உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இ.பி.எஸ்., போல் துரைமுருகன் மிமிக்ரி; சட்டசபையில் சிரிப்பலை!

இ.பி.எஸ்., போல் துரைமுருகன் மிமிக்ரி; சட்டசபையில் சிரிப்பலை!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சட்டசபையில் விவாதத்தின்போது எதிர்க்கட்சி தலைவர் இ.பி.எஸ்., போல், ஆவேசமாக அமைச்சர் துரைமுருகன் பேசியது, ஆளும் கட்சியினர் மத்தியில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.டங்கஸ்டன் சுரங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் மீது சட்டசபையில் நடத்த விவாதத்தின் போது, அ.தி.மு.க., பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான இ.பி.எஸ்., பதில் அளித்து பேசினார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=jyt55q8q&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அப்போது இ.பி.எஸ்., பேசியதாவது: அவையின் கவனத்திற்கு கொண்டு வருவது, முன்கூட்டியே நடவடிக்கை எடுத்து இருந்தால் இவ்வளவு பிரச்னை வந்து இருக்காது. மக்களும் போராடி இருக்க மாட்டார்கள். அதை தான் அரசின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். இவ்வாறு இ.பி.எஸ்., பேசினார்.இதற்கு பதிலளிக்க எழுந்த அமைச்சர் துரைமுருகன், இ.பி.எஸ்., போலவே ஆவேசமாக பேசினார். அவரது பேச்சு, மிமிக்ரி செய்யும் வகையில் இருந்தது. துரைமுருகன் பேசுகையில், ''எதிர்க்கட்சி தலைவர் இ.பி.எஸ்., உரக்கப்பேசுகிறார். நானும் பேசிவிடுவேன்.ஏற்கனவே இந்த திட்டத்துக்கு எல்லா முயற்சியும் எடுத்து, மத்திய சர்காருக்கு தெரிவித்த பிறகு தான் தீர்மானத்தை கொண்டு வந்து இருக்கிறோம்' என்றார். அவரது பேச்சும், குரலும், ஆளும் கட்சியினர் மத்தியில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.இதைக்கண்ட எதிர்க்கட்சித்தலைவர் இ.பி.எஸ்., ''பேரவை தலைவர் அவர்களே ஒன்னும் சாதிக்க முடியவில்லை என்றால் இப்படி தான் பேசி ஆகணும். வேற என்ன பேச முடியும்? சரக்கு இருந்தால் தான பேச முடியும். இப்படி பேசினால் என்ன அர்த்தம். ஆ ஊன்னா என்ன? சட்டமன்றம் தான? மூத்த உறுப்பினர் மக்களுக்கு வழி காட்டியாக இருக்க வேண்டும். அதை விட்டு விட்டு, ஆ ஊன்னா என்ன? இதுக்கு எல்லாம் பயப்பட மாட்டேன். மக்களுடைய பிரச்னை உயிரை கொடுத்தும் காப்பாத்துவோம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

sangi mangi
டிச 10, 2024 08:45

குவார்ட்டருக்கும் கோழி பிரியாணிக்கும் ஒட்டு போடும் மக்கள் இருக்கும் வரை திராவிட கட்சிகளே ஆட்சி செய்யும்...


அப்பாவி
டிச 10, 2024 07:45

போட்ரா பத்து பர்சண்ட் கேளிக்கை வரி. மக்களிடம் வசூலித்து துரைக்கு குடுக்கணும்.


D.Ambujavalli
டிச 10, 2024 06:18

அன்று தொட்டு இவர் ஆணவம், அகங்காரத்தின் உருவாக்கவே இருந்தவர் முதல்வராக இருந்தவர், எதிர்க்கட்சித் தலைவி என்ற மரியாதையோ, பெண்மணி என்ற கண்ணியமோ இல்லாமல் சேலையைப் பிடித்து இழுத்த துச்சாதனன் தானே, இவரிடம் நாகரிகத்தை எதிர்பார்க்கலாமா ? சபாநாயகர் இவரைக் கண்டிக்க வேண்டாமோ ?


Anantharaman Srinivasan
டிச 09, 2024 20:34

கருணாநிதி காலத்து கருணாநிதிக்கு அடுத்து சட்டசபையில் சீனியர் என்று புலம்பத்தெரிகிறது. பிரச்சினைகளை அணுகி பதிலளிக்க துப்பில்லை துரைக்கு.


S.L.Narasimman
டிச 09, 2024 19:59

இப்படி காமெடியனாக இருப்பதால்தான் இந்த ஆளை விடியல் டம்மியாக கட்சியில் வைத்திருக்ககிறார்.


ko ra
டிச 09, 2024 18:21

கொஞ்சமாவது பொறுப்புடன் நடக்கிறாரா துரை முருகன். எத்தனை சீரியஸ் விஷயம் விவாதம் நடக்கிறது. காமெடி செய்து திசை திருப்புவது நியாயம் தானா?


R.MURALIKRISHNAN
டிச 09, 2024 16:50

ஏம்பா நீ சிரிச்சு விளையாடவா சட்டசபைக்கு அனுப்பினோம். உங்களால எதுவும் பண்ண முடியவேனா சிரிக்கறதா? 2026ல் உங்களை மக்கள் அழவைப்பார்கள்


Kumar Kumzi
டிச 09, 2024 16:43

ரவுடிகளும் காமெடியனுங்களும் குடியிருக்கும் பாசறை தான் விடியாத திராவிட திராவிஷ மாடல்


என்றும் இந்தியன்
டிச 09, 2024 16:38

சட்டசபை பாராளுமன்றம் செல்வது எதற்கு?? மக்களுக்கு பயனளிக்கும் தீர்மானங்களை நிறைவேற்றவா இல்லை அங்கே போய் மிமிகிரி மலிவானவிலையில் கிடைக்கும் கான்டீன் சாப்பாட்டை தின்னவா???


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 09, 2024 16:20

கடமை ....... கண்ணியம் ..... கட்டுப்பாடு ..... ????


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை