உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எரிமலை மீது அமர்ந்திருக்கும் இ.பி.எஸ்.,: கம்யூ., பாலகிருஷ்ணன் நையாண்டி

எரிமலை மீது அமர்ந்திருக்கும் இ.பி.எஸ்.,: கம்யூ., பாலகிருஷ்ணன் நையாண்டி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

செஞ்சி: செஞ்சியில் நேற்று நடந்த மார்க்சிஸ்ட் கம்யூ., மாவட்ட மாநாட்டில் பங்கேற்ற அக்கட்சியின் மாநில செயலர் பாலகிருஷ்ணன் கூறியதாவது:தி.மு.க., கூட்டணி கட்சிகள் தி.மு.க.,வை தாங்கி பிடிக்கின்றன என்றும், கூட்டணியில் விரிசல் உள்ளதாகவும் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கூறுகிறார். ஜெ., இறந்த பின், அ.தி.மு.க.,வை ஒன்றாக அவரால் வைத்திருக்க முடியவில்லை. அனைவரும் ஒன்றாக சேர வேண்டும் என ஒரு அணியும், பா.ஜ.,வுடன் கூட்டணி சேர வேண்டும் என மற்றொரு அணியும், இப்படியே தொடரலாம் என ஒரு அணியும் மாறுபட்ட கருத்து தெரிவித்து வருகின்றன.இந்த மூன்று அணிகளின் போராட்டம் எப்போது வேண்டுமானாலும் எரிமலை போன்று வெடிக்கலாம். பழனிசாமி எரிமலை மீது உட்கார்ந்து இருக்கிறார். வெடித்தால் அவர் நிலைமை என்னவாகும் என்பது யாருக்கும் தெரியாது.நாட்டில் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்ந்துள்ளன. பெட்ரோல் விலை உலக நாடுகளில் 30 சதவீதம் குறைந்துவிட்டது; ஆனால், இந்தியாவில் குறையவில்லை. இது குறித்து லோக்சபாவில் அரசு விவாதிப்பதில்லை. இந்த பிரச்னை மக்களுக்கு தெரிந்து விடக்கூடாது என்பதற்காக மக்களை திசை திருப்ப, ஒரே நாடு; ஒரே தேர்தல் என்கின்றனர்.பெரும்பான்மை இல்லாத பா.ஜ., அரசால், இதற்கான மசோதாவை நிறைவேற்ற முடியாது என்பது பிரதமர் மோடிக்கு நன்றாக தெரியும். தி.மு.க., கூட்டணி சண்டை போட வேண்டும் என பழனிசாமி விரும்புகிறார். அவர் விருப்பத்தை நாங்கள் எப்படி நிறைவேற்ற முடியும்?தமிழகத்தில் தி.மு.க., ஆட்சி நடக்கிறது; கூட்டணி ஆட்சி இல்லை. நாங்கள் எங்கள் கருத்துகளை சுதந்திரமாக சொல்கிறோம். தமிழக மீனவர்களை இலங்கை அரசு கைது செய்வதை தடுக்க, மத்திய அரசு இரண்டு மணி நேரம் இலங்கையுடன் பேசினால், பிரச்னை முடிந்து விடும். இவ்வாறு பாலகிருஷ்ணன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

பேசும் தமிழன்
அக் 25, 2024 21:01

அவர் எரிமலை மீது அமர்ந்து இருக்கிறார்.... ஆனால் நீங்கள் அறிவாலய வாசலில் அமர்ந்து.... உண்டியல் மூலம் பிச்சை எடுக்கிறீர்கள் !!!


பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
அக் 25, 2024 13:58

ஆனாலும் தினமலர் நையாண்டி குறைவதே இல்லை. பாலகிருஷ்ணன் முகம் மலர சந்தோஷமாக சிரிக்கும் படத்தை போட்டு திமுகவுடன் கம்யூனிஸ்ட் பேரம் வெற்றிகரமாக முடிந்து விட்டதை அழகாக காட்டியுள்ளார்கள். அனைத்து பொருட்கள் விலை திமுக ஏற்றிவிட்டு இந்த மூன்று ஆண்டுகளில் பலமுறை அதை சொல்லியே விலைவாசி நிலவரத்திற்கு ஏற்ப பெட்டிகளை கூட்டி இருப்பார்கள். தவிர தீபாவளி போனஸாக சாம்சங் வேறு செம் லக்ஜுரியஸ் பெட்டி கொடுத்திருப்பார்கள். இவர்கள் காட்டில் எப்பொழுதும் மழை தான்


SUBBU,MADURAI
அக் 25, 2024 14:36

இந்த இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் திமுகவின் தயவால் இப்போதெல்லாம் சாலையில் உண்டியல் ஏந்தி பிச்சை எடுக்கும் நிலை இல்லாமல் போய்விட்டது. அவர்களுக்கும் உண்டியல்களுக்கும் இருக்கும் அந்த தொப்புள் கொடி உறவு என்பது திமுக என்கிற அட்சயப் பாத்திரம் கிடைத்ததன் பலனால் வழக்கொழிந்து போய்விட்டது.


பேசும் தமிழன்
அக் 25, 2024 09:06

இவனுக்கு பெட்டி வந்து விட்டது போல் தெரிகிறது... அதனால் தான் இப்படி கூவி கொண்டு இருக்கிறார்.


S. Gopalakrishnan
அக் 25, 2024 09:00

பெட்ரோல் விலை பற்றி பாராளுமன்றத்தில் விவாதிக்க பா. ஜ. க. அரசு தயாரில்லை. உங்கள் உறுப்பினர்கள் விவாதத்தை முன்னெடுக்க வேண்டியதுதா ? நீங்கள் வாயில் கொழுக்கட்டை வைத்து இருக்கிறார்களா ?


ngm
அக் 25, 2024 07:51

சாம்சங் மூடியது. அப்புறம் வாட் நெக்ஸ்ட் அடுத்த தேர்தலுக்கு எவ்ளோ கோடி நன்குடை?


Rpalnivelu
அக் 25, 2024 07:11

பண்டிகை சீசன் வந்தாச்சு. தூக்குங்க தகர உண்டியல. எல்லா தொழிற்சாலைகளுக்கும் போய் பிட்சை எடுக்கலாம் வாங்க காமரெட்ஸ். பிட்சை போடலேன்னா பேக்டரி முன் அமர்ந்து போராடலாம்


Mani . V
அக் 25, 2024 05:44

இனி கூடுதலாக கொஞ்சம் பொறை ஸாரி இடம் கிடைக்கும்.


vadivelu
அக் 25, 2024 07:18

போரை என்றால் எலும்பு துண்டா


Bala
அக் 25, 2024 05:07

திமுக போட்ட பண மலையில் உட்கார்ந்து இவர் பேசகிறார்.


கிஜன்
அக் 25, 2024 04:41

ஈபீஸ் ...விமர்சிக்காத விஷயங்களே இல்லை ... ......கட்டம் சரியில்ல ...


முக்கிய வீடியோ