உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இதைச்சொல்ல இ.பி.எஸ்.,க்கு தகுதியில்லை; பட்டியல் போட்டு சொல்கிறார் ஆர்.எஸ்.பாரதி!

இதைச்சொல்ல இ.பி.எஸ்.,க்கு தகுதியில்லை; பட்டியல் போட்டு சொல்கிறார் ஆர்.எஸ்.பாரதி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'கொலைகளை நாங்கள் நியாயப்படுத்தவில்லை, ஆனால் அது பற்றி பேச, இ.பி.எஸ்.,க்கு தகுதியில்லை' என அ.தி.மு.க., ஆட்சியில் கொலை சம்பவங்களை லிஸ்ட் போட்டு தி.மு.க., அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேட்டி அளித்தார்.'தி.மு.க., ஆட்சியில் கொலை என்பது சர்வசாதாரணம் என்ற அவல நிலை வரும் அளவிற்கு நிர்வாகத் திறனற்ற தி.மு.க., அரசு சட்டம் ஒழுங்கைக் காக்கத் தவறியது' என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., குற்றம் சாட்டினார். இது தொடர்பாக சென்னையில், தி.மு.க., அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தஞ்சாவூரில் ஆசிரியை கொலை, ஓசூரில் வழக்கறிஞர் மீது தாக்குதல் தனிப்பட்ட விரோதத்தால் நடந்தவை. தனிப்பட்ட கொலைகள் நடப்பதற்கும், சட்டம் ஒழுங்கிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை இ.பி.எஸ்., புரிந்து கொள்ள வேண்டும்.

சட்டம் ஒழுங்கு

தூத்துக்குடியில் 13 பேரை சுட்டுக்கொன்றது, கோடநாடு பங்களா கொலை, கொள்ளை சம்பவங்கள் தான் சட்டம் ஒழுங்கு பிரச்னை. அ.தி.மு.க., ஆட்சியில் பல ஆசிரியர்கள் கொலை செய்யப்பட்டார்கள். மக்கள் மத்தியில் தவறான கருத்தை பரப்ப முட்டி போட்டு கரணங்கள் அடிக்கிறார் இ.பி.எஸ்,. தன் மீதான சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் வரை சென்று தடை வாங்கியவர் தான் இ.பி.எஸ்., கள்ளக்குறிச்சி விவகாரத்தில் சி.பி.ஐ., விசாரணையை வரவேற்கும் இ.பி.எஸ்., தன் மீதான புகாரில் சி.பி.ஐ., விசாரணையை எதிர்ப்பது ஏன்?

தகுதியில்லை

மனசாட்சியை அடகு வைத்துவிட்டு இ.பி.எஸ்., அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார். தி.மு.க., ஆட்சியில் குற்றங்கள், கொலைகள் குறைந்துள்ளது. கொலைகளை நாங்கள் நியாயப்படுத்தவில்லை, ஆனால் அது பற்றி பேச, இ.பி.எஸ்.,க்கு தகுதியில்லை. தி.மு.க.,வின் சிறப்பான ஆட்சியை நீதிமன்றமே பாராட்டி உள்ளது. தமிழகத்தில் 79 சதவீதம் மக்கள் முதல்வருக்கு ஆதரவாக உள்ளனர். அ.தி.மு.க., ஆட்சியில் 2020ம் ஆண்டில் 1252 கொலைகள் நடைபெற்றுள்ளன. இந்த ஆண்டு 799 கொலைகள் மட்டுமே நடந்துள்ளது. பழனிசாமி போல் நாங்கள் கணக்கிட்டு சொன்னால் அ.தி.மு.க., ஆட்சியில் ஒரு லட்சம் கொலைகள் பதிவாகியுள்ளது. இவ்வாறு ஆர்.எஸ்.பாரதி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

பேசும் தமிழன்
நவ 22, 2024 09:06

சட்டம் ஒழுங்கை காப்பாற்ற துப்பில்லை.... அவர் பேச கூடாது... இவர் பேச கூடாது என்று கூறுகிறார்.... வேறு யார் நம்ம பேச வேண்டும் அமெரிக்க அதிபர் மற்றும் ரஷ்யா ஜனாதிபதி பேச வேண்டும் என்று எதிர்பார்க்கிறாரா ???


Ramesh Sargam
நவ 21, 2024 21:17

ஆக, நம் அரசியல்வாதிகள் ஒரு கொலை விழுந்தாலும், அதற்கு வருத்தம் தெரிவிக்க மாட்டார்கள். அதைவைத்து ஒரு அசிங்க அரசியல் dirty politics தான் செய்வார்கள். கேடுகெட்ட அரசியல்வாதிகள்.


Raj S
நவ 21, 2024 19:58

அடுத்தவங்க தகுதி பத்தி பேசற அளவுக்கு இன்னிக்கி அரசியல் தரம் தாழ்ந்து போச்சு...


சுராகோ
நவ 21, 2024 17:53

மக்களுக்கும் இதை சொல்ல தகுதி இல்லை ஏனென்றால் என்று மக்கள் ஓட்டுக்கு பணம் வாங்கினர்களோ அன்றே தகுதி போய் விட்டது. அடுத்த தேர்தலுக்கு உயிரோடிருந்தால் பணம் தரப்படும்.


Dharmavaan
நவ 21, 2024 17:48

எல்லாவற்றுக்கும் மூல காரணம் கோர்ட்.குற்றவாளிகளை மென்மையாக தண்டிப்பது ...ஒருவர் சொன்னது போல சிங்கப்பூர் போல் மரண தண்டனை என்றிருந்தால் குற்றம் செய்ய பயப்படுவான்.அந்த பயம் அநீதி கோர்ட்டுகளால் போய் விட்டது


Dharmavaan
நவ 21, 2024 17:38

நீதியை கைக்குள் வைத்திருக்கும் திருட்டு திமுகாவை பிச்சை வாங்கியவர்கள் பாராட்டாமல் என்ன செய்யும்


வைகுண்டேஸ்வரன்
நவ 21, 2024 17:25

இதுவே RSS பாரதி யாக இருந்தால், இ பி எஸ் க்கு பதிலடி என்று தலைப்பு போட்டிருப்பார்கள். இ பி எஸ் க்கு பாரதி செம counter குடுத்திருக்கார். இ பி எஸ் சின் பியூஸ் புடுங்கப்பட்டது.


Murthy
நவ 21, 2024 17:23

தூத்துக்குடியில் 13 பேரை சுட்டுக்கொன்ற போலிஸுக்கு பதவி உயர்வை கொடுத்த கேவலமான ஆட்சி திமுக ஆட்சி.....


hari
நவ 21, 2024 16:50

தகுதியை பற்றி பேச இரண்டு கும் தகுதி இல்லை


RAVINDRAN.G
நவ 21, 2024 16:32

ரெண்டு கழகங்களுமே வேஸ்ட். அதில் தத்தி கழகம் முதலிடம் , தவழ்ந்தபாடி கலக்கம் இரண்டாமிடம் . கழகங்கள் நாட்டுக்கு நாடு மக்களுக்கு கேடு .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை