மேலும் செய்திகள்
100 நாளில் திமுக ஆட்சி தூக்கி எறியப்படும்: அண்ணாமலை
2 hour(s) ago | 5
அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிக்க 10 பேர் குழு: இபிஎஸ் அறிவிப்பு
3 hour(s) ago | 5
யாருடன் கூட்டணி;உரிய நேரத்தில் அறிவிப்போம்: பிரேமலதா
5 hour(s) ago | 5
சென்னை: 'தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதற்கு தி.மு.க.,தான் காரணம். தார்மீக பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்' என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., வலியுறுத்தினார்.சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் கவர்னர் ஆர்.என் ரவியை அதிமுக., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., சந்தித்து தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கத்தை தடுக்க கோரி மனு அளித்தார். கவர்னரை சந்தித்த பின்னர் நிருபர்கள் சந்திப்பில் இ.பி.எஸ்., கூறியதாவது: தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கத்தை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கவர்னரிடம் வலியுறுத்தி உள்ளோம். தி.மு.க., போதைப்பொருள் விற்பனை செய்து கிடைத்த பணத்தை தேர்தலில் செலவிட உள்ளது. போதைப்பொருள் நிறைந்த மாநிலமாக தமிழகம் உள்ளது. மடியில் கனம் இருப்பதால் தி.மு.க.,விற்கு பயம். ஒரு துளி போதைப்பொருள் கூட தமிழகத்தில் விற்பனை செய்யாத அளவு நடவடிக்கை எடுக்க வேண்டும். போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ள ஜாபர் சாதிக் உடன் முதல்வர் ஸ்டாலின் தொடர்பில் இருந்ததாக பத்திரிகைகளில் செய்திகள் வந்தன. தார்மீக பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என மக்கள் எதிர் பார்க்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
2 hour(s) ago | 5
3 hour(s) ago | 5
5 hour(s) ago | 5