உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்; தி.மு.க., வெற்றி!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்; தி.மு.க., வெற்றி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க., 90 ஆயிரம் ஒட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நாம் தமிழர் கட்சி டெபாசிட் இழந்தது.ஈரோடு கிழக்கு தொகுதியில், காங்., கட்சியைச் சேர்ந்த இளங்கோவன் காலமானதால் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அ.தி.மு.க., பா.ஜ., தே.மு.தி.க., கட்சிகள் தேர்தலை புறக்கணித்தன. காங்., தொகுதியை பறித்து, வி.சி.சந்திரகுமாரை வேட்பாளராக தி.மு.க., நிறுத்தியது. நா.த.க., சார்பில் சீதாலட்சுமி மற்றும் சுயேச்சைகள் என, 46 பேர் போட்டியிட்டனர். பிப்ரவரி 5ம் தேதி, அமைதியான முறையில் ஓட்டுப் பதிவு நடந்து முடிந்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=lf1hh515&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மொத்தம் 72% ஓட்டுக்கள் பதிவாகின. தேர்தலில் பதிவான ஓட்டுகளை எண்ணும் பணி இன்று காலை முதல் நடந்தது. பல்வேறு சுற்றுகளாக நடந்த இந்த ஓட்டு எண்ணிக்கையில் தி.மு.க., வேட்பாளர் வி.சி. சந்திரகுமார் தொடர்ந்து முன்னிலையில் இருந்தார். அவர், ஒட்டுமொத்தமாக 1,14,439 ஓட்டுகள் பெற்று வெற்றார். அவரை எதிர்த்து களமிறங்கிய நாம் தமிழர் கட்சியின் சீதாலட்சுமி 23, 810 ஓட்டுகள் டெபாசிட் இழந்தார். இதன் மூலம், சுமார் 90 ஆயிரம் ஓட்டுக்கள் வித்தியாசத்தில் சந்திரகுமார் வெற்றி பெற்றார். நோட்டாவுக்கு 6 ஆயிரத்திற்கும் அதிகமான ஓட்டுக்கள் விழுந்தன.

கடந்த தேர்தலில்...!

கடந்த 2023ம் ஆண்டு நடந்த இடைத் தேர்தலில் 74.79 சதவீத ஓட்டுகள் பதிவாகின. இளங்கோவன்- 1 லட்சத்து, 10,156 ஓட்டும், அ.தி.மு.க., தென்னரசு, 43,923 ஓட்டும் பெற்றனர். வெற்றி வித்தியாசம், 66,233 ஓட்டாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 49 )

திண்டுக்கல் சரவணன்
பிப் 14, 2025 12:14

நோட்டாவுக்கு கிடைத்த 3.94% தான் விஜய் கட்சிக்கு இருக்கும் செல்வாக்கு. இது வேண்டுமானால் வரும் தேர்தலில் 6 சதத்துக்கு போகலாம். 12 சதம் என்பதெல்லாம் அதீத கணக்கு.


AMLA ASOKAN
பிப் 09, 2025 09:12

என்ன கத்தினாலும், கதறினாலும் மக்கள் முட்டாள்களை தேர்தெடுக்கும் முட்டாள்கள் அல்ல. மக்களின் விருப்பமே ஜனநாயகம். தேர்தல் முடிந்த பின் விரக்தி, வெறுப்பு விமர்சனங்களால் எவ்வித பயனுமில்லை.


guna
பிப் 09, 2025 08:50

சீமான் சிங்கிள்ல நின்னார்.. திராவிட செம்புகள் கூட்டமா நின்னு ஒட்டுக் லஞ்சம் கொடுத்து பெற்ற திருட்டு வெற்றி என்று தமிழக மக்கள் அனைவரும் அறிவர்....ஹி...ஹி


RAAJ68
பிப் 09, 2025 01:36

இந்த தொகுதி ஏற்கனவே இரண்டு பேர்களை விழுங்கி விட்டது. இவராவது நீடூழி வாழ்க என்று வாழ்த்துங்கள்.


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
பிப் 08, 2025 23:29

ஈரோடு கிழக்கு வாக்காளர்கள் 2,27,547 இதில் திமுக கூட்டணிக்கு கிடைத்த வாக்குகள் 1,14,439 இதிலிருந்து தெரிவது என்னவென்றால்.... மீதமுள்ள 1,13,108 பேர் நேர்மையோடும், நானயத்தோடும், பணத்திற்கும் இலவசத்திற்கும் அலையாத மானமுள்ள மக்கள் இருக்கிறார்கள் என்று பெருமை பட்டுக்கொள்வோம்....!!!


Arumugam
பிப் 08, 2025 23:24

அட வெட்கங்கெட்டவைங்களா இதுக்கு எதுக்குடா ... வெள்ளையும் சொல்லையுமா... திரிகிறீர்கள்....


rasaa
பிப் 08, 2025 22:53

ஈரோடு மக்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். 3 முறை வருமானம். மீதியிருக்கும் மாதங்களில் இன்னும் எவ்வளவு வருமானம் கிட்டுமோ?


rasaa
பிப் 08, 2025 22:45

உங்களுக்காக வாக்களித்த 23810 பேரும் ஒரு தாய், தகப்பனுக்கு பிறந்த உண்மையான தமிழர்கள். மற்ற ஓட்டுக்கள் ராமசாமி வழியை கடைபிடித்து வந்தவர்கள் 21ம் பக்கம் உட்பட.


RAJ
பிப் 08, 2025 22:26

அண்ணண் விஜய்காந்தின் நம்பிக்கை துரோகி..


T.sthivinayagam
பிப் 08, 2025 22:21

திராவிட மரபனு வாக்குகள் சிதறாது என்று நிருபித்த இடை தேர்தல் வெற்றி என்று மக்கள் நம்புகிறார்கள்


புதிய வீடியோ