உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இபிஎஸ் செல்லும் இடமெல்லாம் அமோக ஆதரவு: நயினார் பேட்டி

இபிஎஸ் செல்லும் இடமெல்லாம் அமோக ஆதரவு: நயினார் பேட்டி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் பிரசாரத்துக்கு செல்லும் இடமெல்லாம் அமோக ஆதரவு தென்படுகிறது என்று தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.மதுரையில் நயினார் நகேந்திரன் பேட்டி:அதிமுக-பாஜ கூட்டணியில் எந்த விரிசலும் இல்லை. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை டில்லியில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சந்தித்தது குறித்து எனக்கு தெரியாது. சந்தித்தாக அவர் கூறுகிறார். சந்திப்பதில் தவறு இல்லை.அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் செல்லுமிடமில்லாம் அவருக்கு அமோக ஆதரவு உள்ளது. அதிமுக-பாஜ உறவு நன்றாக உள்ளது.2026 சட்டமன்ற தேர்தலுக்கு பின் யார் ஐசியூக்கு செல்வார் என்று உதயநிதிக்கு தெரியும்.பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் தலைவர் நட்டா ஆகியோரிடம் நான் நற்பெயர் பெற்றுள்ளேன். அவர்கள் என் மீது தனிப்பட்ட முறையில் அன்பும் மதிப்பும் பாசமும் வைத்துள்ளனர். நெல்லை வந்திருந்த உள்துறை அமைச்சர் என் வீட்டுக்கே வந்திருந்தார்.அதனால் பதவி விலக வாய்ப்பில்லை. அவசியமும் இல்லை இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 30 )

தாமரை மலர்கிறது
செப் 11, 2025 19:48

இதற்கு நயினார் மீண்டும் அதிமுகவில் சேர்ந்துவிடலாம்.


Balamurugan
செப் 11, 2025 18:31

இந்த ஆளு பிஜேபி யை முடிக்காம விட மாட்டாரு போல. பிஜேபி யில் அதிமுக டீம்.


என்னத்த சொல்ல
செப் 11, 2025 18:29

EPS கூட்டத்தில், பிஜேபி கொடியை காணோம். நைனார் தான் விளக்கம் சொல்லணும்..


Balamurugan
செப் 11, 2025 16:17

நயினார் பிஜேபி யை வளர்கிறாரோ இல்லையோ அதிமுகவுக்கு நன்றாக கூஜா தூக்குகிறார். மானங்கெட்ட பயலுக. அரசியலில் நல்லவர்களை முன்னேற விடமாட்டார்கள் என்பதற்கு அண்ணாமலையே உதாரணம்.


Radhakrishnan Seetharaman
செப் 11, 2025 14:46

அ.தி.மு.க.வின் கொள்கைப் பரப்புச் செயலாளர் மற்றும் செய்தி தொடர்பாளர் அண்ணன் நயினார்


pakalavan
செப் 11, 2025 14:45

மக்கள் இந்த துரோகிய ஏத்துக்க மாட்டாங்க


Oviya Vijay
செப் 11, 2025 13:51

இவ்வாறெல்லாம் அதிகப்படியாக ஆசையை வளர்த்துக் கொள்ளாதீர்கள்... தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாளில் மக்கள் உங்கள் தலையில் பேரிடியை இறக்குவதற்குத் தயாராக இருக்கிறார்கள்...


Radhakrishnan Seetharaman
செப் 11, 2025 14:43

ஆம், இவர் தான் ஒட்டுமொத்த தமிழக மக்களின் பிரதிநிதி


vivek
செப் 11, 2025 14:54

இது வேற நடுவுல ஓவியமா ஓடுது. பாத்து லாரி வருது...இதயம் பத்திரம்


Raja k
செப் 11, 2025 12:56

200₹ + சாப்பாடு, இப்படிதான் நேற்று நடந்த ஆனைமலை, பொள்ளாச்சி, உடுமலை கூட்டங்களுக்கு ஆட்களை வண்டிகளில் ஏற்றி வந்தார்கள், ஆக தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களுக்கு மேல் இருக்கும்போதே 200₹ வேலை செய்கிறது தேர்தல் சமயத்தில் இம்முறை 2000₹ தாண்டி வழங்கபடும், ஆக அமோக ஆதரவு, ஒரு நாள் கூட்டத்துக்கு 1.5 கோடி வரை தலமையிடம் இருந்து வழங்கபடுகிறதாம், வீதி எங்கும் தோரணங்கள், கட் அவுட் கள், வண்ண விளக்குகள், மேடைகள், மேளதாளங்கள், எவ்வளவு காசு கொள்ளையடிச்சு வச்சு இருக்கீங்க, இப்படி வீதியில் இரைக்க


aaruthirumalai
செப் 11, 2025 12:39

பிள்ளையையும் கிள்ளிவிடுங்க தொட்டிலையும் ஆட்டி விடுங்க


S.L.Narasimman
செப் 11, 2025 12:24

அதிமுகவினர் கூட்டம் என்றால் குடும்பத்தினருடன் தானாக வந்த கூட்டம். தீமுக விலைக்குபோன ஊடகங்கள் தொல்லை காட்சிகள் சமூககேடு ஊடகங்கள் விடியலுக்கு பசனைபாடி எடப்பாடியார் கூட்டத்தை மறைப்பது மக்களுக்கு தெரிந்த விசயமே.


pakalavan
செப் 11, 2025 16:42

நீ உங்க குடும்பத்தை ஓசி ல அனுப்பு, அங்க இருக்கற எல்லாபயலும் காசுவாங்காம வரமாட்டான்,


சமீபத்திய செய்தி