உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தேஜ கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் இபிஎஸ் தான்: சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நயினார்

தேஜ கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் இபிஎஸ் தான்: சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நயினார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருச்சி: தேசிய ஜனநாயக கூட்டணியின் தமிழக முதல்வர் வேட்பாளர் இபிஎஸ் தான் என்று தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கூறி உள்ளார்.அவர் திருச்சியில் அளித்த பேட்டி; https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=g8cug4bq&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தமிழகத்தில் தினசரி எங்கு பார்த்தாலும் பாலியல் பலாத்கார சம்பவங்கள், கஞ்சா பயன்பாடு அதிகரித்து வருகிறது. கடந்தாண்டை விட 59 சதவீதம் பாலியல் வன்கொடுமைகள் நடந்து வருகிறது. 125 சதவீதம் சிறு குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகமாக நடந்து வருகிறது.ஆசிரியர்கள் பள்ளிக்கு வரும்போது மதுபோதையிலே வருகின்றனர். ஆசிரியர்கள் பற்றாக்குறை, சொத்து வரி அதிகம் விதிப்பு, மின் கட்டண உயர்வு அதைவிட அதிகம். எப்போது தேர்தல் வந்தாலும் இந்த அரசாங்கம் வீட்டுக்கு அனுப்பப்படக் கூடிய அரசாங்கமாக தான் இருக்கிறது.ஜக்தீப் தன்கர் வீட்டுக் காவலில் வைக்கப்படவில்லை. அவர் சுதந்திரமாக தான் உள்ளார். ஆனால் இப்படி ஒரு வதந்தியை பரப்பிக் கொண்டே இருக்கின்றனர். தமிழகத்தில் இப்படி ஒரு வதந்தியை பரப்புகின்றனர்.எங்களின் கூட்டணிக் கட்சித் தலைவர் இபிஎஸ். தேர்தல் முடிந்த பின்னர் அவர்கள் என்ன முடிவு எடுக்கிறார்களோ அதுதான். இனி பிரதமர் மோடி அடிக்கடி தமிழகத்துக்கு பயணம் மேற்கொள்வார்.யாரும் ரொம்ப குழப்பிக் கொள்ள வேண்டாம். தமிழகத்தில் கூட்டணி ஆட்சி. இப்போது இருக்கும் ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டிய ஆட்சி. இபிஎஸ் தான் முதல்வர் வேட்பாளர். மேலும் பல கட்சிகள் எங்கள் கூட்டணிக்கு வருவார்கள். பலமான கூட்டணி தான் ஜெயிப்பார்கள் என்று கிடையாது. நிச்சயமாக தமிழகத்தில் மிக பெரிய ஆட்சி மாற்றம் வரும். திமுக ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்படும். காங்கிரசுடன் விஜய் கூட்டணி வைப்பாரா என்று அவர்(விஜய்) தான் சொல்ல வேண்டும்.திமுக அரசு வீழ்த்தப்பட வேண்டும் என்ற எண்ணத்தோடு, எம்ஜிஆர் கொள்கைகளை கடைபிடிக்கிறவர்கள் எல்லோரும் ஒன்று சேர வேண்டும்.இவ்வாறு நயினார் நாகேந்திரன் பேட்டி அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

தர்மராஜ் தங்கரத்தினம்
ஆக 25, 2025 01:34

இது கன்பார்ம் ஆகாத நிலையிலா அவரு மூணு மாவட்டங்களில் பிரச்சாரத்தை முடிச்சாரு >>>>


Tamilan
ஆக 24, 2025 23:11

வேறு வழியில்லை. மதவாத கும்பலை விரட்டியடிக்க ஒன்று சேர்ந்தது திராவிடம். கட்சி பாகுபாடில்லாமல் மற்றக்கட்சியினரும் திமுகவினருக்கு கூட பழனிச்சாமி கூட்டத்துக்கு சென்றனர். இதேபோல்தான் திமுக 2016 ல் ஆட்சியை இழந்தது. தான் தோற்றாலும் மதவாத ஆக்கிரமிப்பு சக்திகளை விரட்டியடித்தது.


sankar
ஆக 24, 2025 20:43

ஜெயிச்சாதானே


திகழ்ஓவியன்
ஆக 24, 2025 19:24

அத உங்க OWNER அமித் ஷா சொல்லட்டும் , என்ன நேற்று வரை தற்குறி என்றவர் இன்று அவர முதல்வர் ஆக்காம சாப்பிட மாட்டேன் என்கிறார் , முதலில் கட்சியை வளறுங்கள்


pakalavan
ஆக 24, 2025 19:07

திமுக - 145 , காங்கிரஸ் - 21 திருமா, கம்யூனிஸ்டு மநீமா மதிமுகா தேமுதிகா எல்லாம் சேர்ந்து - 32 திமுகா ஆட்சி அமைவதை உறுதி, அதிமுக ஒரு 34 தொகுதி, விஐய் சீமான் தலா -1 அவ்ளோதான்,


sankar
ஆக 24, 2025 20:43

கனவில் வாழும் தொண்டன்


M Ramachandran
ஆக 24, 2025 18:18

எப்போதுமென வேறு கட்சியிலிருந்து தவ்வி வருபவர்கள் மேல் கவனம் வைத்திருக்க வேண்டும். ஆதையம் தேடி வருபவர்கள் கட்சியில் ஓரம் கட்ட பட்டவர்கள் பாலி வாங்க துடிப்பவர்கள் இவர்கள் தான் வருவார்கள். இவர்களிடம் நிச்சயம் கட்சியின் கொள்கை பற்றி கவலை படாதவர்கள் தான் சொந்த ஆதாயத்திற்கு வருபவர்கள்.


ramesh
ஆக 24, 2025 17:49

நீங்க என்னதான் சொன்னாலும் உங்களை கழட்டி விட்டு விஜய் உடன் கூட்டணி அமைக்க எடப்பாடி தயார் ஆகி விட்டார் . முதல்வர் பதவி வழங்கிய சசிகலாவை கட்சியில் இருந்து நீக்கியவர் . நீங்கள் எல்லாம் அவர்முன்பு ஜுஜுபி


M Ramachandran
ஆக 24, 2025 17:07

இவர் சீக்கிரமெ தாய் கழகத்துடன் ஐயக்கிய மாகிவிடுவார். அதற்கான முயற்சியை எப்பொதோ அமித் ஷாவை முட்டாளாக்கி துவங்கி விட்டார்.


venugopal s
ஆக 24, 2025 17:04

அப்படிச் சொல்லாவிட்டால் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள ஒரேயொரு கட்சியும் ஓடிப்போய் விடுமே!


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
ஆக 24, 2025 19:33

வெட்கம் மானம் ரோஷம் விட்டவர்கள் தான் பாக்ஸுக்காக பல வருஷங்களாக ஒட்டி கொண்டு இருப்பார்கள்....கொள்கைக்காவும் தேசியத்திற்காகவும் இணையும் கூட்டணி எப்பொழுதும் நிலைத்து நிற்கும்.... பாக்ஸ் இல்லை என்று சொல்லட்டும், விசிக, காங்கரஸ், கம்மீஸ் இன்னும் உள்ள அல்லு சில்லுகள் எல்லாம் பறந்து விடும் இவர்களுக்கு கொள்கையாவது புண்ணாக்காவது....!!!


T.sthivinayagam
ஆக 24, 2025 16:44

தேஜ கூட்டணியின் துணை முதல்வர் கேச் ராஜ தான் என்றும் அறிவிக்க வேண்டும்


சமீபத்திய செய்தி