ்சாவூர் தெற்கு


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Vijay D Ratnam
ஜூன் 27, 2025 23:19

காலை சுத்துன பாம்ப கழட்டி உட்டீங்க. அது மறுபடியும் வந்து இறுக்கமா சுத்திகிட்டு. இப்போ அந்த கருமத்தோட சுற்றுப்பயணம் போறாரு எடப்பாடி பழனிசாமி. பாவம் நல்ல மனிதர். சேர்க்கை சரியில்ல.


திகழ்ஓவியன்
ஜூன் 27, 2025 22:27

கேட்ட கேள்விக்கு நேரடியாகப் பதில் தராமல் திமுக விற்கு பயம் என்றெல்லாம் உதார் விடுவது ஏன் ? ஈ பி எஸ் தான் முதல்வர் என்று அமித்ஷா கூறாதது ஏன் ? அவர் ஆட்சியின் போது நடந்த ரெய்டுகளில் அவருக்குப் பிரச்சனைகள் உள்ளனவா ? அது தான் அவர் பெயரை குறிப்பிடத் தயக்கமோ?எல்லாவற்றையும் மூடு மந்திரமாக ஏன் பேச வேண்டும்


Kulandai kannan
ஜூன் 27, 2025 19:44

இலக்கணப் பிழையில்லாமல் தமிழ் பேசுங்கள்


Oviya Vijay
ஜூன் 27, 2025 20:26

மன்னித்துக் கொள்ளுங்கள். இனி கவனமாக இருக்கிறேன்...


Oviya Vijay
ஜூன் 27, 2025 19:06

அந்த காலத்தில் MGR வருகிறார் என்றால் கூடும் கூட்டத்தை பார்க்க வேண்டுமே... அதற்கென்று சாலையின் இருபுறமும் கம்புகள் கட்டி போலீஸ் பந்தோபஸ்து கொடுப்பார்கள்... காரிலிருந்தவாறே இருவிரல்களை காட்டிக் கொண்டு ஜம்மென்று செல்வார்... அதற்கெல்லாம் முகராசி வேண்டும்... அந்த முகராசி என்பது அதற்கடுத்து வந்த ஜெயலலிதாவிடமும் இருந்தது... ஆனால் அதற்கு பின் மக்கள் அபிமானம் பெற்ற அப்பேற்பட்ட முகராசியை எடப்பாடியிடமோ, ஓ. பன்னீர்செலவத்திடமோ அல்லது தினகரனிடமோ யாரிடத்திலும் காண முடியவில்லை...


vivek
ஜூன் 27, 2025 20:24

கட்டுமரம் ஊர்வலமா போலயா ஓவியரே


guna
ஜூன் 27, 2025 20:25

ஓவியா...கட்டுமரம் முக ராசி எப்படி....


V Venkatachalam
ஜூன் 27, 2025 22:07

விக்கு முதல்வரின் முகராசிய பத்தி கேவலமா ஒரு க உ பி யே பேசுது. அடுத்த கட்சி காரன்களிடம் முகராசிய தேடுகிறான்கள்.. பேஷ் பேஷ்.


Thravisham
ஜூன் 27, 2025 23:52

எம்ஜிஆர் என்கின்ற இமயத்தையும் ஒரு செங்கல் போன்ற டெட்பாடியையும் கம்பேர் பண்ணலாமா? நியாயமா?


புதிய வீடியோ